Published:Updated:

டீன் டாக்

- மோ.கிஷோர்குமார், படங்கள்: பா.காளிமுத்து

டீன் டாக்

- மோ.கிஷோர்குமார், படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
##~##

'டீன் டாக்'குக்கான டாபிக் சொன்னதும், ''ஹை... இது சூப்பர் மேட்டரா இருக்கே!''னு உற்சாகமானாங்க மதுரை, சௌராஷ்டிரா காலேஜ் கேர்ள்ஸ்.

''அந்த நாள்ல நீங்க என்னவெல்லாம் பண்ணுவீங்க..?!''னு மேற்கொண்டு கொஞ்சம் நாம எடுத்துக் கொடுக்க...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இது, நல்ல கேள்வி! இதுக்கு, எங்கள் குழுவைச் சேர்ந்த, 'கல்லூரிப் பெண்கள் நலத்துறை அமைச்சர்' (?!) கனிமொழி பதில் சொல்வார்!''னு எல்லாரும் அவரை முன் நிறுத்த... ஆரம்பமாச்சு அரட்டை!

''பைக் இல்லாத சாலை... நினைக்கவே சந்தோஷமா இருக்குல்ல. அலற வைக்கற ஹாரன், பயமுறுத்துற ஸ்பீடு, ஓவர்டேக் பண்ணுற திமிருனு எதுவும் இல்லாம அன்னிக்கு முழுக்க ரோடுகள் எல்லாம் விடுதலையாகி இருக்கும். அதனால ஸ்கூட்டியை எடுத்துட்டு நாள் முழுக்க பொண்ணுங்க எல்லாரும் சுதந்திரமா சிட்டியில சந்தோஷமா ரவுண்ட்ஸ் வருவோம். நெனைச்சுப் பாருங்க... எவ்வளவு நல்லாயிருக்கும்!''னு சொல்லிக்கிட்டே... ஹீரோயின், 'கனவு சாங்' பாடறது கணக்கா ஆக்ஷன் கொடுத்தாங்க கனிமொழி!

டீன் டாக்

''பொண்ணுங்க எல்லாரும் தைரியமா எங்க வேணும்னாலும் போயிட்டு வரலாம்னு, வீட்டுல அனுமதி கொடுத்துடுவாங்க. அதனால, பசங்க டாப் அடிக்கற இடங்களுக்கு எல்லாம் போய், அங்க என்னதான் இருக்குனு பார்க்கணும். டீக்கடை, தெருமுக்கு, ஆட்டோ ஸ்டாண்ட், கிரவுண்ட்னு எல்லா இடத்துக்கும் நைட்டியோட போய் நின்னுட்டு, அவிய்ங்கள மாதிரியே அக்கம்பக்கம் அதிர 'கெக்க புக்க'னு அரட்டை அடிக்கணும். ஒயின்ஷாப் எப்படி இருக்குனு பார்த்துட்டு வந்து, ஃபேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போடணும். நைட் ஷோ படத்துக்குப் போயிட்டு, கண்ணெல்லாம் சொக்க வீட்டுக்கு வரணும்''னு மூச்சுவிடாம பெரிய லிஸ்ட் கொடுத்தாங்க பிரேமலதா. ''எந்த மாஸ் ஹீரோவோட படத்துக்கும் ஓபனிங் ஷோ பார்க்க பெண்களை வரவிடாம, பசங்க மட்டுமே தியேட்டரை நிறைச்சுடுற அநியாயம்... பெரிய அநியாயம்! அதனால, அவங்க இல்லாத அந்த நாள்ல அஜீத், விஜய், சூர்யானு எங்களுக்குப் பிடிச்ச ஹீரோக்களோட படங்களை எல்லாம் ரிலீஸ் பண்ணி, தியேட்டர் முழுக்க முழுக்க பொண்ணுங்களா உட்கார்ந்து, தலையில ரிப்பன் கட்டிட்டு 'தலைவா தலைவா’னு தொண்டை கிழியக் கத்தி, விசில் அடிச்சி, குத்துப்பாட்டுக்கு எழுந்து ஆடி, பட்டையைக் கௌப்பணும்!''னு ஸ்டெஃபி செம பிளான் சொன்னாங்க.

அர்ச்சனா, பவளஸ்ரீ, மணிமாலா மூணு பேரும் தனியா சீரியஸ் டிஸ்கஷன் நடத்த, ''என்ன மேட்டர்?''னு கேட் டோம்.

''பொருள் அபகரிப்பு தீர்மானம் நிறைவேறிட்டு இருக்கு!''னு பதில் வந்துச்சு... கோரஸா!

டீன் டாக்

''நாட்டுல நிலஅபகரிப்பு கேஸ் ஏகப்பட்டது குவிஞ்சுட்டிருக்கு... நீங்களும் சிக்கிடப் போறீங்க ஆத்தா?''னு நாம ஏதோ சீரியஸா அட்வைஸ் கொடுக்க...

''எங்களுக்கு எல்லாம் வீட்டுல சகோதரச் சீமான்கள் இருக்காங்க. இந்த ஆணாதிக்க சமுதாயத்துல பசங்களுக்கு மட்டும் கிடைக்கற பல வசதிகளை, அவங்க மட்டுமே வீட்டுல அனுபவிச்சுட்டு இருக்காங்க. அதனால, அவங்க எல்லாம் இல்லாம போற அந்த நாள்ல... 'ஐபாட்’, மொபைல், டி.வி ரிமோட், ஸ்பெஷல் டிஷ், பாக்கெட் மணினு மொத்தத்தையும் நாங்க அப கரிக்கணும்''னு மணிமாலா விளக்கம் கொடுக்க...

''அட, இதுலயும்கூட ஆணாதிக்க கொடுமையா..?'' என்று நிஜமாகவே 'உச்' கொட்டினோம்!

''முக்கியமான விஷயம்... பசங்க இல்லைங்கறதால பொண்ணுங்க எல்லாம் முதல்நாளே மொபைலை ரீ-சார்ஜ் பண்ணி வெச்சுக்கணும்!''னு ரேணுகா ஞாபகப்படுத்த,

''அன்னிக்கு நாம எல்லோரும் செம ஸ்டைலா டிரெஸ் போடணும். ஜீன்ஸ், ஸ்கர்ட்ஸ், மேக்-ஓவர், ஹேர் ஸ்டைல்னு கலக்கி எடுக்கணும்!''னு ஷோபனா சொல்ல,

''ஆனா... ஆனா... அதையெல்லாம் நாம மட்டுமே பார்த்துட்டிருந்தா... எப்படி? ரோட்டுல ஒருத்தன் இருக்க மாட்டானே!''னு ஸ்டெஃபி சொல்ல,

''அச்சச்சச்சச்சோ!''னு கோரஸா சொன்னாங்க கேர்ள்ஸ்!

அத்த்த்த்து!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism