Published:Updated:

சிலிர்க்க வைக்கும் சிறுதிளிகள் !

பூ.கொ.சரவணன்

சிலிர்க்க வைக்கும் சிறுதிளிகள் !

பூ.கொ.சரவணன்

Published:Updated:
##~##

''பல நல்ல மனங்களோட கூட்டு முயற்சியால நடந்த அற்புதம் இது!''

- கண்கள் மூடி நன்றி கூறு கிறார் அண்ணா பல்கலைக்கழக நான்காம் ஆண்டு இ.சி.இ. மாணவி சைதன்யா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்லூரித் தோழர்களுடன் இணைந்து இவர் தொடங்கிய 'சிறுதுளிகள்’ எனும் அமைப்பு, வறுமையில் வாடும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. கூடவே, ஹெச்.ஐ.வி. நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவர்களின் படிப்புக்கு உதவி... என 'சிறுதுளிகள்’ செய்துவரும் சேவை மேலும் மேலும் விரிகிறது!

சிலிர்க்க வைக்கும் சிறுதிளிகள் !

'எந்தப் புள்ளியில் ஆரம்பித்தது இந்த நன்முயற்சி..?’

''பொதுவா காலேஜ்னாலே... பிறந்த நாள் வந்தா, பாஸ் பண் ணினா, அரியர் வாங்கினானு எல்லாத்துக்கும் கண்டிப்பா செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்... தோஸ்து கூட்டத்துக்குப் பார்ட்டி வைக்கிறது. அப்படித் தான் ஒரு நாள் என் பிறந்த நாள் பார்ட்டியும் சில ஆயிரங் களை முழுங்கிடுச்சு. ஆனா, பெரும்பாலான உணவு வகைகள் வீணாகியிருந்ததைப் பார்த்தப்போ, 'இந்த வெட்டி விருந்துக்கு, ஏதாச்சும் ஆக்கப்பூர்வமா பண்ணியிருக்கலாமே?’னு வருத்தமா இருந்துச்சு. ஃப்ரெண்ட்ஸ்குள்ள இதை பேசிட்டு இருந்த சமயத்துல, எங்க டீன் சொன்ன ஒரு விஷயமும் எங்களை உத்வேகப்படுத்துச்சு.

எங்க காலேஜுக்கு 'வருகைப் பேராசிரியர்'னு வந்துட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சார், கால்ல செருப்புக்கூட போடாம காலேஜுக்கு வந்த ஏழை மாணவரைப் பார்த்துட்டு, அவரோட கல்விச் செலவுக்கு தன்னோட சம்பளத்தை அப்படியே கொடுத்து உதவினார். 'அந்த உதவும் மனப்பான்மை எப்பவும் நம்மகிட்ட இருக்கணும். குறைந்தபட்சம்... கஷ்டப்படுற சகமாணவர்களுக் காச்சும் உதவலாம்’னு எங்க டீன் சொல்ல, நானும் மணிவண்ணனும் ('படிப்பே ஒரு போராட்ட மாக இருக்கிறது' என்று சொல்லி சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோன அண்ணா பல்கலைக்கழக இ.சி.இ டிப்பார்ட்மென்ட் மாணவர்) சேர்ந்து உருவாக்கின ஐடியாவால 'சிறுதுளிகள்’ உருவாச்சு'' என்று சைதன்யா டீடெய்ல் இன்ட்ரோ கொடுக்க, தொடர்ந்தார், இந்த அமைப்பில் இருக்கும் கயல்விழி.

சிலிர்க்க வைக்கும் சிறுதிளிகள் !

''தினமும் கேன்டீன்லயும், அப்பப்போ ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டினும் சொல்லி செலவு பண்ற தொகையில ஒரு பங்கை எங்க அமைப்புக்கு கொடுங்க. இந்தத் தொகை. நம்ம கூட படிக்கிற மாணவர்களை கை தூக்கிவிடப் பயன்படுத்தப்படும்னு சொல்லி, ஒவ்வொரு வகுப்புலயும் வாலன்டியர்ஸ் வெச்சு பணம் சேகரிச்சோம். கல்லூரியில் எங்க அமைப்பு பெயர்ல வங்கிக் கணக்கை ஆரம்பிச்சு, அதன் நடவடிக்கைகளை முதல்வர், மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு மூலமா கண்காணிப்பதுனு முறைப்படுத்தினோம். பணம் கொடுக்கறவங்களோட விவரங்களை எங்க வெப்சைட்ல (ஷ்ஷ்ஷ்.sவீக்ஷீutலீuறீவீரீணீறீ.நீஷீனீ) வெளியிட ஆரம்பிச்சோம். இந்த வெளிப்படைத் தன்மை, எங்க மேல நம்பிக்கையை ஏற்படுத்தவே... பத்து ரூபாயில் இருந்து, பல ஆயிரங்கள் வரை மாணவர்கள் கொடுத்து உதவினாங்க. முதல் முறையே 77 ஆயிரம் ரூபாய்க்கும் மேல சேர, எங்க நண்பர்களோட பங்களிப்பு பெருமைப்பட வெச்சுது'' என்றார் கயல்விழி.

அமைப்பின் மற்றொரு உறுப்பினரான மகாலஷ்மி, ''யாருக்கு எல்லாம் படிக்கறதுக்கு, மருத்துவச் செலவுக்கு, பிற அத்தியாவசியச் செலவுக்கு பணம் தேவையோ, அவங்க எல்லாம் இந்தப் பெட்டியில் விண்ணப்பம் இடலாம்’னு கல்லூரியின் முக்கியமான இடங்கள்ல பெட்டிகளை வெச்சோம். தக்க சான்று களோடு விண்ணப்பிச்ச பலருக்கும் உதவினோம். கூடவே, எங்க காலேஜ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாக னங்கள் வழங்கினோம். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஆதரவு தரும் 'சமர்ப்பணா’ங்கிற அமைப்புக்கும் உதவி னோம். ஏழை பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வேறு எழுதுபொருட்களையும் வழங்கினோம்.

சிலிர்க்க வைக்கும் சிறுதிளிகள் !

அடுத்த சுற்று நிதி திரட்டுறதுக்கு முன்னாடி, சென்ற முறை சேர்ந்த பணத்தின் மூலம் யார் யாரெல்லாம் பயனடைஞ்சாங் கங்கிற விவரப் பட்டியலை, ஒவ்வொரு வகுப் புலயும் ஒட்டினோம். அது மாணவர்களுக்கு இன்னும் உத்வேகத்தைக் கொடுக்க, ரெண்டே மாசத்துல ஒரு லட்ச ரூபாய்க்கு மேல நிதி சேர்ந்துச்சு. அதையும் முன்பு மாதிரியே செலவு செய்தது போக, இன்னும் பல உதவிகளையும் செய்தோம்... செய்துட்டு இருக்கோம்'' என்று தங்களின் செயல்பாட்டை எடுத்து வைத்தார்.

நிறைவாக பேசிய சைதன்யா, ''எங்க அமைப்பு மூலமா பயன் பெற்றவங்க எல்லாரும் சொன்ன நன்றிகள், இதுல ஈடுபட்டிருக்கற வாலண்டியர்களை இன்னும் உற்சாகப்படுத்தியிருக்கு. எங்க காலேஜ்ல இனி யாருக்கும் படிப்புக்குக் குறுக்கே பணம் ஒரு பிரச்னையா இருக்கக்கூடாது. அதை 'சிறுதுளிகள்’ பார்த்துக்கும்!''

- பாஸிட்டிவ் எனர்ஜி பொங்கச் சொன்னார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism