''ஐ ஆம் ரெடி!''

- வெள்ளை வேட்டி, சட்டையுடன் ஏகத்துக்கும் உற்சாகமாக ஆஜரானார் இமான் அண்ணாச்சி!

''வேட்டி கட்டிய வேங்கை! கேப்ஷன் நல்லாயிருக்குல்ல..?!''

- உற்சாகமாக வந்தார்கள் சென்னை, எஸ்.ஆர்.எம். பல் மருத்துவக் கல்லூரி மாணவிகள்!

ஆதித்யா டி.வி-யின் 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் தனது காமெடி பேச்சால் கலாய்த்து காலி செய்து கொண்டிருப்பவர் இமான். இவரை கலாய்த்து காலி செய்வதுதான் கல்லூரி பெண்களின் பிளான்.

இனி, கலகலப்பு ஸ்டார்ட்ஸ்...

''இந்தப் பொண்ணு என்ன ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு..?'' என்று எடுத்ததுமே இமான் விசாரணையைப் போட,

''அவ அசாம் பொண்ணு. பேரு மொயத்ரேயே!'' என்று அறிமுகப்படுத்தினார்கள் கேர்ள்ஸ்.

''ஓ... வாட் எ பியூட்டிஃபுல் நேம்! ஆனா... வாய்க்குள்ளதான் நுழைய மாட்டேங்கு. சரி வா வா... நீ என் சொந்தக்காரப் பொண்ணு... பக்கத்துல வந்து உட்காரு!'' என்று உற்சாகமானார் இமான்.

''அதெப்படி திருநெல்வேலிக்காரரான நீங்க, அசாம் பொண்ணுக்கு சொந்தம் ஆவீங்க..?'' என்று ஸ்ட்ரிக்ட் லாஜிக் பேசினார் பூங்கொடி. ''தோ பாருடா... ஆல் இண்டியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்மா. நீங்க படிக்கலையா..?!'' என்றார் இமான் கூலாக.

''அண்ணே.... நீங்க மட்டும் ஒரு வித்தியாசமான கலர்ல இருக்கீங்களே... அந்த ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்க!'' என்று திவ்யா கேட்க,

''முதல்ல நீங்க என்னை 'அண்ணே’னு சொன்னதை வாபஸ் வாங்குங்க...'' என்று கண்கள் சிவந்தார் இமான்.

''அப்ப, 'ஆல் இண்டியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்மா'னு சொன்னது...'' என்று சபியா குறுக்கிட... ஜெர்க் ஆனார் இமான்.

உடனே, ''அதை விட்டுத்தள்ளுடி, சரியான சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு, அதை கெடுக்க வந்துட்டா'' என்று கடுகடுத்த திவ்யா, ''ஐ ஆம் ரியலி வெரி ஸாரி அங்கிள்!'' என்று அடுத்த பாம் வெடிக்க, இமான் புஸ்ஸ்ஸ்!

அடுத்து தயாரான கேத்தரீன், ''நீங்கதான் இண்டியன் டீமோட ஓபனிங் பேட்ஸ்மேன்னு வெச்சுக்குவோம்... என்ன நடக்கும்..?'' என்று கேள்வியைப் போட... இமான் முகத்தில் ஏகப் புன்னகை!.

''இதுவரைக்கும் பிளேயர்ஸ் சிக்ஸ், ஃபோர் அடிச்சுதான் எல்லாரும் பார்த்திருப்போம். ஆனா... நான் டுவல்ஸ் எல்லாம் அடிப்பேன். எப்படினு யோசிக்கிறீங்களா..? நான் அடிக்கிற பந்து ரெண்டு கிரவுண்டோட சிக்ஸ் லைனைத் தாண்டிப் போய் விழுந்துடும்ல!'' என்று சொல்லி இமான் மட்டும் சிரிக்க,

''கெட்ட மொக்கை!'' என்று கேர்ள்ஸ் முறைக்க, காண்டானார் இமான்.

''சரி சார்... இப்போ உங்களுக்கே உங்களுக்கான ஒரு கேள்வி. நீங்க ஹீரோவா நடிக்கிறதுக்குனு கண்டிப்பா உங்க மனசுல ஒரு கதை வெச்சுருப்பீங்கள்ல... அதைச் சொல்லுங்க...'' என்று ஆசியா கேட்க, அனைவரும் ஆர்வத்தோடு பார்க்க, அதற்குள் ஒரு சூப்பர் ஃபீலுக்குச் சென்றிருந்தார் இமான்.

''சொல்றேன்... பட், லீக் பண்ணிடக் கூடாது!'' என்று 'காட் பிராமிஸ்' வாங்கியபின் சொன்னார் இமான்...

''கதை...''

''அதான் சார் சொல்லுங்க...''

''அதான் சொன்னேனே..?'' என்ற இமானை கேர்ள்ஸ் துரத்த, வேட்டியைப் பிடித்துக்கொண்டு ஓடியவரை காப்பாற்றி அமர வைத்தோம்.

அடுத்த ரவுண்ட் ஆரம்பித்தார் வித்யா. ''உங்ககிட்ட இதுவரைக்கும் எத்தனை பேரு புரபோஸ் பண்ணியிருக்காங்க...?'' என்ற கேள்விக்கு, இமான் ரொம்பவே உற்சாகமானார்.

''ஆரம்பத்துல, யாருக்காச்சும் நம்மைப் பிடிக்காதா, நமக்கும் ஒண்ணு சிக்காதானு நானும் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். ஆனா, என் வாழ்க்கையில அப்படி எந்த நல்ல காரியமும் நடக்கல. இப்போ ஏகப்பட்ட ஆஃபர். எதை ச்சூஸ் பண்றதுனே தெரியல. அழகா பிறந்துட்டாலே இதுதான் பிரச்னை!'' என்று அலுத்துக் கொள்ள,

''இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா!'' என்று கோரஸினார்கள் கேர்ள்ஸ்.

''ஏய்... நல்லவங்கள இந்த உலகம் என்னைக்குதாம்மா நம்பியிருக்கு..?'' என்று பஞ்ச் விட்டார் இமான்.

''சரி, உங்க வீடு எங்கயிருக்கு? பயப்படாம சொல்லுங்க... வந்துடலாம் மாட்டோம்...'' என்று ஆசியா அட்ரஸ் கேட்க,

''அதுவா... ஐ.ஓ.பி-யில அடகுல இருக்கு!'' என்று இமான் அடித்த டைமிங் காமெடிக்கு கேர்ள்ஸ் சிரித்து முடிக்க சில நிமிடங்கள் ஆனது.

''மறுபடியும் நீங்க மொக்கை இன்டர்வியூவை ஆரம்பிச்சுடாதீங்க. இந்த கேப்லயே நான் 'எஸ்’ ஆகிக்கிறேன் தாய்களா. நீங்க எல்லாரும் என்னைக் கலாய்க்க எவ்வளவோ டிரை பண்ணிங்க. பட்... என்ன பண்றது?! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!'' என்று இமான் கேர்ள்ஸை சீண்ட,

''அதெல்லாம் இருக்கட்டும்... பத்திரமாப் போங்க... பாக்கிறவங்க பயந்துடப் போறாங்க!'' என்று ஃபைனல் குத்து குத்தினார்கள் கேர்ள்ஸ்!