Published:Updated:

அம்மா தந்த பரிசு !

சா.வடிவரசு படங்கள்: ச.இரா. ஸ்ரீதர்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''நான் மீன்குஞ்சு!''

- புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் திவ்யநந்தினி!

யோகாவில் இதுவரை மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பரிசுகள் பெற்றுள்ள சென்னை, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவியான திவ்யநந்தினியின் அம்மா, ஒரு யோகா டீச்சர்!

'அம்மா ஜோதி ஒய்.எம்.சி.ஏ காலேஜ்ல யோகா டீச்சரா வொர்க் பண்றாங்க. ஆனாலும் சின்ன வயசுல என்னை யோகா கத்துக்கச் சொல்லி வற்புறுத்தினதில்லை. எனக்கும் யோகா மேல ஈர்ப்பு வந்ததில்லை. கே.வி.ஐ.ஐ.டி ஸ்கூல்ல எட்டாவது படிச்சப்போ, யோகாவைவிட, அதுல எங்கம்மா காட்டுற ஈடுபாடு என்னை ஆச்சர்யப்படுத்த, 'அப்படி என்னதான் இருக்கு இதுல?’னு ஆர்வமாச்சு. 'எனக்கும் யோகா சொல்லித் தாங்க!’னு அம்மாகிட்ட போய் நின்னேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.

தினமும் யோகா பயிற்சி செய்தேன். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும், போகப் போக வில்லா வளைஞ்ச என் கை, கால்களை என்னாலயே நம்பமுடியல. யோகா கத்துக்க ஆரம்பிச்ச வருஷமே மாநில அளவிலான 8-வது யோகா சாம்பியன்ஷிப் போட்டியில கலந்துகிட்டேன். அதுதான் முதல் போட்டியும்கூட. எனக்கு மூணாவது பரிசு கிடைச்சுது, பெரிய சந்தோஷம்!

அம்மா தந்த பரிசு !

பத்தாவது பப்ளிக் எக்ஸாம்ங்கிறதால பிரேக் எடுத்துகிட்டு, மறுபடியும் போட்டிகள்ல கலந்துக் கிட்டேன். 2008-ல் தாய்லாந்தில் நடந்த 'முதல் ஆசிய யோகா சாம்பியன்ஷிப்’ போட்டிக்கு இந்தியாவுல இருந்து நானும் தேர்வாகி கலந்துகிட்டு, மூணாவது பரிசு வாங்கினேன். குறிப்பா, 2011-ம் வருஷம் ராமநாதபுரத்தில் நடந்த 'தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி’யில, எல்லா மாநிலத்துல இருந்தும் கலந்துகிட்ட 25 டாப்பர்களோட மோதி, முதல் பரிசு வாங்கினேன்'' என்று சொல் லும் திவ்யநந்தினி, த்ரோபால் பிளேயரும்கூட!

''2009, 2010, 2011 இந்த மூணு வருஷமும் தமிழ்நாட்டு அணிக்காக தேசிய அளவிலான த்ரோபால் போட்டிகள்ல விளையாடியிருக்கேன். 2010-ல் டெல்லியில நடந்த '20-வது த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி’யில தமிழக அணி மூணாவது பரிசைப் பெற, நானும் ஒரு முக்கிய காரணமா இருந்தேன்'' என்று பெருமை யோடு அதைப் பற்றிக் குறிப்பிட்டவர்,

அம்மா தந்த பரிசு !

''சென்னை, வேலம்மாள் ஸ்கூல்ல ப்ளஸ் ஒன் படிச்சப்போ, மாநில அளவி லான யோகா போட்டியில கலந்துக்கிட்டு வெண்கலப் பதக்கம் வாங்கினேன். பரிசளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர், எங்கம்மா! நான் வாங்கினதுலயே ஸ்பெஷலா நினைக்கறது, அந்தப் பரிசைத்தான்! எங்கம்மா மட்டுமில்ல, அப்பா தயானந்தன், தங்கை சரண்யானு என்னோட ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவிக்கிற என் குடும்பம்தான் என் பலம்!''

- நிறைவுடன் முடித்தார் திவ்யநந்தினி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு