Published:Updated:

அவள் 16 - வெட்டிங்ஃபீல் வருதுல்ல !

படங்கள்: வீ.நாகமணி, சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

கலர்ஃபுல் கலாட்டாவாய் நடந்து முடிந்திருக்கிறது 'கிங்ஃபிஷர் பிரிமியம் - சென்னை இன்டர் நேஷனல் ஃபேஷன் வீக்’! கிங்ஃபிஷர் பிரிமியம், ஸ்டார்ம் ஃபேஷன் நிறுவனத்துடன் இணைந்து, தேனாம்பேட்டையில் உள்ள 'ஹயாத்  ரீஜென்சி’யில் நடத்திய இந்த   நான்கு நாள் ஃபேஷன் திருவிழா, ஹாட் ஹிட்!

சென்னையின் ஸ்டைல் தாகத்தை தீர்க்க, ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இவ்விழா, இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து பல ஸ்டைல்களை வெளிக்கொண்டுவரும் ஒரு பிரமாண்ட ஃபேஷன் திருவிழா. நசியா, விவேக் கருணாகரன், ரிச்சா, அனுராதா பிசானி போன்ற சென்னையின் டாப் டிசைனர்கள் உட்பட மொத்தம் 12 டிசைனர்களின் பலவிதமான ஆடை வடிவமைப்புகளை ஃபேஷன் பிரியர்களுக்கு அறிமுகப்படுத்திய இந்நிகழ்ச்சியில், பிரைடல் கலெக்ஷன்ஸ், காஷ§வல்ஸ், பார்ட்டி வேர் என இந்திய ஆடை வகைகளையும், மேல்நாட்டு ஆடை நெறிகளையும் கலந்து கொண்டாடினர் டிசைனர்ஸ். இவர்கள் வடிவமைத்த ஆடைகளை கோலிவுட், பாலிவுட், மாலிவுட் நட்சத்திரங்கள் அணிந்துவந்து, மேடையின் டெம்ப்பரேச்சர் கூட்டினர்.

அவள் 16 - வெட்டிங்ஃபீல் வருதுல்ல !

ஏறத்தாழ 10 வருடங்களாக ஃபேஷன் உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் இளம் டிசைனர், நசியா. பெரும்பாலும் திருமண நிகழ்வு ஆடைகள் வடி வமைக்கும் இவர், இம்   முறை வண்ணங்களும் பிரமாண்டமும் நடனமாடும் நீளமான கவுன்களை டிசைன் செய்ய, ''நசியாவோட டிசைனிங்... கிரியேட்டிவிட்டியின் எல்லை!'' என்று அதை மிடுக்காக உடுத்தி 'ராம்ப் வாக்’கினார், அவரின் ஷோ ஸ்டாப்பர், பாலிவுட் நடிகை எவ்லின் ஷர்மா!

அவள் 16 - வெட்டிங்ஃபீல் வருதுல்ல !

''எங்க குடும்பத்துல எல்லாரும் என்னை இன்ஜினீயராக்க நினைக்க, நான் தப்பிச்சு ஃபேஷன் ஃபீல்டுக்குள்ள வந்துட்டேன்!'' எனும் விவேக் கருணாகரனின் ஷோ டாப்பர், பார்வதி ஓமனக்குட்டன். மிக்ஸ் அண்ட் மேட்சாக இருந்த விவேக்கின் டிசைன்களை அணிந்து வந்த பார்வதி, ''விவேக் என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட். எப்பவும் அவர் ச்சூஸ் பண்ற பிரைட் கலர்ஸ், இன்னிக்கு என்னை கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகாக்கிடுச்சுனு தோணுது!'' என்றார் கியூட் சிரிப்புடன்.

அவள் 16 - வெட்டிங்ஃபீல் வருதுல்ல !

வெள்ளை உடை, தலையில் ப்ளூ ஸ்ட்ரைப்ஸ் என, மதர் தெரஸா டிரெஸ் ஸ்டைல்தான் ரிச்சாவின் கான்செப்ட்! ''தெரஸா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க மேல உள்ள காதல்ல உருவாக்கின டிசைன்ஸ் இது!'' என்ற ரிச்சா வடிவமைத்த ஆடையை அணிந்து வந்தவர், ஆன்ட்ரியா. ''என்னோட டிசைன்களை ஆன்ட்ரியாவால மட்டும்தான் கரெக்ட்டா எக்ஸ்போஸ் பண்ண முடியும்னு தோணுச்சு!'' என்ற ரிச்சாவை, ரொம்பவே ரசித்தார் ஆன்ட்ரியா.  

அவள் 16 - வெட்டிங்ஃபீல் வருதுல்ல !
அவள் 16 - வெட்டிங்ஃபீல் வருதுல்ல !

வெட்டிங் கலெக்ஷன்ஸ்தான் அனுராதா பிசானியின் ஸ்டைல். பாவாடை, தாவணி இன்ஸ்பிரேஷனில், அதேசமயம் அல்ட்ரா மாடர்ன் டிசைனில், பளீர் கலர்களில் இவர் செய்திருந்த டிசைன்களை மாடல்கள் அணிந்துவந்தபோது, அப்ளாஸ். இவரின் ஷோ டாப்பர்... அனுயா, ''இந்த டிரெஸ்ல வெட்டிங் ஃபீல் வருது!'' என்றார் வெட்கத்துடன்!

அவள் 16 - வெட்டிங்ஃபீல் வருதுல்ல !

பார்வையாளர்கள் வரிசையிலிருந்து ஆரவாரம் செய்தபடி இருந்த கேர்ள்ஸ், ''நம் நாட்டுப் பெண்கள் புதிய ஆடை முறைகளை ஃபாலோ செய்ய அவ்வளவா முன்வர்றதில்ல. டிரெஸ் விஷயத்துல அவங்க இன்னும் எக்ஸ்பிரிமென்ட் செய்யணும். சிலருக்கு கலர் காம்பினேஷன்களை சரியா பயன்படுத்தத் தெரியல. டார்க் கலர் டாப்புக்கு, லைட் கலர் பாட்டம்தான் சூட் ஆகும். இந்திய ஸ்கின் நிறத்துக்கு பிரைட் கலர்ஸ் பொருந்தாதுனு பலரும் நினைக்கிறாங்க. ஆனா, நம்ம ஸ்கின் கலருக்குத்தான் பிரைட் கலர்ஸ் கான்ட்ராஸ்ட் அழகு கொடுக்கும்!'' என்று நசியா சொன்ன டிப்ஸ்களை குறித்துக் கொள்ளத் தவறவில்லை!

- உ.கு.சங்கவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு