Published:Updated:

java -வைக் கரைச்சுக் குடிக்கறோம்ல..!

பிளேஸ்மென்ட் பரபர...மோ.கிஷோர் குமார் படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.எல்.சிதம்பரம், செ.சிவபாலன், ச.லெட்சுமிகாந்த்

java -வைக் கரைச்சுக் குடிக்கறோம்ல..!

பிளேஸ்மென்ட் பரபர...மோ.கிஷோர் குமார் படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.எல்.சிதம்பரம், செ.சிவபாலன், ச.லெட்சுமிகாந்த்

Published:Updated:

''காலேஜ் டிகிரி முடிக்கறதுக்குள்ள, கேம்பஸ் இன்டர்வ்யூல வேலை வாங்கியாச்சு! இனி எல்லாம் சுகம்தானே...?!''

- ஃபைனல் இயர் ஃபைனல் எக்ஸாம்ஸ் எழுதிட்டு, கம்பெனி கால் லெட்டருக்காக காத்திருக்கிற சில கேர்ள்ஸ்கிட்ட கேட்டோம்.

''நோ நோ! இனிதான் பொறுப்புகள் கூடும். வேலைக்கு சேர்றதுக்கு இடையில் இருக்கிற இந்த நாலஞ்சு மாசத்துல, ஒரு எம்ப்ளாயிக்கான தகுதிகளுக்காக எங்களைத் தயார்படுத்திக்கிட்டு இருக்கோம்!''னு பொறுப்பா பேசின பொண்ணுங்க, அதை நம்மகிட்டயும் பகிர்ந்துக்கிட்டாங்க!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்ரா, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, மதுரை: ''நான் ஐ.டி ஸ்டூடன்ட். எனக்குப் புரோக்ராமிங்ல இன்ட்ரஸ்ட் அதிகம். கேம்பஸ் இன்டர்வ்யூல அதைப் பத்தியே கேள்விகள் கேட்டதால, டி.சி.எஸ்-ல ஈஸியா செலக்ட் ஆயிட்டேன். ஜூன் 4-ம் தேதி ஃபைனல் எக்ஸாம்ஸ் எழுதினதோட, காலேஜுக்கு 'பை பை’ சொல்லியாச்சு. இனி, கம்பெனியில் சேரத் தயாராகணும்.

java -வைக் கரைச்சுக் குடிக்கறோம்ல..!

ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து, சின்ன லெவல்ல புராஜெக்ட் சென்டர் மாதிரி ஆரம்பிச்சோம். சின்னச் சின்ன நிறுவனங்களுக்கு வெப்சைட் உருவாக்கித் தர்றது, அவங்க கொடுக்கற புராஜெக்ட்டுகளை செஞ்சு தர்றதுனு பண்ணிட்டு இருக்கோம். இந்த அனுபவம் எல்லாம் நாளைக்கு எங்களுக்கு கைகொடுக்கும். வேலைக்கு சேரப்போற கம்பெனியில, புராஜெக்ட், டெட்லைன்னு கொடுக்கறப்போ, அதைச் சந்திக்கறதுக்கான காஃன்பிடன்ஸ் கிடைக்கும். சீனியர்ஸ்கிட்ட கார்ப்பரேட் வேர்ல்டு, அந்த மேனர்ஸ் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுட்டு இருக்கேன். அப்புறம்... எனக்கு 'சைன்’ பண்ணத் தெரியாது. அதனால இப்போ தினமும் 'சைன்’ போட்டுப் பழகுறேன்!''

சுமதி, மெப்கோ பொறியியல் கல்லூரி, சிவகாசி: ''சொந்த ஊரு தூத்துக்குடி பக்கத்துல சாத்தான்குளம். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட் டாப்பர்ங்கறதுனால எனக்கு நேரடியா டெக்னிக்கல் இன்டர்வியூ வாய்ப்பு கிடைச்சுது. சி.டி.எஸ்-ல செலக்ட் ஆனேன். 'கேம்பஸ்ல பிளேஸ் ஆகிறது பெருசு இல்ல... கம்பெனியில் வேலைக்கு சேரும்போது, பேஸிக்ஸ்ல தெளிவா இருக்கணும்!’னு சீனியர்ஸ் சொன்னாங்க. அதனால என்னோட ஃபர்ஸ்ட் இயர் புக்ஸ்ல இருந்து ஆரம்பிச்சு... எல்லா அகாடமிக் புக்ஸையும் ரெஃபர் பண்ணிட்டே இருக்கேன்.

java -வைக் கரைச்சுக் குடிக்கறோம்ல..!

இப்போ இருக்கிற லேட்டஸ்ட் டெக்னாலஜி, அட்வான்ஸா யூஸ் பண்ற சாஃப்ட்வேர் சமாசாரங்களை எல்லாம் நெட்ல தேடிப் படிச்சுட்டு இருக்கேன். கூடவே, எங்க கம்பெனியே ஆர்கனைஸ் பண்ணுற 'இ-லேர்னிங்'னு

(E-Learning) சொல்லப்படுற இணைய வழி கற்றல் முறையையும் படிச்சுட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு மாசத்துல திறமையான ஒரு பொறியாளரா சாஃப்ட்வேர் உலகத்துக்குள்ள நுழையறதுக்கான முழுத் தகுதிகளோட தயாராகிடுவேன்!''

நிவேதா, பிஷப் ஹீபர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி: ''நான் பி.எஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பொண்ணு. திருச்சிகாரங்களுக்கு என்னை நல்லாவே தெரியும். கடந்த அஞ்சு வருஷமா திருச்சி லோக்கல் சேனல்கள்ல கலக்கிட்டு இருக்கிற குட்டி வி.ஜே! இன்னொரு பக்கம் படிப்புலயும் சுட்டியா இருந்ததால... கேம்பஸ் இன்டர்வ்யூல சி.டி.எஸ்-ல, புரோக்ராம் டிரெய்னியா பிளேஸ் ஆனேன். எனக்குப் பிளேஸ்மென்ட் பெரும்பாலும் வடநாட்டுலதான் இருக்கும்ங்கறதுனால... தீவிரமா ஸ்போக்கன் ஹிந்தி கத்துட்டு இருக்கேன். அப்புறம் சாப்பாடு மிக முக்கியம் அமைச்சரே! வெறும் சப்பாத்தியை சாப்பிட்டு நாக்கு செத்துப்போயிடக் கூடாதுல..? அதனால அம்மாகிட்ட சின்ஸியரா சமையல் கத்துட்டு இருக்கேன்!''

java -வைக் கரைச்சுக் குடிக்கறோம்ல..!

சத்யபாமா, கே.எல்.என். தகவல் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை:          ''என்னோட கனவு, ஆசை எல்லாமே    கார்ப்ரேட் ஜாப்தான். ஆஃப் கேம்பஸ்ல 'விப்ரோ’ல பிளேஸ் ஆனப்போ, நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. கால் லெட்டர் வர்றதுக்கு இன்னும் நாலு, அஞ்சு மாசம் இருக்கு. அதுக்குள்ள எல்லா டாக்குமென்ட் ஃபார்மாலிட்டிகளையும் முடிச்சு வைக்கலாம்னு இருக்கேன். புராஜெக்ட்டுக்கு ஃபாரின் போற சான்ஸ்கூட கிடைக்கலாம். அதனால  பாஸ்போர்ட் அப்ளை பண்ணிட்டேன். பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பேங்க் அக்கவுன்ட்னு எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு இருக்கேன்.

நான் தமிழ் மீடியம்ங்கிறதுனால ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் போறேன். 'ஜாவா’வை ஏ டு இஸட் கரைச்சுக் குடிக்கணும். தினமும் நெட்ல இருந்து கஷ்டமான 'ஜாவா புராஜெக்ட்ஸ்’ எடுத்து நானே ட்ரை பண்ணி வொர்க் அவுட் பண்றது, நிறைய கான்ஃபிடன்ஸ் கொடுக்குது!''

கீப் ஆன் லேர்னிங்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism