Published:Updated:

'டைரி' செல்வா !

'டைரி' செல்வா !

'டைரி' செல்வா !

'டைரி' செல்வா !

Published:Updated:

ஆஹா...ஆர்ஜே !

'இது உங்கள் ஹலோ எஃப்.எம். 106.4-ன்    டை...ரி’னு வசீகர குரலால் அந்த நிகழ்ச்சியைத் தாங்கற 'ஆர்ஜே' செல்வகீதா, மதுரை மக்களுக்கு செல்லமா 'செல்வா’! தினமும் 'டைரி’யில மதுரை நேயர்களோட பர்சனல் பக்கங்களைப் புரட்டற செல்வாவோட பர்சனல் பக்கங்கள் இங்கே...

'டைரி' செல்வா !
##~##

''திருநெல்வேலி, முறப்பநாட்டுப் பொண்ணு நான். ஒரு முறை ஸ்கூல்ல இருந்து திருநெல்வேலி ரேடியோ ஸ்டேஷனுக்கு ஒரு க்விஸ் போட்டிக்காக கூட்டிட்டுப் போனாங்க. நியூர் இயர் டைம்ங்கறதால, 'புத்தாண்டே வா’னு நான் எழுதின கவிதையை (ஆமாங்க... கவிதையெல்லாம் எழுதுவேன்!) ஒரு நப்பாசையோட எடுத்துட்டுப் போய், தொகுப்பாளர்கிட்ட கொடுத்தேன். 'வெரி குட்’னு சொன்னவர், சர்ப்ரைஸா என்னையே ரேடியோவுல வாசிக்க வெச்சாரு. 'அழகான குரல், உச்சரிப்பு...’னு வேற எல்லாரும் பாராட்ட, 'நாம ஒரு 'ஆர்ஜே’ ஆகணும்...’னு மனசுக்குள்ள விதை விழுந்துடுச்சு.

கல்யாணம் முடிஞ்சு, கணவரோட ஊரான மதுரைக்கு வந்த பிறகு, என்னோட உச்சரிப்பும், குரலும் 'மதுரை வானொலி’யில வேலை வாங்கி கொடுத்துச்சு. அதுக்கு காரணமே என் கணவர் காளீஸ்வரன் காட்டின அக்கறைதான்!

ஏழு வருஷமா அங்க வேலை பார்த்த எனக்கு, ஹலோ எஃப்.எம்-ல 'ஆர்ஜே’ வாய்ப்பு. ஆபீஸ், காலேஜ், ஸ்கூல்னு கிளம்பிட்டு இருக்கிற காலை நேரத்துல 'அவசரக்கோழி’னு ஒரு நியூஸ் புரோகிராம் பண்ணேன். அப்பறம்தான் சூப்பர் ஹிட் 'டைரி’.

இந்த நிகழ்ச்சிக்கு தினம் தினம் வர்ற உருக்கமான கடிதங்கள், தூக்கத்தையே தொலைக்க வெச்சுரும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூணு கடிதங்கள் இருந்தாலும், என்னோட முதல் 'லிங்க்’... ஏதாச்சும் சமூகக் கருத்தைத்தான் வலியுறுத்தும். 'நேத்து கோயிலுக்குப் போனேன். பிரசாதம் வாங்கற இடத்துல எல்லாரும் இலையை குப்பைத் தொட்டியில போட்டுட்டுப் போயிருந்தா... அந்த பாட்டி வழுக்கி விழுந்திருக்க மாட்டாங்க’னு நான் சொல்ற அனுபவக் கருத்துக்கள், நிகழ்ச்சியைக் கேக்கற ஆயிரம் பேர்ல ஒருத்தரையாச்சும் அடுத்த முறை பிரசாத இலையை குப்பைத் தொட்டியில போட வைக்கும்னு நம்பறேன்!''

- மோ.கிஷோர்குமார்
    படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்