Published:Updated:

டீன் டாக் - பிராண்ட் பிரயம் !

மா.நந்தினி, படங்கள்: செ.சிவபாலன்

பிரீமியம் ஸ்டோரி

'பிராண்ட் ஃபீவர்’. 

##~##

- இதுதான் இப்போ டீன் கைய்ஸை ஆட்டி வைக்கிற டெங்கு ஃபீவர்! கூலிங் கிளாஸ்ல இருந்து... ஷூ வரைக்கும் பிராண்ட் பெயர்கள் சொல்லி அவங்க அளக்குற அலப்பறைகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம்!

''எங்ககிட்ட கேளுங்க அதைப் பத்தி... அவங்களோட பிராண்ட் பந்தாவால பாதிக்கப்பட்ட அவலத்தை புட்டுப் புட்டு வைக்கிறோம்!''னு 'டீன் டாக்'குக்கு ரெடியானாங்க மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி கேர்ள்ஸ்.

''கண்ணு கூலிங்கா இருக்கறதுக்கு போடுறதுதான் கூலிங் கிளாஸ்னு என் சிற்றறிவு நினைக்குது. ஆனா, இந்தப் பசங்க அதை எந்நேரமும் கையிலதான் வெச்சுருப்பாங்க. 'ஜில்லுனு ஒரு காதல்’ சூர்யா நினைப்புல அதை ஒரு விரலால வேற அப்பப்போ சுத்திட்டு இருப்பாங்க. அப்ப அந்தப் பக்கம் ரெண்டு பொண்ணுங்க கிராஸ் ஆயிடக் கூடாது.... உடனே, 'டேய் மச்சான். இது ரேபான் கிளாஸ்...’னு டைமிங்கா சொல்லுவாங்க டீட்டெயிலு. அதோட விடாம, 'பட், எனக்கு இது பிடிக்கல. நீ வேணும்னா யூஸ் பண்ணிப் பாரு!’னு தர்மம் எல்லாம் வேற பண்ணுவாங்க.

நிஜத்துல... ரோட்டோரமா கடை போட்டு, ஏதோ பிராண்ட் அம்பாஸிடர் மாதிரி, தானே அதுல ஒரு கண்ணாடியை மாட்டிக்கிட்டு விளம்பரம் பண்ணி வியாபாரம் பார்ப்பாரே... அந்த அண்ணாகிட்ட வாங்கற லோக்கல் கூலர்ஸை அடிச்சுக்கவே முடியாது!''னு ஆரம்பிச்சு வெச்சாங்க சுபாஷினி.

டீன் டாக் - பிராண்ட் பிரயம் !

''ஒரு பைக் வாங்கறதுக்கு பிள்ளையார் கோயிலுக்கு நேர்த்திக்கடன் எல்லாம் வெச்சு, அப்பாகிட்ட அழுது அடம் பிடிச்சு வாங்குவாங்க பசங்க. ஆனா, வாங்குனதுக்கு அப்புறம், 'ஆக்சுவலி, எனக்கு இந்த பல்சர் புடிக்கவே இல்ல. எங்கண்ணாதான், டேய் இதைப் போய் புடிக்கலைனு சொல்றியேடா..!னு சமாதானப்படுத்தி வாங்கிக் கொடுத்துட்டான்’ அப்படினு ரொம்ப அலுத்துக்குவாங்க. இதுல அவங்க சொல்ல வர்ற செய்தி ரெண்டு. ஒண்ணு... அவங்க பல்சர் பைக் வெச்சுருக்காங்களாமாம். ரெண்டு... பல்சர் பைக்கே திருப்தி ஆகாத அளவுக்கு ரிச் டேஸ்ட் அவங்களோடதாமாம்... முடியல!''னு 'கிர்’ரானாங்க ஐஸ்வர்யா.

டீன் டாக் - பிராண்ட் பிரயம் !

''பர்த் டே, ஃப்ரெண்ட்ஸ் டேவுக்கு பசங்களுக்கு ஷர்ட் கிஃப்ட் பண்ணலாம்னு, அவங்ககிட்ட சைஸ்தான் கேட்பாங்க பொண்ணுங்க. உடனே இருக்கறதுலயே ராயல் கம்பெனி எதுனு மொபைல்ல கூகுள் பண்ணி, சைஸோட சேர்த்து, 'யூஷ§வலா நான் இந்த பிராண்ட்தான் போடுவேன்...’னு பிட் போட்டுடுவானுங்க''னு பொங்கி எழுந்தாங்க சுபானாவும், சுகன்யாவும்.

''எவனோ ஒருத்தன், ஒருநாள் பெல்ட் போட மறந்துட்டான். உடனே அதையே ஃபேஷனாக்கி இப்போ எல்லா பசங்களும் 'லோ வெயிஸ்ட் பேன்ட்’னு போட்டுட்டு கொடுக்கற அலப்பறை... அட்ராஷியஸ்! உள்ள போட்டிருக்கிற இன்னர் பிராண்ட்கூட தெரியற மாதிரி திரியறது... வன்மையா கண்டிக்கத்தக்கது!''

- இதை ஒட்டு மொத்த கேர்ள்ஸோட குரலா பதிவு செய்யச் சொல்லி கோரிக்கை.

''அதேபோல வாட்ச், ஷூ, ஹெல்மெட், மொபைல்னு எல்லாமே பிராண்டடா போட்டாதான் பொண்ணுங்க மதிப்பாங்கனு பசங்ககிட்ட இருக்கிற மூடநம்பிக்கையை முதல்ல மாத்திக்கணும். பொண்ணுங்கள்ல, 250 ரூபாய் குர்தா எங்க இருக்குனு தேடித் தேடிப் பார்த்து வாங்குற கஞ்சூஸ் கைஸ்தான் இப்ப அதிகம். இன்னொரு முக்கியமான விஷயம்... இப்போ எல்லாம் கேர்ள்ஸுக்கு ரொம்ப லோக்கலா, தரை டிக்கெட் பார்ட்டிங்களத்தான் பிடிக்குது. ஆனா, அது தெரியாம சில கைய்ஸ் பிராண்ட் பத்தியே பேசி ஃப்ளாப் வாங்குறாங்க. திருந்துங்கப்பா!''னு நெத்தியடியா சொல்லி முடிச்சாங்க தீபிகா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு