ஸ்டாம்ப்ஸ், நாணயங்கள் என்று சேமிப் பவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், எஸ்.ஆர்.எம்., பல் மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவி ஆசியா சேமிப்பது, எரேஸர்களை! ஆம், இதுவரை 3,500-க்கும் மேற்பட்ட எரேஸர் களை சேமித்து வைத்திருக்கும் இவரிடம், ''இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?!’ என்றால், சுவாரஸ்யமாக ஃப்ளாஷ்பேக் சுழற்றுகிறார்!

''சின்ன வயசுல... எழுதுறேனோ இல்லையோ, அழிக்கறதுக்காக எரேஸர்களை மட்டும் வாங்கிட்டே இருப்பேன். ஃபிஃப்த் ஸ்டாண்டர்டு படிக்கும்போது, எரேஸர் கலெக்ட் செய்ற பழக்கமா அது ஒரு ஒழுங்குக்கு வந்துடுச்சு. பேஸ்ட் - பிரஷ் வடிவுல இருந்த, அஞ்சு ரூபாய்க்கு வாங்கின எரேஸர்தான் என் கலெக்ஷனுக்குப் பிள்ளையார் சுழி.

சென்னையில இருக்கிற பெரும்பாலான ஸ்டேஷனரி கடைகளுக்கும் நான் ரெகுலர் கஸ்டமர். 'புதுசா ஏதாவது எரேஸர் வந்தா கால் பண்ணுங்க...’னு என் போன் நம்பரையே கொடுத்துட்டு வந்துடுவேன்.

சென்னையில மட்டுமில்ல... அடிக்கடி வெளிநாடு போவேன்ங்கிறதால அங்கயும் எரேஸர் ஷாப்பிங்தான். ஒருமுறை ஹாங்காங்ல அக்கா வீட்டுக்குப் போயிட்டுத் திரும்பினப்போ, ஏர்போர்ட்ல ஒரு சூப்பர் எரேஸரைப் பார்த்துட்டு, அதை வாங்கப் போயிட்டேன். ஃபிளைட் கிளம்புற கடைசி நிமிஷத்துல ஓடி வந்த எனக்கு... எங்கக்கா கொடுத்த டோஸை மறக்கவே முடியாது.

குடும்பத்தோட கன்னியாகுமரி போனப்போ, அங்கே 'ரப்பர் ஃபேக்டரி’னு போர்டு பார்த்துட்டு, அடம்பிடிச்சு காரை நிறுத்தி, எல்லாரையும் உள்ளே கூட்டிட்டுப் போனேன். பார்த்தா, அது டயர் தயாரிக்கிற கம்பெனி. எனக்காக எங்க குடும்பமே அன்னிக்கு வாங்கின பல்பை மறக்க முடியாது. 'பி.டி.எஸ் படிக்கிற பொண்ணு மாதிரியா நடந்துக்கிற..? உங்கிட்ட இருக்கிற எரேஸரை வெச்சு உலகத்தையே அழிச்சுடலாம் போல!’னு ஃப்ரெண்ட்ஸ் கலாய்ப்பாங்க. எதையும் கண்டுக்க மாட்டேன். நமக்கு கடமையே கண்ணாயிரம்!

ஒரு ரூபாய்ல இருந்து, 30 டாலர் வரை எல்லா விலையிலயும் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள எரேஸர்கள் என்கிட்ட இருக்கு. இதுல லிம்கா, கின்னஸ் ரெக்கார்ட் பண்ணனும்ங்கிறதுதான் என்னோட லட்சியம்'' என்ற ஆசியா,

''ஒரு ஹேப்பி நியூஸ் தெரியுமா... இப்போ என் பெரிய அக்கா பொண்ணு ஜூலைகா ஓப்ரினும் எரேஸர் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கா!''

- கைநிறைய எரேஸர்கள் அள்ளிச் சிரிக்கிறார்!