Published:Updated:

கொஸ் 'டீன்ஸ்'

கொஸ் 'டீன்ஸ்'

கொஸ் 'டீன்ஸ்'

கொஸ் 'டீன்ஸ்'

Published:Updated:
##~##

''என் உயிர்த்தோழியின் சீரியஸான பிரச்னை இது. சின்னச்சின்ன ஏமாற்றங்கள்கூட, அவளை உடைத்துப் போட்டுவிடுகின்றன. பஸ் லேட்டாவது, சினிமா டிக்கெட் கிடைக்காதது போன்ற ஒன்றுமில்லா விஷயங்களுக்குக்கூட 'எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என கண்ணீர், தனிமை, தூக்கம் தொலைவது போன்ற அவளது ரியாக்ஷன்கள்... பிறரை எரிச்சலூட்டுகின்றன. ஆனால், ஒரு நெருக்கமான தோழியாக இதிலிருந்து அவளை வெளிக்கொண்டு வர விரும்புகிறேன். வழிகாட்டுவீர்களா?!''

- எஸ்.வான்மதி, கோவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெ.ரெபேக்காள், குடும்ப நல ஆலோசகர், 'சாக்சீடு’ தொண்டு நிறுவனம், திருச்சி:

''உங்கள் தோழியின் பிரச்னைக்கு பிரதான காரணம், குடும்ப வளர்ப்பு முறையாக இருக்கலாம். முக்கியமாக, சிறுவயதிலிருந்தே அதிகப்படியான செல்லம் தரப்பட்டிருக்கலாம். 'வேண்டும்' என்று அவர் கேட்டதற்கும் மேலாகவே, குடும்பத்தினர் உடனுக்குடன் பூர்த்தி செய்திருக்கக் கூடும். ஏதாவது ஒன்று கிடைக்காது போனாலோ, தாமதித்தாலோ... அதற்காக மிகையாக பரிதவித்து, வேறு ஒன்றை பதிலியாக செய்து, அவரு டைய பெற்றோர், தங்கள் பாசத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கவும் கூடும்! ஒரே குழந்தை கொண்ட குடும்பத்தில், 'குழந்தை வளர்ப்பை பிரமாதமாக செய்கிறோம்' என்கிற பகட்டுக்காகவும், அந் தஸ்தின் அடையாளமாகவும் இம்மாதிரியான அபத்தங்களில் பெற்றோர் ஈடுபடுவதுண்டு.

கொஸ் 'டீன்ஸ்'

இப்படிப்பட்ட பெற்றோர், மறைமுகமாக தங்கள் குழந்தைகளுக்கு கெடுதலையே செய்கிறார்கள் என்பதை உணரவேண்டும்! இந்த முறையிலான குழந்தை வளர்ப்பினால், பிற்பாடு ஏதேனும் தோல்வியை சந்திக்க நேரிட்டால், எதிர்கொள்ளும் திராணியற்று முடங்கவே நேரிடும். எனவே, குழந்தைகள் எதைக் கேட்டாலும் உடனடியாக வாங்கித் தருவதற்கு பதில், சரியான கால அவகாசம் தந்து நிறைவேற்றுவது நல்லது.

கேட்டது கிடைக்காவிட்டால், அதற்கான விளக்கத்தை தந்து, அந்த ஏமாற்றத்தை குழந்தைக்கு புரியச் செய்ய வேண்டும். இம்மாதிரியான  ஏமாற்றங்கள் சகஜமானது என்பதையும் நடைமுறையில் புரிய வைக்க வேண்டும். சிறுவயதிலேயே 'இல்லை, முடியாது, கிடைக்காது’ போன்ற நடைமுறை விஷய அனுபவங்களோடு, வார்த்¬தகளும்கூட பழகி இருக்க வேண்டும். இந்த அனுபவங்கள் பின்னாளில்

கொஸ் 'டீன்ஸ்'

அவர்கள் சுயமாக வெளியுலகை எதிர்கொள்ளும்போது சரியான பக்குவத்தைப் பழக்கி, எதிர்கொள்ளும் ஏமாற்றத்தின் பாதிப்பைக் குறைக்கச் செய்யும்!

இரண்டாவது காரணம், தனிப்பட்ட நபரின் சுயம் சார்ந்தது. வாழ்க்கையில் ஒரு விஷயம் நடக்க எந்தளவுக்கு வாய்ப்பு உள்ளதோ... அதே அளவுக்கு நடக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு இல்லையா? வாழ்வில் இம்மாதிரியான எதிர்மறை அம்சங்களும் உண்டு என்கிற யதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டால், 'எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என் பதான புலம்பல்கள் விலகிப்போகும். 'இதைவிட சிறப்பான மற் றொன்று நமக்காக காத்திருக்கலாம்' என்பது போன்ற தன்னைத்தானே தேற்றிக்கொள்ளக்கூடிய வழிமுறைகளும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் வழங்கப்படலாம்.

'நம்மை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரம், நமக்குக் கிடையாது' என்ற நிதர்சனத்தை ஒப்புக்கொள்வது, உலகிலேயே உன்னதமான உபாயம்! எந்தவொன்றுக்கும் அதிகம் எதிர்பார்ப்பவர்களாக சிலரின் சுபாவம் இருக்கும். நடக்கும் ஒவ்வொன்றும் தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். இவையெல்லாம் ஒருவகையான மனப்பான்மை பிறழ்வே. இதற்கு மனநல ஆலோசனை தேவைப்படும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism