Published:Updated:

கைகொடுக்கும் கைகள் !

சா.வடிவரசு படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

##~##

''ஒரு ஆர்வத்துல இந்த 'ஃபிரெண்ட்ஸ் ஆஃப் 108 கிளப்’ல சேர்ந்துட்டாலும், ஃபீல்டு வொர்க்குக்காக நேரடியா களத்துல இறங்கினப்போதான்... அரை உயிரும், அழும் கண்களுமா இருக்கறவங்களைப் பார்த்தப்போதான்... இந்த சேவையில் இருக்கிற தவிப்பும் துடிப்பும் புரிஞ்சுது. இதை நாங்க பிரார்த்தனைகளோட, பரிபூரண ஈடுபாட்டோட செய்றோம்!''

- உள்ளத்தில் இருந்து பேசுகிறார்கள் சென்னை, செயின்ட் தாமஸ் கல்லூரியில் இயங்கிவரும் 'ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் 108 கிளப்' மாணவ - மாணவிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரசாங்கத்தின் 'அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவு 108’. இதனுடன் இணைந்து சேவையாற்றி வருவதுதான் இந்த மாணவர் கிளப்பின் முக்கிய பணி. இந்த கிளப் உருவான கதை சொன்னார், அனுஷா பானு.

''எங்க காலேஜ் என்.எஸ்.எஸ். மாணவர்கள் பாராட்டும் விதமான பல சேவைகளை தொடர்ந்து செய்துட்டு வர்றாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்ன '108’ பிரிவோட சவுத் இந்தியன் ரீஜினல் மேனேஜர் பிரபுதாஸ், எங்க என்.எஸ்.எஸ். மாணவர்களோட அதீத ஆர்வத்தையும் அக்கறையையும் கவனிச்சு, அதனோட ஒருங்கிணைப்பாளர் ரசூல் ஜெயபதி சார்கிட்ட பேசினார். அதன்பிறகு தொடங்கப்பட்டதுதான் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் 108 கிளப்'' என்றவரைத் தொடர்ந்து, இதன் செயல்பாடுகள் பற்றி ரசூல் ஜெயபதி...

கைகொடுக்கும் கைகள் !

''எல்லாவிதமான அவசர மருத்துவ சேவைகளுக்கும் விரையும் '108’ அமைப்போட சேர்ந்து, எங்க மாணவர்களும் பங்காற்றிட்டு இருக்காங்க. இதுக்கான பயிற்சியா, எங்க மாணவர்களை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போய், அவசர மருத்துவ உதவிகள் எப்படி செய்றதுனு பிராக்டிக்கலா நிறையக் கத்துக்கொடுத்தாங்க. ஏதாவது அவசரத் தேவைனா, '108’ பிரிவுல இருந்து எங்க காலேஜுக்கு போன் வரும். உடனடியா ஸ்பாட்டுக்கு விரைவாங்க எங்க மாணவர்கள். மருத்துவக் குழுவோட சேர்ந்து இவங்களும் உயிர்காக்கும் நடவடிக்கையில உதவி செய்வாங்க. அதேபோல,

கைகொடுக்கும் கைகள் !

'அவசரமா இந்த வகை ரத்தம் தேவை’ என்ற செய்தியையும் '108’ பிரிவு எங்க கல்லூரிக்கு தெரியப்படுத்துவாங்க. சில நிமிடங்கள்ல பல மாணவர்கள் அதுக்காக ரெடியாகி நிப்பாங்க'' என்றார் பெருமையுடன்.

''சென்னை டெபுடி கமிஷனர் முன்னிலையில், ஏழு மாதங்களுக்கு முன் இந்த கிளப் எங்க கல்லூரியில் தொடங்கப்பட்டது. இப்போ கிட்டத்தட்ட் 100 ஸ்டூடன்ட்ஸ் உறுப்பினர்களா இருக்காங்க. இதுல 60 பேர் மாணவிகள். ஒரு முன்னோடி அமைப்பா, தமிழ்நாட்டுலயே எங்க காலேஜ்ல மட்டும்தான் 'ஃபிரெண்ட்ஸ் ஆஃப் 108 கிளப்’ தொடங்கப்பட்டிருக்கு. வரும் நாட்கள்ல இதில் எல்லா கல்லூரிகளும் பங்களிப்பு செய்யணும்!'' என்று வேண்டுகோளாகச் சொன்னார் கல்லூரி முதல்வர், டாக்டர் செல்வராஜ்.  

''நியூ இயர் அப்போ, மெரினாவில் டிரிங்க்ஸ் சாப்பிட்டு சண்டை போட்டதுல காயம்பட்டவங்க, விபத்துல சிக்கி ஆபத்தான நிலையில கிடந்தவங்கனு சிலரை, '108’ பிரிவோட சேர்ந்து காப்பாத்தினதுதான் நாங்க செய்த முதல் ஆக்டிவிட்டி.

கைகொடுக்கும் கைகள் !

சாலை விபத்தில் சிக்கின ஒருத்தரைக் காப்பாத்துறதுக்காக ஒரு தடவை நானும் ஆம்புலன்ஸ்ல போனேன். ரத்தத்தில் நனைஞ்சு, உயிருக்குப் போராடின அவரைப் பார்த்தப்போ அதிர்ச்சியும் அழுகையும் தான் வந்ததே தவிர, முதலுதவி, சிகிச்சைனு எதுவும் செய்யத் தோணல. 'பிரார்த்திக்கும் உதடுகளைவிட, உதவும் கைகள்தான் இங்கே தேவை'னு, '108’ குழுவில் இருந்த வங்க சொன்னப்போதான், நிலைமை புரிஞ்சுது எனக்கு. இப்போ எல்லாம் ஸ்பாட்ல போய் இறங்கும்போது, மனசைவிட மூளைதான் வேகமா செயல்படுது'' என்று நெகிழ்ந்து போய் சொல்கிறார் ஸ்ரீதேவி.

''ரத்ததான முகாம், சாலை பாதுகாப்பு நாடகம், மருத்துவமனை ஃபீல்ட் வொர்க்குகள்னு நாங்க இன்னும் பல நல்ல விஷயங்களை செய்துட்டு வர்றோம். ஓர் உயிர், மரணத்தைத் தொட்டு மீண்டு வர்றதைப் பார்க்குறப்ப, காப்பாத்தினதுல எங்க பங்களிப்பும் இருக்குங்கிறதை நினைச்சா நெகிழ்ச்சியா இருக்கு. 'நீதான் எம் புள்ளைக்கு ரத்தம் கொடுத்தியாமேப்பா..!’னு எங்க கையைப் புடுச்சு சில பெற்றோர்கள் நன்றி சொல்லும்போது, இந்தப் பிறவிக்கான பலனை அடைஞ்சுட்ட ஆத்ம திருப்தி வருது. இன்னும் நிறைய மருத்துவ உதவிகள் செய்யணும், செய்வோம். அதுக்கு ஃபிரெண்ட்ஸ் ஆஃப் 108 கிளப்’ வழி ஏற்படுத்திக் கொடுக்கும்!'' என்றார் கல்யாணி அக்கறையுடன்!

சல்யூட் ஸ்டூடன்ட்ஸ்!