''உடலை லாகவமாக வளைச்சு, கூர்மையான சிந்தனை யோட, வாளைச் சுழற்றும் ஃபென்சிங் (Fencing வாள் சண்டை), என்னோட களம். 11 வயசுல ஃபென்சிங் கத்துக்க ஆரம்பிச்சு, சில வருடங்கள்லேயே தேசிய அளவில் தங்கப் பதக்கம் வாங்கி னேன். நான் இந்த விளையாட்டுக்கு வந்து இது பத்தாவது வருஷம். உலகளவில் 19-வது இடம், ஆசிய அளவில் 5-வது இடம்னு நின்னுட் டிருக்கேன்!''

திருச்சி, அண்ணா பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் தகவல்தொடர்பு படிக்கும் அப்ஸராவுக்கு, பேச்சிலும் வாள் வேகம்!

''சின்ன வயசுல இருந்தே ஸ்போர்ட்ஸ்ல எனக்கு நிறைய ஆர்வம். குண்டு எறிதல் போட்டியில மாநில அளவில் தங்கப் பதக்கம், குத்துச் சண்டையில் வெள்ளி மற்றும் தங்கப் பதக்கம்னு கலக்கிட்டு இருந்தேன். ஆனாலும், வித்தியாசமா முயற்சி செய்யணும்னு எனக்கு ஆசை. ஃபுட்பால் பிளேயரான என் மாமா தேவராஜ்தான், என்னோட ஸ்போர்ட் டேலன்ட்டை கண்டுபிடிச்சு, ஃபென் சிங் விளையாட்டை 11 வயசுல எனக்கு அறிமுகப்படுத்தி னார். அந்த நொடியில் இருந்து அதுவே என்னோட ஆசை, விருப்பம், லட்சியம் எல்லாமும்னு மாறிடுச்சு!'' என்று சிரிக் கும் அப்ஸரா, படிப்புக்காக திருச்சியில் தங்கியிருக்கிறார். பெற்றோர் அருள் - உஷா சென்னையில் வசிக்கின்றனர்.

''நிறைய போட்டிகள், வெற்றிகள்னு கொஞ்சம் கொஞ்சமா ஃபென்சிங்ல முன்னேறினேன். நாலு வருஷத்துக்கு முன்ன, குவாலியர்ல நடந்த நேஷனல் லெவல் போட்டியில் தங்கம் வாங்கினது, என் வாழ்க்கையின் முக்கியமான வெற்றி. 'வாள்வீச்சு விளையாட்டில் முதல் முறையாக தேசிய அளவில் தங்கம் வென்ற தமிழ்ப் பெண்'ங்கற பெருமையும் எனக்குக் கிடைச்சுது. கூடவே... சர்வ தேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும்!

இதுவரை... துருக்கி, கொரியா, சிங்கப்பூர்னு பல நாடுகள்ல நடந்த சர்வதேச ஃபென்சிங் போட்டிகள்ல கலந்துக்கிட்ட நான், கொரியாவுல நடந்த போட்டியில தங்கப் பதக்கம் வாங்கினேன். அதுக்கப்புறம் பல தடவை சர்வதேச அளவிலான போட்டிகள்ல கலந்துக்கறதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டும், மூணு முறை மட்டுமே பங்கேற்க முடிஞ்சுது. அதுக்குக் காரணம்... உதவிகள் போதுமான அளவுக்கு இல்லாததுதான். மத்திய - மாநில அரசுகள் இந்த விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தா, இன்னும் நிறைய வெற்றிகள் வாங்கி வர முடியும்'' என்று வேண்டுகோள் வைக்கும் அப்ஸரா, ஃபென்சிங் மட்டுமல்லாமல்... குத்துச் சண்டை, குண்டு எறிதல், கராத்தே, பேருந்தில் கயிறுகட்டி பற்களால் இழுப்பது, கட்டுரை, ஓவியம், கீ-போர்ட் என்று இன்னும் பல திறமைகளுக்குச் சொந்தக்காரர்.

''கராத்தேயில் வொயிட் பெல்ட். என்னோட 11-வது வயசுலேயே 4 டன் எடை கொண்ட பேருந்தை பற்களால் இழுத்து என் சாதனையை ஆரம்பிச்சேன். தாடையால் மாருதி காரை உந்தித் தள்றது, பற்களால் ஜந்து ஆம்னி வேன்களை இழுத்து லிம்கா சாதனையில் என் பெயரைப் பதிஞ்சதுனு பல சாகசங்கள் செய்திருக்கேன். ஒவ்வொரு சாகச நிகழ்ச்சியையும் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியா நடத்தினேன்'' என்று அப்ஸரா சொன்னது, சுற்றுச்சூழல் மீதிருக்கும் தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. தொடர்ந்தவர்...

''கீ-போர்டு நல்லா வாசிப்பேன். கட்டுரை, ஓவியப்போட்டினு நிறை பரிசுகள் வாங்கியிருக்கேன். முதல் வகுப்புப் படிக்கும்போதே உலக திருக்குறள் மையம் எனக்கு 'திருக்குறள் குழந்தை’ பட்டம் தந்துருக்காங்க'' என்று ஆச்சர்யப்பட வைத்த அப்ஸரா... 'பால ரத்னா விருது’, 'கோ க்ரீன்' விருது, மூன்று முறை இளம் ஒலிம்பிக் வீராங்கனை விருது, யுவசக்தி இளம் சாதனையாளர் விருது என்று இவர் பெற்றுள்ள விருதுகளும் ஏராளம்.

''என் பெற்றோர், விளையாட்டுத்துறை ஆசிரியர்... இவங்கதான் வெற்றிகளுக்கு பின்புலமா இருக்கு றாங்க. என் மாமா தேவராஜ் இப்போ உயிரோட இல்லை. ஒலிம்பிக்ல தங்கப் பதக்கம் வாங்கி அவருக்கு சமர்ப்பிப்பேன்!'' என்றார் உறுதியுடன்!