வந்தாச்சு... 'ஹேப்பி டமிள் நியூ இயர்'! இதற்கு நம்மால் ஆன உதவியாக... 'பீட்டர் கேர்ள்ஸ் வெர்சஸ் பச்சை தமிழச்சிகள்’ ரெண்டு குழுவா பிரிஞ்சு நின்னு மோதற காரசார 'கருத்துக் குத்து'க்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, சவீதா இன்ஜினீயரிங் காலேஜ்ல பொண்ணுங்களை வரவழைச்சு ஏற்பாடு செய்தோம்.

ஆர்த்தி, அபிராமி, ஆதிரா, ஆர்.அபிராமி அடங்கிய குரூப் 1 'இங்கிலீஷ்’-க்கு கொடி பிடிக்க...

சுகன்யா, சங்கீதா, ஜனனி, பிருந்தா அடங்கிய குரூப் 2, தமிழுக்கு கொடி ஏத்தினாங்க.

இனி, மோதல் ஸ்டார்ட்ஸ்!

குரூப் 1: ''இங்கிலீஷ் இஸ் த வேர்ல்டு லாங்வேஜ்... யூ நோ..?''

குரூப் 2: ''ஸ்ஸ்ஸ்ஸப்பா... மவுன்ட்பேட்டன் பேத்திகளா... தமிழ்ல பேசுங்க தாயிகளா!''

குரூப் 1: ''இங்கிலீஷ்தான் உலகப் பொதுமொழி. தமிழை மட்டும் படிச்சா, தமிழ்நாட்டு பார்டரைத் தாண்டினாலே திண்டாட்டமா போயிடும். அவ்வளவு ஏன்... தமிழ்நாட்டுலயே இங்கிலீஷ்தான் அன்அஃபீஷியலா அஃபீஷியல் லாங்வேஜ்!''

குரூப் 2: ''மொதல்ல ஒண்ணை புரிஞ்சுக்கோங்க... ஆங்கிலம்ங்கிறது தமிழ், ஹிந்தி, ஃப்ரெஞ்சு மாதிரி ஒரு மொழி. அது தொடர்பு கொள்றதுக்கு உதவும். ஆனா, அதுவே அறிவு அள்ளி வழங்கற அமுதசுரபினு நினைக்கறது தப்பு. என்னவோ இங்கிலீஷ்ல பேசிட்டாலே, அறிவாளி இமேஜ் கிடைச்சுடும்ங்கிற மூடநம் பிக்கை பலர்கிட்டயும் இருக்கு. அறிவுக்கும் அலட்டலுக்குமான வித்தியாசத்தை உணருங்க!''

குரூப் 1: ''எல்லா எம்.என்.சி கம்பெனிகள்லயும் ஆங்கிலம் பேசுற எம்ப்ளாயிகளைத்தான் எதிர்பார்க்கறாங்க. அங்க போய் 'வணக்கம்’னு சொன்னா, தொப்பி இல்லாமலே கோமாளி ஆக வேண்டியதுதான்.''

குரூப் 2: ''வேலை, தகவல் தொடர்பு காரணங்களுக்காக ஆங்கிலத்துல பேசலாம்... தப்பில்ல. ஆனா, அலுவலகத்தை விட்டு வெளிய வந்த பிறகும் இங்கிலீஷ்லயே பேசறீங்க, நடக்குறீங்க, படுக்குறீங்க..?!''

குரூப் 1: ''அது வேணும்னே செய்றது இல்ல... தானா வர்றது. இன்ஃபேக்ட், தமிழைவிட இங்கிலீஷ்ல பேசுறதுதான் எங்களுக்கு கம்ஃபர்டபிளா இருக்கு.''

குரூப் 2: ''தமிழ்க் குடும்பத்துல பிறந்து, தமிழையே தாய்மொழியா பேசி வளர்ந்த பொண்ணு, 18 வயசுக்கு அப்புறம் திடீர்னு தமிழ் பேச வராதுங்கிறது, நல்ல தமாஷ். எல்லாம் செம ஸீன்!

சிங்கப்பூர், மலேசியாவுல இருக்குற தமிழர்கள் எல்லாம் தமிழ்ல பேசறத பெருமையா நினைக்கறாங்க. ஆனா, உங்கள மாதிரி ஆளுங்க தமிழ்நாட்டுல இருந்துட்டே தமிழை தாழ்வா நினைக்கறாங்க. ஆட்டோக்காரர், கடைக்காரர், கண்டக்டர்னு எதிர்ப்படற வங்ககிட்ட எல்லாம்... தமிழே தெரியாத மாதிரி ஒரு தமிழ்ல நீங்கள்லாம் பேசுவீங்களே... அய்யகோ!''

குரூப் 1: ''சரி... ஒரு கேள்வி கேட்குறோம் பதில் சொல்லுங்க. தினமும் காலேஜுக்கு எப்படிப் போவீங்க..?''

குரூப் 2 : ''பஸ்ல.''

குரூப் 1: ''எந்தத் தமிழ் அகராதியில 'பஸ்’னு ஒரு வார்த்தை இருக்குனு தெரிஞ்சுக்கலாமா..? தமிழ் முழக்கம் போடுற நீங்க, 'பேருந்து’னு சொல்லியிருக்க வேண்டியதானே..?''

குரூப் 2 : ''நடைமுறையில பழகிப்போன ஒரு சில ஆங்கில வார்த்தைகளைத் தவிர்க்க முடியாது. தவிர, தேவைக்குப் பேசுறதுக்கும், பீட்டர் விடுறதுக்கும் வித்தியாசம் இருக்கு. இங்கிலீஷ் தெரியாதவங்ககிட்ட இங்கிலீஷ்ல பேசி நம்ம 'அறிவை’ காமிக்கிறதைவிட அநாகரிகம் வேற எதுவும் இல்ல''.

குரூப் 1: ''தி இஸ் ரப்பிஷ். நம்மைப் பார்த்து மத்தவங்க இம்ப்ரஸ் ஆகணும்னுனா... அதுக்கு ஈஸி வே, இங்கிலீஷ்தான்!''

குரூப் 2: ''இப்படித்தான் தப்பு தப்பா புரிஞ்சு வெச்சுருக்கீங்க. ஆஸ்கர் வாங்கும்போது அந்த உலக அரங்கில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே’னு தமிழ்ல சொல்றார் ஏ.ஆர்.ரஹ்மான். நாடாளுமன்றத்துல பட்ஜெட் தாக்கல் செய்யும்போது திருக்குறள் சொல்லி ஆரம்பிக்கிறார் ப.சிதம்பரம். தமிழ் வழிக் கல்வி படிச்ச அணு விஞ்ஞானி அப்துல் கலாம், இந்தியாவோட குடியரசுத் தலைவர் பதவியையும் அலங்கரிச்சார். அதனால, இங்கிலீஷ்தான் மரியாதை வாங்கித் தரும்னு நினைக்கிறது... உங்க திறமை மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாததைத்தான் காட்டுது.''

குரூப் 1: ''இதோ... இப்படித் தர்க்கம் பண்ண வேணும்னா தமிழ் யூஸ் ஆகலாம். பிராக்டிகலா இங்கிலீஷ்தான் ஸ்மார்ட் லாங்வேஜ்.''

குரூப் 2: ''தமிழ்... தேன் மொழி. பீட்ஸா பார்ட்டிங்களுக்கு அது புரியாது.''

குரூப் 1: ''நோ ஹார்ம் தமிழச்சிங்களா! எனிவே, சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!''னு கைநீட்ட, சட்டுனு ரெண்டு குரூப்பும் ஐஸ் மாதிரி உருக ஆரம்பிச்சுட்டாங்க!