ஸ்பெஷல் 1
Published:Updated:

பொயட்டிக் பொக்கிஷங்கள் !

உ.அருண்குமார், மோ.கிஷோர்குமார் படங்கள்: பா.காளிமுத்து, வீ.சிவக்குமார்

##~##

''நம்ம லைஃப்ல நம்மைக் கடந்து போற ஒவ்வொரு சின்ன விஷயமுமே நமக்கு முக்கியம்தான்!''னு பொயட்டிக்கா முன்னுரை கொடுத்து, சில 'பெட்டி’ பொருட்களை பொக்கிஷமா சேர்த்து வெச்சுருக்கிற காலேஜ் கேர்ள்ஸ் பேசறாங்க... பராக் பராக் பராக்!

கமான் கம்மல்!

திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவி ராஜலட்சுமிகிட்ட 120 ஜோடி தோடுகளும், 40 செட் வளையல்களும் இருக்கு! ''யெஸ்... நான் ஒரு ஃபேன்ஸி ஜுவல்ஸ் பேங்க்!''னு காதில்  கம்மல் ஆட சிரிக்கிறாங்க ராஜலட்சுமி.

''பத்து வயசு வரைக்கும் எனக்கு விதவிதமா கம்மல் போட்டு அழகு பார்த்தாங்க எங்கம்மா. அதுக்கு அப்புறம் அது என்னோட ஆசையா ஆயிடுச்சு. ரெண்டு ரூபாய் கம்மல்ல இருந்து, 300 ரூபாய் கம்மல் வரைக்கும் எங்கிட்ட கலெக்ஷன்ஸ் இருக்கு. ஃபேன்ஸி தோடுகள்ல ஹூக் டைப், பிரஸ்ஸிங் டைப், ஸ்க்ரூ  டைப்னு நிறைய வகைகள் இருந்தாலும், எனக்குப் பிடிச்சது ஹூக் டைப்தான். காலேஜ் கிளம்புற அவசரத்துல 'டக்’னு எடுத்து மாட்டிட்டு ஓடிடலாம்.

பொயட்டிக் பொக்கிஷங்கள் !

வளையல்கள்ல மெட்டல், பிளாஸ்டிக், எலாஸ்டிக்னு நிறைய வெரைட்டிகள் இருந்தாலும், என்னோட ஃபேவரைட்... கண்ணாடி வளையல்கள்தான். ஜல்ஜல்னு அது தர்ற மியூஸிக் சூப்பர்! பெரும்பாலும் கோல்டன் அண்ட் பிளாக்னு இந்த ரெண்டு கலர்ஸ்ல ஃபேன்ஸி அயிட்டங்கள் வாங்குவேன். மாசத்துக்கு 300 ரூபாய் என்னோட ஃபேன்ஸி ஃபீவருக்கு செலவாகிடும். உடனே திட்டாதீங்க... நான் தங்கமே போடறது இல்லைனு ஒரு கொள்கை முடிவுல இருக்கேன். லட்சம் ரூபாய்க்கு ஒரே ஒரு தங்க நகை வாங்கறதுக்கு, நூறு ரூபாய்க்கு விதவிதமா ஃபேன்ஸி அயிட்டம்ஸ் வாங்குறது சூப்பர் சாய்ஸ் இல்ல..?!''னு புது ரூட் சொன்னாங்க ராஜலட்சுமி.

பொயட்டிக் பொக்கிஷங்கள் !

நினைவுகளை சேமிப்போம்!

''நம் எதிர்காலத்துக்கு தேவைப்படுறதை சேர்த்து வைக்கிறது மட்டும்தான் சேமிப்பா? நம்மை கடந்த காலத்துக்கு அழைச்சுட்டுப் போற நினைவுகளை சேர்த்து வைக்கிறதும் சேமிப்புதான்!''

- ரசிக்க ரசிக்கப் பேசறாங்க தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீனுப்ரியா. பொண்ணு சேமிக்கிறது, பஸ் டிக்கெட்ஸ்!

பொயட்டிக் பொக்கிஷங்கள் !

''நான் ப்ளஸ் டூ முடிக்கிற வரைக்கும் ஸ்கூல் பஸ்லதான் போனேன். காலேஜுக்காக முதல் நாள் மினி பஸ்ல போனப்போ... கொஞ்சம் பயமா, பதற்றமா இருந்தது. ஒருவழியா மூணாவது ஸ்டாப்ல எங்க காலேஜ் வந்துட, பெருமூச்சோட இறங்கி வேகமா நடந்தேன். பஸ் கண்டக்டர், 'பாப்பா... ஏய் பாப்பா...’னு கூப்பிட, திரும்பிப் பார்த்தேன். 'டிக்கெட் எடுத்தாச்சா..?’னு கேட்க, அப்போதான் நான் டிக்கெட்டே எடுக்காம ஸ்டாப்ல இறங்கிட்டது ஸ்ட்ரைக் ஆச்சு. அப்படியே கண்டுக்காம வேகமா நடந்துட்டேன். அதிலிருந்து டிக்கெட் எடுக்கறதுல ரொம்ப கவனமா இருக்கிறதோட, அந்த டிக்கெட்களை சேமிக்கறதும் என் பழக்கமாயிடுச்சு. பிரைவேட் பஸ், கவர்ன்மென்ட் பஸ்னு ஒவ்வொரு டிக்கெட்டையும் ஒவ்வொரு மாதிரி மடிச்சு வைப்பேன். இப்போ பி.ஜி. படிப்பை ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கறதால பஸ் டிராவல்களை ரொம்பவே மிஸ் பண்றேன். இருந்தாலும், அந்த டிக்கெட்களை எல்லாம் எடுத்துப் பார்க்கும்போது, யூ.ஜி. காலேஜ் நினைவுகளும், பஸ் பயணங்களும் நினைவில் வரும். அது ஒரு அழகிய கனா காலம்!''னு சிரிக்கிற மீனுப்ரியா, ஹாரிபாட்டர் பிக்சர்ஸ், சாக்லேட் ரேப்பர்ஸ்னு இன்னும் பல கலெக்ஷன்ஸும் வெச் சுருக்காங்க!

பெட்டி நிறைய புத்தகம்!

''உன்னோட சிறந்த நண்பன், உன் புத்தகம்தான்னு சொல்லுவாங்க. அந்த வகையில பார்த்தா சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் எனக்கு எக்கச்சக்க ஃப்ரெண்ட்ஸ்!''

-புத்தகங்கள் சேர்த்து வைக்கிற பழக்கம் உள்ள லாவண்யா, மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி.

பொயட்டிக் பொக்கிஷங்கள் !

''என் அப்பாகிட்ட இருந்துதான் இந்தப் பழக்கத்தை நான் கத்துக்கிட்டேன். ஒன்பதாம் வகுப்புல இருந்து இப்போ இன்ஜீனியரிங் வரைக்கும் என்னோட அகடெமிக் புக்ஸ், கிளாஸ் வொர்க், ஹோம் வொர்க் நோட்ஸ் எல்லாத்தையும் சேர்த்து வெச்சுருக்கேன். படிப்புப் புத்தகங்களோட போட்டோகிராஃபி, கார்ட்டூன்ஸ், கதை, கவிதை, சுயசரிதை, ஆன்மிகம், வரலாறு, ஷெர்லாக் ஹோம்ஸ், ராஜேஷ்குமார்னு நூத்துக்கும் மேல் புத்தகங்கள் சேர்த்து வெச்சுருக்கேன். அலமாரியே ஃபுல் ஆனதால, 'பாரு... உன் புக்ஸ்தான் வீட்டை அடைச்சுக்கிட்டு இருக்கு!’னு ஒரு தடவை அம்மா திட்டினாங்க. எல்லா புக்ஸையும் அட்டைப் பெட்டிகள்ல போட்டு பேக் பண்ணி, பரண்ல போட்டுட்டேன். எங்கப்பா வந்தவொடன நான் அழுகையைப் போட, திரும்பவும் என் புத்தகங்களுக்கு அலமாரியை மீட்டுத் தந்தாங்க அப்பா.

'புக்ஸ் சரி... நோட்ஸ்லாம் எதுக்கு?’னு சிலர் கேட்கலாம். ப்ளஸ் ஒன் படிக்கிற என் தம்பி, பாடங்கள்ல ஏதாச்சும் டவுட்னா என்னோட ப்ளஸ் ஒன் கிளாஸ் நோட்ஸை எடுத்துப் பார்த்துப்பான். அரியர் எக்ஸாம் எழுதுற என் ஃப்ரெண்ட்ஸுக்கும், ஜூனியர் ஸ்டூடன்ட்ஸுக்கும் என் நோட்ஸ் பயன்படுது. நல்ல விஷயம்ல..?!''னு பெருமைப்பட்ட லாவண்யா,

''என்ன புக்ஸ் வேணும்னாலும் யாரும் எங்கிட்ட வாங்கிக்கலாம்... ஆனா, மறக்காம திருப்பிக் கொடுத்துடணும்!''னு கண்டிஷனோட முடிச்சாங்க.

ரைட் ரைட்!