Published:Updated:

அவள் 16 - இது இல்ல... நாங்க இல்ல..!

அவள் 16 - இது இல்ல... நாங்க இல்ல..!

அவள் 16 - இது இல்ல... நாங்க இல்ல..!

அவள் 16 - இது இல்ல... நாங்க இல்ல..!

Published:Updated:
##~##

'இது இல்லாம, எங்களால இருக்கவே முடியாது!'னு நீங்க நினைக்கறது எது..?''

- மதுரை, கோவை, சென்னைனு சில காலேஜ் கேர்ள்ஸ்கிட்ட கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செல்போன், ஃபேஸ்புக், ஸ்கூட்டி, கண்ணாடி, காஜல் பென்சில்னு ரகளை கட்டுது லிஸ்ட்!

முதலில் 'மதுர’!

''ஒரு பொண்ணுக்கு கொடுக்கற அதிகபட்ச தண்டனை என்ன தெரியுமா? கண்ணாடி இல்லாத ரூம்ல அவள வைக்கறதுதான். சாப்பாடு, தூக்கம் இல்லாமக்கூட இருந்துடுவேன்... ஆனா, கண்ணாடி இல்லாம என் னால இருக்க முடியாதுப்பா!''னு நிவேதா சொல்ல,

''ஃபேக்ட் ஃபேக்ட் ஃபேக்ட்!''னு வழிமொழிந்தது அவரோட கேங்.

''செல்போன்... எங்களுக்கு ரெண்டாம் சுவாசம். அதில்லைனா... ஐ.சி.யூ-தான்!''னு சுஜி வாக்குமூலம் கொடுக்க,

''ஹேண்ட் கர்ச்சீஃப் அண்ட் வாட்டர் பாட்டில்!''னு சொன்னாங்க ரேவதி.

அவள் 16 - இது இல்ல... நாங்க இல்ல..!

''ஆமா... அடுத்து பென்சில் பாக்ஸ், குச்சி முட்டாய்னு சொல்லு. சின்னப் புள்ளத்தனமா இருக்காம... காலேஜ் கேர்ள் மாதிரி பேசுடி!''னு அவங்களுக்கு கவுன்ட்டர் கொடுத்தாங்க சுஜி.

ராஜி சொன்ன டாப் 3 லிஸ்ட், வேற லெவல்! ''குடும்பம், சுதந்திரம், தன்னம்பிக்கை... இதெல்லாம் இல்லாம என்னால இருக்க முடியாது!''னு அவங்க சொல்ல,

''விடுடி விடுடி... உனக்கே விருது குடுத்துடுவோம்!'னு காலி செஞ்சாங்க கேர்ள்ஸ்.

பொதுவா எல்லா பொண்ணுங்களுமே சொன்ன ரெண்டு விஷயங்கள்... சாப்பாடு அண்ட் தூக்கம்! ''நல்லா சாப்பிட்டு தூங்குங்க. தூங்கி எழுந்து சாப்பிடுங்க. சும்மாவே மதுரை பொண்ணுங்க எல்லாம் திருமலை நாயக்கர் தூண் கணக்கா இருக்கோம்னு பசங்க கம்ப்ளயின்ட் பண்றாங்களாம்!''னு அபி அலர்ட் செய்ய, ஆஃப் ஆன கேர்ள்ஸ் மொத்தமும் கோரஸா ஒப்புக்கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம்...

''மொக்கை போட பாய்ஸ் இல்லாம இருக்க முடியாது!''

அவள் 16 - இது இல்ல... நாங்க இல்ல..!

கிராமத்துப் பொண்ணுங்க என்ன சொல்றாங்கனு கேட்க, வண்டி எடுத்துட்டு உசிலம்பட்டி, செக்கானூரணி, கருமாத்தூர், கோவிலாங்குளம், மானாமதுரைனு ஒரு ரவுண்ட் போனோம். அப்பா, அம்மா, வளர்ப்பு பிராணிகள், டி.வி., எஃப்.எம். ரேடியோனு அவங்க பதில்கள்ல வில்லேஜ் டச். ஆனாலும் அவங்களோட லிஸ்ட்லயும் இருந்தாரு மிஸ்டர் செல்போன்!

