Published:Updated:

காட்டையே கேமராக்குள்ள பிடிக்கணும் !

நா.சிபிச்சக்கரவர்த்தி,படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

காட்டையே கேமராக்குள்ள பிடிக்கணும் !

நா.சிபிச்சக்கரவர்த்தி,படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

Published:Updated:
 ##~##
போ
ட்டோகிராஃபி... ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே கலக்கிக் கொண்டிருந்த ஃபீல்டு! தற்போது, கேமராவும் கையுமாக அலையும் பெண்களை அதிகமாகவே பார்க்க முடிகிறது... அதுவும் புரொஃபஷனல் போட்டாகிராஃபர்களாக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி எதிர்காலத்தில் கலக்கும் வேகத்துடன், இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலரிடம், அவர்களுடைய ஆர்வத்தைக் கேட்டோம்... அனைவரையும் ஒரே இடத்தில் உட்கார வைத்து!

''இன்ஜீனியரிங் படிச்சாலும், என் ஆர்வம் மட்டுமில்ல... லட்சியமும் போட்டாகிராஃபிதான். சின்ன வயசுல எனக்கு ஒரு டிஜிட்டல் கேமரா கிடைச்சுது. கண்ணுல பட்டதை எல்லாம் கிளிக் பண்ணினேன். எல்லாரும் சூப்பரா இருக்குனு சொன்னாங்க. ஆர்வம் இன்னும் அதிகமாச்சு. புள்ள ஆசைப்படுதேனு வீட்டுல 'எஸ்.எல்.ஆர்.' கேமரா வாங்கிக் கொடுத்தாங்க. முழுக்க அலசி ஆராய்ஞ்சு, ஒவ்வொண்ணா கத்துக்கிட்டேன்.

காட்டையே கேமராக்குள்ள பிடிக்கணும் !

சிரிக்கற குழந்தை, முகம் சுருங்கிய மூதாட்டினு 'கிளிஷே கிளிக்’குகளா இல்லாம... வித்தியாசமான காட்சிகளைப் பதிவு பண்ணணும் என்பதுதான் என் தேடல். அதுபோல சில படங்கள் என் கேமராவில் சிக்கியும் இருக்கு. பெரிய ஸ்டார்களுக்கு போர்ட்ஃபோலியோ பண்ணணும்ங்கறது உட்சபட்ச ஆசை. ம்... பார்ப்போம்!'' என்று சொன்னார் இறுதியாண்டு கணினிப் பொறியியல் மாணவி, அனிதா மூர்த்தி. அவரைத் தொடர்ந்தார், இரண்டாம் ஆண்டு விஸ்காம் மாணவி ப்ரியதர்ஷினி...

காட்டையே கேமராக்குள்ள பிடிக்கணும் !

'நிறைய புகைப்படப் போட்டிகளில் கலந்து, பரிசுகள் வாங்கியிருக்கேன். ஆனாலும், வைல்டு லைஃப் போட்டோகிராஃபி மேலதான் எனக்குக் காதல். காட்டுக்குள்ள போய், சின்னப் பூச்சியில் இருந்து சிங்கம் வரை விதம்விதமான விலங்குகள், பறவைகள்னு அந்தக் காட்டையே என் கேமராவுக்குள்ள பிடிச்சுட்டு வரணும். ஆனா, இதுவரைக்கும் காட்டுக்குள்ள போற சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவே இல்ல'' என்று தான்  காத்திருக்கும் கதை சொன்னார்.

''எங்க அப்பா போட்டோகிராஃபர். அதனால நான் மீன் குஞ்சு!''

காட்டையே கேமராக்குள்ள பிடிக்கணும் !

- சிரித்தபடியே ஆரம்பித்த இரண்டாமாண்டு விஸ்காம் மாணவி சௌமியா,

''ஒரு கவிதையைப் படிச்ச உடனே காதல், சோகம், தவிப்பு, அன்புனு எப்படி மனசுக்குள்ள ஏதாவது உணர்வை அது கடத்துதோ, அதேபோல புகைப்படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தணும். அப்படிப்பட்ட படங்களா எடுக்கணும்னுதான் மெனக்கெடுறேன். 'ஆரோகணம்' படத்துக்கான புகைப்படப் போட்டியில கலந்துட்டு, ரெண்டாவது பரிசைத் தட்டினேன். 'டெல்லி டிசைன் சர்க்கிள்’ அமைப்பு, இந்திய அளவுல நடத்திய புகைப்படப் போட்டியில தேர்வான சிறந்த 10 படங்கள்ல, என் படமும் ஒண்ணு. 'பெஸ்ட் பிக்சர் அவார்டு’ கொடுத்தாங்க. இதுபோல இன்னும் நிறைய பரிசுகளுக்கான தகுதியோட சிறந்த புகைப்படங்கள் எடுக்கணும்கிறதுதான் என் ஆசை!'' என்று முடித்த சௌம்யாவுக்கு, வாழ்த்துச் சொல்லி தொடங்கினார் இறுதியாண்டு விஸ்காம் மாணவி அபிநயா ஷங்கர்.

காட்டையே கேமராக்குள்ள பிடிக்கணும் !

''செல்போன் கேமராவில் போட்டா எடுத்துப் பழகின பொண்ணு நான். இப்போ விஸ்காம் கோர்ஸ் தேர்வு பண்ணி, என் போட்டோகிராஃபி இலக்கை நோக்கிப் போயிட்டு இருக்கேன். வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை கேப்சர் பண்றது என் ஸ்டைல். தாலி கட்டும் தருணம்; குழந்தை முதன் முதலா அடி வைத்து நடக்குற தருணம்; மாணவர்கள், பொதுத்தேர்வு முடிவுகள் பார்க்கும் தருணம்னு இப்படி ஒவ்வொருத்தர் வாழ்க்கையின் முக்கிய நொடிகளையும் புகைப்படமாக்கி, சம்பந்தப்பட்டவங்களுக்கு அதைப் பரிசளிக்கணும்கறது என் ஆசை!''

- கண்கள் சிமிட்டிச் சொல்கிறார் அபிநயா.

காட்டையே கேமராக்குள்ள பிடிக்கணும் !

''நான் படிக்கிற படிப்புக்கும் என் ஆர்வத்துக்கும் சம்பந்தமே இல்லை'' என்று ஆரம்பித்த மெடிக்கல் காலேஜ் பி.ஜி. முதலாம் ஆண்டு மாணவி ஹரிணி, ''இருந்தாலும், புகைப்படத் துறையில சொல்லிக்கற அளவுக்கு பெயர் வாங்கணும்ங்கறதுதான் என் ஆசை. இதுவரைக்கும் கல்லூரி அளவுல புகைப்படப் போட்டியில பரிசை பேக் பண்ணியிருக்கேன்'' என்று சுருக்கமாக தன் உரையை முடிக்க... தொடர்ந்தார் ஸ்ருதி.

காட்டையே கேமராக்குள்ள பிடிக்கணும் !

''விஸ்காம் ஃபைனல் இயர் படிக்கறேன். பள்ளிக்கூட ஓவியப் போட்டிகள்ல பரிசுகளை குவிச்சிருக்கேன். திறமையைப் பார்த்துட்டு, அப்பா விஸ்காம் சேர்த்துவிட்டார். இங்கே போட்டோகிராஃபியும் கத்துக்கிட்டேன். அது என் திறமையை டபுள் ஆக்குச்சு. யெஸ்... நான் எடுக்கிற புகைப்படங்களை அப்படியே வரையவும் செய்வேன். அப்படி டைரக்டர் வெங்கட் பிரபுவை போட்டோ எடுத்து, வரைஞ்சு கொடுத்தேன். இதுபோல சில பிரபலங்களுக்கு புகைப்படம் - ஓவியம் பரிசளிச்சிருக்கேன். எதிர்காலத்துல ரெண்டுலயுமே நல்ல பெயர் வாங்கணும்!'' என்று ஆசை சொன்னார் ஸ்ருதி!

கேமரா கன்னிகள்!

காட்டையே கேமராக்குள்ள பிடிக்கணும் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism