Published:Updated:

அவள் 16 - ஜூன்ஸ் வித் சாரி !

நா.சிபிச்சக்கரவர்த்திபடங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

அவள் 16 - ஜூன்ஸ் வித் சாரி !

நா.சிபிச்சக்கரவர்த்திபடங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
 ##~##

அழகுப் பெண்களை குத்தகை எடுத்திருந்தது அந்த கலர்ஃபுல் மேடை! 'பெண்களை ரசிப்பதா... உடைகளை ரசிப்பதா?' என்று பார்வையாளர்களைத் திணறடித்த, சென்னை தரமணியில் உள்ள நிஃப்ட் (NIFT)   வளாகத்தில் நடந்த ஃபேஷன் ஷோ, அவ்வளவு லவ்லி!

ஃபேஷன், த்ரீடி உட்பட பல்வேறு கிரியேட்டிவ் விஷ யங்களை கற்றுத் தரும் 'டிரீம் ஸோன்' (Dream Zone) கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் போட்டியாக இந்த ஃபேஷன் ஷோ நடத்தப்பட, கண்களுக்கும் கேமராக்களுக்கும் விதவித விருந்து!

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னால், ''யாரு நல்லா விசில் அடிப்பா.. ஸ்டேஜ்ல வந்து அடிங்க’' என்று அன்பாக அழைத்தார் காம்பயர். ''நாங்க எல்லாம் விசில் அடிச்சா, பொண்ணுங்க காது தாங்காது...'’ என்று ஏக பில்ட் அப்-களுடன் 'விசிலிய’ விமல் சத்தம், முதல் வரிசைக்கே கேட்காததால் மொக்கை வாங்கி அமர்ந்தார். தொடர்ந்து வந்தவர்களும் சொதப்ப, ''அடப் போங்கப்பா மொக்கைகளா..!'’ என அலுத்துக் கொண்ட பெண்கள், ஆடியன்ஸ் சைடில் இருந்து அடித்த விசிலில் ஆடிட்டோரியம் அதிர்ந்தது!

அவள் 16 - ஜூன்ஸ் வித் சாரி !

அடுத்து... ஆரவாரத்துடன் ஆரம்பித்தது ஃபேஷன் ஷோ! ஒவ்வொரு டிசைனரும் ஒரு கான்செப்ட் எடுத்து, தங்கள் மாடல்களுக்கு உடை, நகை, காலணி எனப் பார்த்துப் பார்த்து டிசைன் செய்திருந்தனர். ''முதலில் களம் இறங்கப் போவது... ஹோலி தீம்!'' என காம்பயர் அறிவிக்க... வண்ணங்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அடித்துத் தைத்தது போன்ற உடைகளில் அசத்தினர் வானவில் தேவதைகள்.

அவள் 16 - ஜூன்ஸ் வித் சாரி !

நெக்ஸ்ட்... கடல் தீம்! இசையும் தீமுக்கு ஏற்றவாறு மாற... அதற்குத் தகுந்தவாறு நடை மாற்றினர் கேர்ள்ஸ். கடல்கன்னிகளைப் பார்த்துவிட்ட சந்தோஷத்தில் ஆடிட்டோரியம் எக்கச்சக்கமாக எக்ஸைட் ஆகி, ''கடல் சூப்பர்!'' என்று கத்த, கடல்கன்னிகளின் கன்னங்கள் இன்னும் சிவந்தன. திமிங்கல உடை கேர்ள், ஹிட் ஆஃப் தி தீம்!

அவள் 16 - ஜூன்ஸ் வித் சாரி !

''அட என்னப்பா... ஒரே வெஸ்டர்ன் டிரெஸ்ஸா இருக்கு. தலை நிறைய பூ வெச்சு, புடவை கட்டி வந்தா எப்படி இருக்கும்?!'' என்று காம்ப்பயர் லீட் கொடுக்க, அதற்குப் பசங்களும் 'ஓ’ போட, சாரியில் தோன்றினார்கள் ஜீன்ஸ் பேன்ட் போட்டு, மேலே சாரி கட்டி என புது டிரெண்ட் செட் செய்ய முயன்ற தேவதைகள்! 'எந்தா இது புதுவிதமா இருக்கு! இதைத்தான் ஞான் அடுத்த வாரம் கல்யாணத்துக்குப் போடப் போகுது!' என குறித்துக் கொண்டார் ஒரு கேரள சேச்சி (மக்கா, அடுத்த டிரெண்ட் உடை ஜீன்ஸ் வித் சாரியாவும் இருக்கலாம்... பி ரெடி!).

அவள் 16 - ஜூன்ஸ் வித் சாரி !

இறுதியாக, ''பலத்த போட்டிக்கு நடுவே, சிறந்த டிசைனருக்கான விருதை தட்டிச் செல்கிறார்... கோபிநாத்!'' என ஸ்பெஷல் கெஸ்ட்டாக வந்த திருநங்கை அப்சரா அறிவிக்க, அரங்கெங்கும் உற்சாகம்! 'விண்டோஸ் டு த சோல்' என்ற கான்செப்ட்டில் டிரெஸ் டிசைன் செய்திருந்த கோபிநாத், பத்தாயிரம் ரூபாய் பரிசையும், ஆடியன்ஸின் ஆரவாரத்தையும் பெற்றார்!

அவள் 16 - ஜூன்ஸ் வித் சாரி !

அதுவரை மேடையில் 'கேட் வாக்’கிய கன்னிகள் எல்லோரும் ஒன்றாக ஆஜராகி ஃபைனல் போஸ் கொடுத்தபோது, பல கண்களிலும் கோடம்பாக்க கனவு !