சுகன்யா, ''தினமும் காலையில் எழுந்ததும் கோலம் போடாம என்னால இருக்க முடியாது!''னு சொல்ல... திவ்யா, நந்தினி, சசிகலா, ஜோஸ்மலர் எல்லாரும் சொன்னது டி.வி-யை. ''அதுதானே எங்களுக்கு பொழுதுபோக்கு!''னு இவங்க சொன்னாலும்,

''ஆனா... சீரியல் எல்லாம் பார்க்க மாட்டோம்... பாட்டும் புரோகிராம்ஸும்தான்!''னு சீரியல் டைரக்டர்களுக்கு டெரர் கொடுத்தாங்க சரோஜினி, பிரியா, பிஸ்மின், ஜாஸ்மின் அண்ட் கோ.

அடுத்த பட்டறை, கோயம்புத்தூர்லங்கோ!

தியா, ஜிஜி, பூஜா, ராஷ்மினா, அம்ரிதா, திவ்யா, ரோஷினி, அனிஷானு அத்தனை பேரும் சொன்ன டாப் 1 விஷயம்... மேக்-அப்! ''கோடி ரூபாய் கொடுத்தாலும் மேக்-அப் இல்லாம வீட்டு வாசல் தாண்ட மாட்டோம் பாஸ்!''னு சொன்ன கேர்ள்ஸ், செல்போன், சிஸ்டம், ஸ்கூட்டி, ஐபாட், மியூஸிக்னு லிஸ்ட் தந்தாங்க.

அவள் 16 - இது இல்ல... நாங்க இல்ல..!

''நம்புவீங்களா..? தினமும் விதவிதமா டாட்டூஸ் வரைஞ்சுக்காம எங்களால இருக்க முடியாது!''னு அம்ரிதாவும், பூஜாவும் சொல்ல,

''டெய்லி ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலைனா எனக்கு அந்த நாள் முடியாது!''னு ஜில்லானாங்க திவ்யா.

கடைசியா, சென்னை கலாட்டா!

''புக்ஸ் இல்லாம என்னால இருக்கவே முடியாது. ஹலோ... சிலபஸ் புக்ஸை சொல்றேன்னு நினைச்சு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட என்னை மாட்டி விட்டுடாதீங்க... நான் சொல்றது என்டர்டெயின்மென்ட் புக்ஸ்!''னு சொன்னாங்க பியா.

அவள் 16 - இது இல்ல... நாங்க இல்ல..!

''என்னோட மூணாவது கண், கேமரா!''னு கிளிக்கிட்டே பேசின சௌமியா, விஸ்காம் ஸ்டூடன்ட்.

''லேப் டாப் இல்லாம இருக்க முடியுமானு யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன்... ம்ஹும். இதுதான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.''னு அக்ஷிதா சொல்ல,

அவள் 16 - இது இல்ல... நாங்க இல்ல..!

''மொபைல மட்டும் கையில கொடுத்துட்டா போதும்... ஒரு தீவுல கொண்டுபோய் இறக்கிவிட்டாலும் நோ பிராப்ஸ்!''னு சிரிக்கிறாங்க பிரியா... அவங்களோட டச் ஸ்க்ரீன் சாம்சங் மொபைல் காட்டி.

சென்னை கேர்ள்ஸ் மொத்தமா, சத்தமா சொன்ன ஒரு விஷயம்...

''ஃபேஸ்புக்/டிவிட்டர் இல்லாம... முடியவே முடியாது!''

- மோ.கிஷோர்குமார்,
ஸ்டீவ்ஸ் சு. இராட்ரிக்ஸ்
படங்கள்: எஸ்.கேசவசுதன் ரா.நரேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism