''பட்ட மேற்படிப்பை (Post Graduate) சோஷியல் ஒர்க், சோஷியாலஜி அல்லது சைக்காலஜி தொடர்பாக படிக்க விரும்புகிறேன். இந்த வகையில் ஏதேனும் புதிய பட்ட மேற்படிப்பைப் பரிந்துரைக்க முடியுமா?''

- கனகவிலாசம், ஆரணி

ஜோசப் தியாகராஜன், உதவிப் பேராசிரியர், ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், ஸ்ரீபெரும்புதூர்:

''லைஃப் ஸ்கில் எஜு கேஷன் (Life skill Education) எனும் பிரிவில், எம்.ஏ பட்ட மேற்படிப்பு, உங்களுக்குப் பரிந்துரைக்கத் தக்கது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சோஷியல் ஒர்க், சோஷியாலஜி படிப்புகளுக்கு இணை யானது இது.

எந்த ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்களும், செகண்ட் கிளாஸில் தேர்ச்சி அடைந்திருந்தாலும் இந்த பிஜி டிகிரிக்கு தகுதி பெறுகிறார்கள். மத்திய அரசின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் தன்னாட்சி கல்வி நிறுவனத்தில் இந்தப் புதிய படிப்பு வழங்கப்படுகிறது. இதே பாடத்திட்டமானது, டிப்ளமோவாக இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக இக்கல்வி ஆண்டு முதல் தொலைநிலைக் கல்வியாகவும் வழங்கப்படுகிறது

வளரிளம் பருவ மாணவர்களுக்கு உடல், மனம், சமூகம் சார்ந்த வாழ்வியல் திறன்களை மேம்படுத்தும் பாடங்களை உள்ளடக்கிய இந்த பட்ட மேற்படிப்பு, 2008-ம் ஆண்டு முதல் அறிமுகமாகியிருக்கிறது. இதை முடித்தவர்கள் பள்ளி, கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வாழ்க்கைத்திறன் பயிற்றுநராக பணிபுரியலாம். பல்வேறு என்.ஜி.ஓ-க்கள் துவங்கி... சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப் போன்ற அமைப்புகளின் திட்டங்கள் வரை களங்கள் காத்திருக்கின்றன.

இளைஞர் மேம்பாட்டு அமைச்சகத்தின் 'நேரு யுவகேந்திரா' அமைப்புகளின் திட்ட அலுவலராக பணிபுரியவும் வாய்ப்பு கிடைக்கும். 5 ஆண்டு பணி அனுபவத்துக்குப் பின், ஆலோசகராகவும் தங்கள் பணித்தரத்தை உயர்த்திக் கொள்ளலாம். மேற்கொண்டு பி.ஹெச்டி., முடித்தால்... கல்லூரிகளில் சோஷியல் வொர்க், சோஷியாலஜி, சைக்காலஜி துறை ஆசிரியப் பணியிலும் சேர முடியும்.''

அடிக்கடி இருமல்... ஆஸ்துமாவின் ஆரம்பமா?

''அடிக்கடி இருமல், மூச்சு இரைப்பு, நெஞ்சு இறுக்கம், அவ்வப்போது சளி தொந்தரவுகளால் 46 வயதாகும் என் அம்மா அவதிப்படுகிறார். ஆஸ்துமாவாக இருக்கலாம் என்ற அனுமானத்தில்... மாற்று மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். 22 வயதாகும் எனக்கும், கடந்த சிலமாதங்களாக இந்த அறிகுறிகள் தென்படுகின்றன. எங்கள் வீடு சிமென்ட் தொழிற்சாலை பகுதியில் அமைந்துள்ளது. அதனால் ஏதேனும் அலர்ஜியாக இருக்குமா, அல்லது சீரியசான வேறு பிரச்னையாக இருக்குமா என்ற குழப்பத்தில் தவிக்கிறேன்.... விளக்கம் கிடைக்குமா?''

- பா.கீதாராணி, அரியலூர்

டாக்டர் மஞ்சு, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

''நீங்கள் தந்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் உங்களுடையது நீடித்த நுரையீரல் மூச்சுக்குழாய் அடைப்பு நோயாக (COPD- Chronic Obstructive Pulmonary Disease) இருக்க வாய்ப்புள்ளது. காற்றோட்டத்துக்கு வாய்ப்பில்லாத வீடு, தூசு, புகை மத்தியிலான வாழ்க்கை, சமையல் புகை, வீட்டு ஆண்களின் புகைப்பழக்கம், சிமென்ட் மற்றும் வேதிப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலை பகுதியில் பணிபுரிதல் மற்றும் குடியிருத்தல்... இதுபோன்ற காரணங்களால், மேற்படி மூச்சுக்குழாய் அடைப்பு நோய் அதிகம் பாதிக்கிறது.

ஆஸ்துமா, இன்னபிற சளி தொடர்பான நோய்களாகக் கருதி, சுயமருத்துவத்தில் இறங்குவதும், அலட்சியம் காட்டுவதும் நீடித்த பாதிப்புகளை தரும். பொதுவாக நாற்பது வயதை கடந்தவர்களையே இந்தத் தொந்தரவு அதிகம் பீடிக்கும் என்றபோதும், நீங்கள் இருவருமே ஒரு நுரையீரல் நோய் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். முழுமையான நிவாரணத்துக்கு வாய்ப்புகள் குறைவு. என்றபோதும், பாதிப்புகளை குறைத்து வாழ்க்கையை இயல்பாக எதிர்கொள்ள அன்றாட மருந்துகளில் துவங்கி இன்ஹேலர்கள் வரை சுலப முறைகள் உள்ளன.

மருத்துவ சிகிச்சைகளுக்கு இணையாக உங்களைச் சுற்றி தூய்மையாக வைத்துக் கொள்வதும் முக்கியம். வீடு முழுக்க தூய்மை பேணும் பெண்கள்... தாங்கள் அதிகம் புழங்கும் சமையலறைத் தூய்மைக்கு அதிகம் அக்கறை காட்டுவதில்லை. ஜன்னல்கள் உதவியுடனும், எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் போன்றவற்றை நிறுவியும் சமையலறையை காற்றோட்டமாக வைத்திருத்தல் அவசியம். கெரசின், விறகு அடுப்பு போன்றவற்றில் புழங்குவதாக இருந்தால்... இருமடங்கு கவனம் தேவை.

சமையலறை மட்டுமல்லாது, பூஜை அறைக்கான சாம்பிராணி, ஊதுபத்தி புகைகளும் வீட்டில் அளவாக இருக்க வேண்டும். வீட்டின் அமைவிடம் உள்ளடங்கி இருப்பதும், அளவில் சிறியதாக இருக்கும்போதும் பாதிப்புகள் பன்மடங்காக உயர வாய்ப்புகள் உண்டு.

உணவில் மசாலா பொருட்களை குறைத்துக் கொள்ளவேண்டும். புரதச்சத்து அதிகமுள்ள பால், சோயா, பருப்பு ஆகாரங்களை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். ஒரேயடியாக உண்ணுவதை தவிர்த்து... மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக எடுத்துக் கொள்வதும் பயன்தரும். அதிக இறுக்கமான உடைகளைத் தவிர்க்கலாம், மூச்சுப் பயிற்சி பழகலாம்.

இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால்... முன்னெச்சரிக்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள வேண்டும்.''