Published:Updated:

ரப்பர் பெண் சபரிதா !

ஆ.அலெக்ஸ்பாண்டியன் படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

##~##

''எனக்கு அஞ்சு வயசு இருக்கும்போது இதயத் துடிப்பு நார்மலா இருப்பதைவிட அதிகமா இருந்துச்சு. 'யோகா செஞ்சா சரியாயிடும்'னு டாக்டர் சொல்ல, அப்படித்தான் அறிமுகமானது யோகா எனக்கு.

அதுக்கப்புறம் என் இதயத் துடிப்பு சீக்கிரமே சீராயிடுச்சு. இப்போ நான் யோகாவுல சர்வதேச சாம்பியன்!''

- அட்டகாசமாகச் சிரிக்கிறார் சபரிதா, கரூர் பரணி பார்க் பள்ளியின் ப்ளஸ் ஒன் மாணவி.

'யோகா சென்டர்ல நிறைய குழந்தைங்க இருப்பாங்க... அங்க போனா விளையாடலாம்ங்கிறதுதான் ஆரம்பத்துல என்னோட ஆர்வமா இருந்தது. ஆனா, யோகா போட்டிகளுக்குப் போக ஆரம்பிச்சப்போதான், பொழுதுபோக்குக்காக இல்ல... இது சாதிக்க வேண்டிய களம்னு புரிஞ்சுது. ஏழாவது வயசுலயே மாநில அளவிலான போட்டிகள்ல முதல் பரிசு வாங்கினேன். டிஸ்ட்ரிக்ட், ஸ்டேட், நேஷனல், இன்டர் நேஷனல்னு வெற்றிகள் தொடர்ந்துட்டு இருக்கு!

ரப்பர் பெண் சபரிதா !

வீட்ல இருக்கிறதைவிட, யோகா சென்டர்ல இருக்கிற நேரம்தான் அதிகம். தினமும் காலை, மாலைனு நாலு மணி நேரம் தாண்டியும் பயிற்சி எடுப்பேன். இதில் எனக்கு இவ்வளவு ஆர்வம் ஏற்பட, என் கோச் மாதவன் சார் முக்கியக் காரணம். பல சிரமமான ஆசனங்களை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் அவர் செய்யும்போது, அவரை எல்லாரும் ஆச்சர்யமாப் பேசுவாங்க. அதேபோல நம்மளயும் பேசணும்னு ஆசைப்பட்டு, பயிற்சிகள் எடுத்தேன். இப்போ பேசுறாங்க!'' என்று கண் சிமிட்டும் சபரிதா, யோகாவில் சிறப்பு ஆசனங்கள், ஆர்ட்டிஸ்டிக் பேர், ரிதமிக் பேர் என்று எல்லாப் பிரிவுகளிலும் பெஸ்ட் பெர்ஃபார்மர்.

ரப்பர் பெண் சபரிதா !

''கடைசியா, புதுச்சேரியில நடந்த இன்டர்நேஷனல் மீட்ல 'அண்டர் 19’ பிரிவுல நான் சாம்பியன் ஆனேன். அப்புறம் எல்லா வயசுக்காரங்களும் மோதின 'ஓபன் ரவுண்ட்’லயும் கலந்துக்கிட்டேன். சீனா, ரஷ்யா, ஹாங்காங்க்னு ஹெவி காம்பெடிஷன். அதுலயும் சபரிதாதான் 'சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ்!'' என்பவர், அதைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடந்த போட்டிகளிலும் தங்கம், வெள்ளி வென்று வந்திருக்கிறார். ஆகக்கூடி இதுவரை மாநில அளவில் 15 தங்கம், தேசிய அளவில் 10 தங்கம், தெற்கு ஆசிய நாடுகள் அளவில் 2 தங்கம், சர்வதேச அளவில் ஒரு தங்கம் என்று வெற்றிகள் குவித்துள்ளார்.

ரப்பர் பெண் சபரிதா !

''யோகா சாம்பியன் மட்டுமில்ல... இப்போ நான் சின்னப் பசங்களுக்கு கிளாஸ் எடுக்கிற யோகா டீச்சரும்கூட. யோகாவில் நேச்சுரோபதி படிச்சு யோகா டாக்டர் ஆகணும்ங்கிறதுதான் என் ஆசை. இப்போவே என் ஃப்ரெண்ட்ஸ், பக்கத்து வீட்டு ஆன்ட்டிஸ்க்கு எல்லாம் இடுப்பு வலி, கை, கால் வலி நீங்க யோகா சொல்லிக் கொடுத்து குணம் பண்ணிடறேன் தெரியுமா..?''

- பெருமையில் பூரிக்கிறார் சபரிதா!

அடுத்த கட்டுரைக்கு