Published:Updated:

வெற்றிப் பெண் மாலதி !

சா.வடிவரசு, படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

##~##

''வாலிபால், பால்பேட்மின்டன் ரெண்டு விளையாட்டுகளும் என் களம். மாநில அளவில் பல வெற்றிகள் பார்த்து தமிழ்நாட்டுக்காக விளையாடிட்டு இருக்கேன். சீக்கிரமே தேசிய அளவு டீம்ல இடம் பிடிச்சு இந்தியாவுக்காக விளையாடணும்!''

- கிரவுண்டில் வியர்வை துடைத்து பேச ஆரம்பித்தார் மாலதி. சென்னை, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியின் எம்.பி.ஏ, இரண்டாம் ஆண்டு  மாணவி.

கோயம்புத்தூர் பெண்ணான மாலதிக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் வந்தது, தன் ஸ்கூல் சீனியர்களைப் பார்த்து. ''வாலிபால், ஷட்டில்னு ஸ்கூல்ல சீனியர்ஸ் விளையாடுறதை வேடிக்கை பார்த்துதான் ஆர்வம் வந்தது. பி.இ.டி டீச்சர்கிட்ட என் ஆசையைச் சொன்னேன். அவங்க தந்த பயிற்சியால டிஸ்ட்ரிக்ட் லெவல் வாலிபால்  போட்டியில சிறப்பா விளையாடி, மாநில அளவிலான அணியில் இடம் பிடிச்சேன். கிட்டத்தட்ட ஏழு  வருஷமா தமிழக அணிக்காக விளையாடிட்டு இருக்கேன்'' என்பவருக்கு பால்பேட்மின்டன் அறிமுகமானது கல்லூரியில்.

வெற்றிப் பெண் மாலதி !

''கோவை, நிர்மலா கலைக் கல்லூரியில பி.காம் சேர்ந்தப்போதான் பால்பேட்மின்டன் கத்துக்கிட்டு, காலேஜ் டீம்ல இடம் பிடிச்சேன். சப்ஸ்டிட்யூட்டா விளையாடிட்டு இருந்த நான், ஃபைனல் இயர்ல மெயின் பிளேயர் ஆனேன். பாரதிதாசன் பல்கலைக்கழக அணியோட விளையாடி பெற்ற வெற்றி, பால்பேட்மின்டன்லயும் மாநில அணியில் இடம் வாங்கிக் கொடுத்தது. செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்க ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஸீட் கிடைச்சது. கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் எல்லாம் இங்க எனக்கு இலவசம்'' என்று உற்சாகமானவர்,

''போன வருஷம் ஆந்திராவுல நடந்த பால் பேட்மின்டன் போட்டிதான் நான் முதன்முதலா கலந்துகிட்ட தேசிய அளவிலான போட்டி. அதில் தமிழக அணி மூணாவது இடம் பிடிச்சாலும், அந்தத் தொடர்ல சிறப்பா விளையாடினதுக்காக 'சியர் இந்தியா' விருது எனக்குக் கிடைச்சுது.

வெற்றிப் பெண் மாலதி !

இந்த வருஷம் கர்நாடகாவுல நடந்த தேசிய அளவிலான பால் பேட்மிட்டன் போட்டியில, இறுதிப் போட்டியில வலிமை வாய்ந்த கர்நாடக அணியை எதிர்த்து விளையாடினப்போ கையில அடிபட்டுடிச்சு. எல்லாரும் சப்ஸ்டிட்யூட் கொடுத்துட்டு போய் ரெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க. ஆனாலும் நான் விடாம விளையாடினேன். தமிழக அணி முதல் பரிசை வாங்கிச்சு. அந்தத் தொடர்ல 'சிறந்த விளையாட்டு வீரர்’ விருது எனக்குக் கிடைச்சுது. பெற்றோ ருக்கும், பயிற்சியாளர் முரளி தரன் சாருக்கும் ஒவ்வொரு பரிசு வாங்கும்போதும் நன்றி   சொல்லக் கடமைப்பட்டிருக் கேன்!'' என்றவரை,

வெற்றிப் பெண் மாலதி !

''தமிழகத்தின் விளையாட்டு விடிவெள்ளி மாலதி!'' என்று கோஷம் போட்டு அவரின் தோழிகள் கலாய்க்க, அவர்களை மாலதி துரத்த, கிரவுண்டில் ஒரு கேட் அண்ட் மவுஸ் விளையாட்டு!

அடுத்த கட்டுரைக்கு