Published:Updated:

நாலு பாடம் ஓகே.. கணக்கு மட்டும் வரவே மாட்டேங்குதே ஏன் ?

நாலு பாடம் ஓகே.. கணக்கு மட்டும் வரவே மாட்டேங்குதே ஏன் ?

நாலு பாடம் ஓகே.. கணக்கு மட்டும் வரவே மாட்டேங்குதே ஏன் ?

நாலு பாடம் ஓகே.. கணக்கு மட்டும் வரவே மாட்டேங்குதே ஏன் ?

Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

''எங்களின் ஒரே மகளை இன்ஜினீயராக்கும் கனவில் ப்ளஸ் ஒன் 'பயோ-மேத்ஸ்’ குரூப்பில் சேர்த்து விட்டோம். முழு ஆண்டுத் தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில், 'அவளுக்கும் கணிதத்துக்கும் ஏணி வைத்தும்கூட எட்டவில்லை. ஸ்பெஷல் டியூஷன் எல்லாம் ஏற்பாடு செய்தும் பலனில்லை. அதனால், அடுத்த வருடம் மீண்டும் ப்ளஸ் ஒன்-ல் கணிதம் அல்லாத வேறு குரூப் எடுத்து அவள் படிக்கட்டும்’ என்று அறிவுரை சொல்கிறார் அவளுடைய ஆசிரியை. பத்தாவது வரையிலும்கூட மற்ற பாடங்களில் எல்லாம் 80% வாங்கும் அவள், கணிதத்தில் மட்டும் 35% வாங்குவதற்கே தடுமாறத்தான் செய்தாள். ஒரு பாடத்தில் மட்டுமே தடுமாற்றம் என்பது ஏதாவது குறைபாடா... இப்போது நாங்கள் செய்ய வேண்டியது என்ன?'' என்று புதுக்கோட்டையிலிருந்து கேட்டிருக்கும் புவனேஸ்வரிக்காக விளக்கம் தருகிறார் கோவையைச் சேர்ந்த 'வளரிளம் பருவ'த்தினருக்கான மன நல ஆலோசகர் என்.சுந்தர்குமார்.

நாலு பாடம் ஓகே.. கணக்கு மட்டும் வரவே மாட்டேங்குதே ஏன் ?
##~##

''உங்கள் மகளுடைய பிரச்னை, 'எஸ்எல்டி' (SLD-Specific Learning Disability) எனப்படும் குறிப்பிட்ட கற்றலின் குறைபாடு பிரச்னை சார்ந்தது. மொத்த பாடங்கள் ஐந்து எனில், ஒன்றில் மட்டுமே இந்தக் குறைபாடு தென்படலாம். பெரும்பாலும் ஏனைய பாடங்களில் இவர்களின் தேர்ச்சி ஆச்சர்யப்படுத்தும்.

உங்கள் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் இப்பிரச்னையை நீண்ட காலமாகக் கவனித்து வந்தும், சரி செய்வதற்கான வழிகளை மேற்கொள்ளாமல் விட்டிருக்கிறீர்கள். உங்களின் அறியாமையால், உங்கள் பெண் அதிகம் சிரமம் அடைந்திருப்பார். அவரை முழுமையாகப் புரிந்து கொள்ளவும் உங்கள் கவனிப்பை மேம்படுத்தி கொள்ளவும் முதலில் இந்தக் குறைபாடு பற்றி அறிந்து கொண்டாக வேண்டும்.

மூளையில் ஏற்படும், கண்ணுக்குப் புலனாகாத 'மினிமல் பிரெய்ன் டிஸ்ஃபங்ஷன்' (Minimal Brain Dysfunction) எனப்படும் நுட்பமான குறைபாட்டால்தான் இப்பிரச்னை ஏற்படுகிறது. 'டிஸ்லெக்ஸியா' (Dyslexia)எனப்படும் படித்தல் சார்ந்த குறைபாடு; 'டிஸ்கிராஃபியா' (Dys graphia) எனப்படும் எழுதுதல் சார்ந்த குறைபாடு; 'டிஸ்கால்க்யூலியா' (Dyscalculia) எனப்படும் கணிதத்திறன் சார்ந்த குறைபாடு ஆகியவை முக்கியமான மூன்று குறைபாடுகள். இவை ஒருவரின் அறிவு திட்டமிடுதல், ஞாபகப்படுத்துதல், வகை அறிதல் என எவற்றில் வேண்டுமானாலும் தடைகளையோ, தடுமாற்றங்களையோ உருவாக்கலாம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஊன்றிக் கவனிக்கும்போதுதான் அவற்றை அடையாளம் காண முடியும். உதாரணமாக, சில மாணவர்களுக்கு பாடங்களை உள்வாங்கிக் கொள்வதில் பிரச்னை இருக்கும். பார்வை சார்ந்தும் மூளையின் திறன் சார்ந்தும் இவர்கள் வடிவங்களை இனம் பிரிப்பது, சொற்களை இனம் பிரிப்பது போன்றவற்றில் தடுமாறுவார்கள். வேறு சிலருக்கு உள்வாங்குவதில் பிரச்னை இருக்காது. உள்வாங்கியதை வகைப்படுத்தி பிரிப்பதிலும், வரிசைப்படுத்தி அவற்றுக்கிடையேயான தொடர்புகளை அடையாளம் காண்பதிலும் தடுமாறுவார்கள். இந்த இரண்டையும் எளிதாக கடந்த சிலர், பாடங்களை மனதில் இருத்தும் நிலையில் தடுமாறுவார்கள்.

நாலு பாடம் ஓகே.. கணக்கு மட்டும் வரவே மாட்டேங்குதே ஏன் ?

இவையெல்லாம் குறைபாடுதானே ஒழிய, நோய் அல்ல. ஆனால், இவையெல்லாம் மூளை சார்ந்தவை என்பதால், நிவர்த்தி செய்வது ஓரளவுக்கு மட்டுமே சாத்தியம். எனவே, குணப்படுத்துவது என்ற முயற்சிகளைவிட... தொடர் பராமரிப்பு, அரவணைப்பு ஆகியவற்றில் முழுக்க கவனம் செலுத்துவதே நல்லது.

முதலில், குழந்தையின் 'எஸ்எல்டி' (SLD) குறைபாட்டை முழுமையாக அடையாளம் காண, இந்தியக் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக இருக்கும் ஐ.க்யூ டெஸ்ட்டான 'எம்ஐஎஸ்ஐசி' (MISIC -Malin’s Intelligence Scale for Indian Children) மூலம், கற்றலின் குறைபாட்டையும், நிறைகளையும் அடையாளம் காணுங்கள். முடக்குவாத நோயாளிக்கு, 'பிஸியோதெரபி' பயிற்சிகள் மூலம் பிரச்னைக்குரிய பாகத்தை மேம்படுத்துவது போல, மூளை சார்ந்த குறைபாடுகளையும் அணுக முடியும்.

அடுத்ததாக, குறைபாடுள்ள பாடத்தை தவிர்த்து, ஏனைய பாடங்களில் குழந்தையின் ஈடுபாட்டை ஒட்டி ஒன்றை தேர்ந்தெடுத்து, அதை அவரது எதிர்காலத்துக்கான அஸ்தி வாரமாக்கலாம். தொடர் பயிற்சிகள் மூலம், மற்ற நிறைகளை வளர்த்தெடுக் கலாம்.  முக்கியமாக, குறை பாட்டை பெரிதுபடுத்தும் வகையில் குழந்தையைத் திட்டுவதோ, மிரட்டுவதோ வேறு தண்டனைகள் தருவதோ எதிர்மறை விளைவுகளையே தரும்.

கற்றலின் குறைபாடு பிரிவில் அடங்கும் மாணவர் களுக்கு கவனச் சிதறல் அதிகமாக இருக்கும். புறக்காரணிகளாலும், ஒப்பிடப்படுவதாலும் மனச்சோர்வு எளிதில் பீடிக்கும். கால மதிப்பீடு, தன்மானம் இவை பாதிக்கப்படும்போது நாளடைவில் மனநோயாளியாகும் ஆபத்தும் இருக்கிறது. எனவே... ஆசிரியர்களும், பெற்றோர்களும் இத்தகைய குழந்தைகளை அவர்களின் குறைகளோடு முழுமையாக ஏற்றுக் கொண்டு, அரவணைப்பைத் தர வேண்டும்.

உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கான படிப்பை... அவளின் ஆசிரியர் மற்றும் மனநல ஆலோசகர் ஆகியோரின் உதவியோடு தீர்மானியுங்கள்!''