Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

சுய கடி அவஸ்தை...தப்பிப்பது எப்படி ?

கொஸ்டீன் ஹவர்

சுய கடி அவஸ்தை...தப்பிப்பது எப்படி ?

Published:Updated:
##~##

''எனக்கு வயது 19. அடிக்கடி நாக்கு மற்றும் கன்ன உட்புறங்களில் பற்களினால் கடித்துக் கொள்கிறேன். இதனால் ஏற்படும் புண்கள் சாப்பிட, பேசக்கூட முடியாமல் அவஸ்தைக்கு உள்ளாக்குகிறது. இந்த பல் கடியில் இருந்து தப்பிப்பது எப்படி..?''

டாக்டர் கே.பி.கோபாலகிருஷ்ணன், சிறப்பு பல் மருத்துவர், சென்னை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எப்போதாவது நாக்கு மற்றும் உள் கன்னத்தில் கடித்துக்கொள்வது என்பது சகஜமானதுதான். ஆனால், கடி மற்றும் புண்களின் எண்ணிக்கை அதிகமாகும் அளவு இருப்பின், உடனடியாக பல்மருத்துவரை அணுகி பல் சீரமைப்புக் குறித்து ஆலோசனை பெறுவது அவசியம். இந்த சுய கடிக்கு பெரும்பான்மையான காரணம், இயல்பிலேயே பல் வரிசை சீராக இல்லாதிருப்பதுதான். பார்ப்பதற்கு அழகான தெத்துப்பல்லாக இருப்பது, உள்ளுக்குள் உங்களையே கடி வாங்கச் செய்யலாம்.

கொஸ்டீன் ஹவர்

பொதுவாக, உணவை பற்கள் அரைக்கும்போது மேல் பல்வரிசைக்கு இணக்கமாக கீழ்வரிசை உடன்பட்டு செயல்பட வேண்டும். இந்த ஒத்திசைவில் தகராறு இருந்தால்... அடிக்கடி நாக்கை, பல் பதம்பார்க்க ஏதுவாகிவிடும். இந்த சங்கடத்துக்கான சுலபத் தீர்வை, பற்களுக்கான கிளிப்புகள் அளிக்கும். முப்பது வயதுக்கு மேல் கிளிப்புகள் முழுமையான ரிசல்டை தருவதில்லை என்பதால், இள வயதிலேயே கிளிப்புகளை அணிந்து பல்வரிசையை சீராக்கிவிடுவது நல்லது.

கொஸ்டீன் ஹவர்

இரண்டாவது காரணம், இயல்பிலேயே அமைந்திருக்கும் பற்களின் கூர்மை. இது அதிகம் பேருக்கு அமைவதில்லை என்ற போதிலும், சரியாக கவனியாது விட்டால்... வாய்க்குள் புண்களை அதிகரித்துவிடும். இவர்கள் சாப்பிடும்போது மட்டுமல்ல, பேசும்போது, சிலசமயம் தூக்கத்தில்கூட பற்களால் வாய்க்குள் காயங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். இதற்கான சிகிச்சையாக கூர்மையான பற்களை கண்டறிந்து, அவற்றை சற்றே மழுங்கடித்தால் போதும்.

சிகிச்சை தவிர்த்து, பொதுவான சில கவனிப்புகளும் இந்த சுய கடி அவஸ்தைகளை தவிர்க்க உதவும். டி.வி. பார்த்தபடியே, புத்தகம் படித்தபடியே, ஏதேனும் விவாதத்தில் இருந்தபடியே சாப்பிடுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவசர அவரசமாக உணவருந்துதல் அதன் நோக்கத்தை பாழடிப்பதோடு, இப்படி கடி வாங்கவும் செய்யும். இந்த புண்கள் உடனடியாக ஆறாது இருந்தாலோ... புண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலோ... மருத்துவ ஆலோசனையுடன் விரைந்து குணமாக்க வேண்டும். ஏனெனில், நீடித்த புண்கள், வேறு பல தொற்றுகளுக்கு இலக்காகி அவஸ்தையை அதிகமாக்கலாம்.''

கல்லூரி பாடங்களுக்கு உதவும்... கள பாடங்கள்!

''நான், இந்த வருடம் பி.ஆர்க் படிப்பில் சேர்ந்துள்ளேன். கல்லூரிப் பாடம் தவிர்த்து, கூடுதலாக வேறென்னென்ன படிப்பு மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டால், எதிர்காலத்தில் எனக்குப் பயனுள்ளதாக இருக்கும்?''

சௌந்தர்ராஜன், உதவிப் பேராசிரியர், அலிம் முகமது சலீக் அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர் கல்லூரி, ஆவடி:

''ஆர்க்கிடெக்ட் என்றாலே படிப்போடு சிறந்த கலை ரசனையும், அவற்றை வெளிப்படுத்தும் நுட்பமும், ஆர்வமும் அவசியம். உள்ளுக்குள் ஒரு ஆர்ட்டிஸ்டாக இருப்பவர்கள்... ஆர்க்கிடெக்ட் உலகில் தனிச்சிறப்போடு மிளிர்வார்கள். எனவே, அதற்கான தேடலோடு கற்றலை மேற்கொள்ள வேண்டும். உங்களின் கல்வித் திட்டத்தில் இருக்கும் பாடங்களையே தற்போதைய அப்டேட்களோடு பொருத்திக் கொள்வது நல்லது. உதாரணத்துக்கு 'ஆட்டோகேட்' (AUTOCAD) படிப்பு, பாடத் திட்டத்தில் இருந்தாலும், தனியாக அந்தந்த ஆண்டுக்கான வெளியீட்டையும் உள்ளடக்கி கற்கவேண்டும்.

கொஸ்டீன் ஹவர்

முப்பரிமாண கட்டட கலைக்கு அவசியமானவற்றை (3D MAX, Revit Architecture)தனியாக கற்றுக்கொள்ளலாம். இதுதவிர, போட்டோ ஷாப் (Photoshop),கோரல்டிரா (Coreldraw),,  ஃப்ளாஷ் (Flash) போன்ற மென்பொருள் படிப்புகளையும் கற்றுத்தெளிவது அவசியம். இவை கட்டடக்கலைக்கு மெருகூட்டுவதோடு இன்டீரியர் டிசைனிங் குறித்த அறிவை மேம்படுத்தும்.

இந்தப் படிப்புகள் ஒரு பேக்கேஜ் என்கிற வகையில் தனியார் பயிற்சி நிலையங்களில் தரப்படுகின்றன. எந்த நிறுவனத்தில் சேர்ந்து படிக்கிறோம் என்பதைவிட, எவ்வளவு சிறப்பாக கற்றுத் தெளிகிறோம் என்பதுதான் முக்கியம். காரணம் வேலைவாய்ப்பில், சர்டிஃபிகேட்டுகளைவிட, குறிப்பிட்ட துறைசார்ந்த திறன் மட்டுமே உரசி அறியப்படும். வெளியே படிப்பதற்கு பதில் மேற்கண்ட மென்பொருள்களை கம்ப்யூட்டரில் நிறுவிக்கொண்டு சுயமாகவும் படிக்கலாம். யூ டியூப் துவங்கி இணையத்திலேயே ஏகப்பட்ட டுட்டோரியல் வீடியோக்கள் கிடைக்கின்றன. இந்த அணுகுமுறையானது... நேரம், அலைச்சல், பணம் என பலவகையிலும் அனுகூலத்தை தரும்.

வரைகலை திறனில் போதுமான தேர்ச்சி இல்லாததாக உணர்ந்தால், அதற்கான சிறப்பு பயிற்சிகள் எடுத்துக் கொள்ளலாம். இவற்றோடு வாய்ப்பு அமையும் போதெல்லாம் நிறைய இடங்களை நேரடியாக சுற்றிப் பார்த்து மாபெரும் கட்டடங்கள், அவற்றின் அலங்கார அமைப்புகள் போன்றவற்றின்

கொஸ்டீன் ஹவர்

முப்பரிமாண அமைப்பை உள்வாங்கிக் கொள்ளலாம். இது ஏட்டுப் படிப்புக்கு பேருதவியாக இருக்கும்.

இணையத்தில் கிடைக்கும் முப்பரிமாண வீடியோ உலாக்கள், தூரதேச கட்டடங்களையும் அலச உதவும். 'கூகுள் ஸ்கெட்ச்சப்' (Google Sketch up) இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள், ஆர்க்கிடெக்ட் உலகத்தில் தற்போது ஆர்வமாக கவனிக்கப்படுகிறது. இதை கற்றுக்கொள்ள தனி வகுப்புகள் தேவையில்லை. அதேபோல இணையம் தவிர்த்து, பாடத்திட்டம் தொடர்பான கல்லூரி நூலகத்தில் குவிந்திருக்கும் துறை சார்ந்த புத்தகங்களில் தொடர்ந்து அலசல் இருக்க வேண்டும். ஆர்க்கிடெக்ட் உலகின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் பத்திரிகைகளையும் வாசிப்பது நல்லது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism