Published:Updated:

ஆர்வம் + உழைப்பு = விருது !

பி.விவேக் ஆனந்த், படங்கள்: தே.தீட்ஷித்

ஆர்வம் + உழைப்பு = விருது !

பி.விவேக் ஆனந்த், படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:
##~##

''என்.எஸ்.எஸ். என்பதை, ஒரு நிர்ப்பந்தமா நினைக்காம, என்னோட சமூகக் கடமையா, பொறுப்பா நினைச்சு காலேஜ்ல செயல்படுத்தினேன். அதுதான்... தேசிய அளவில் சிறந்த என்.எஸ்.எஸ் மாணவிங்கற அங்கீகாரத்தைக் கொடுத்து... ஜனாதிபதி கையால விருதையும் வாங்கிக் கொடுத்திருக்கு!''

ஆர்வம் + உழைப்பு = விருது !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறார் ரூமினா அர்மின். திருச்சி, காவேரி கல்லூரியின் பி.காம். இறுதியாண்டு மாணவி.

''நான் பிறந்தது தமிழ்நாடு என்றாலும், 13 வயது வரை வாழ்ந்தது... வடமாநிலங்களில்தான். 13 வயசிருக்கும்போது... அப்பா இறந்துட்டார். அப்போ மகாராஷ்டிராவில் இருந்த நாங்க, சொந்த ஊரான திருச்சிக்குத் திரும்பிட்டோம். அம்மா, அக்கா, நான் மூணு பேரும் அப்பாவோட இழப்பால சோர்ந்துடாம... பாஸிட்டிவ் நம்பிக்கையோட வாழ்க்கையை சந்திச்சோம்.

கல்லூரிக்கு வந்த பிறகு, அறிவுத் திறன் சார்ந்த போட்டிகள் பலதுலயும் கலந்துக்கிட்டு பரிசுகளை குவிச்சேன். 'க்விஸ் மாஸ்டர்' பேராசிரியர் பாலகிருஷ்ணன் சார், என்னோட வழிகாட்டியா இருந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தினு மூணு மொழியுமே சரளமா தெரியும்கிறதால, பல கூட்டங்கள், கருத்தரங்குகள்னு மொழிபெயர்ப்பாளர் பணியையும் அழகா செய்திருக்கேன்.

காலேஜ் என்.எஸ்.எஸ்-ல சேர்ந்தப்போ, இந்த சமூகத்தில் இறங்கி பணியாற்ற வாய்ப்பு கிடைச்சுது. கிராம மக்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்டுதல், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரசாரம்னு எங்களுக்குக் கொடுத்த எல்லா பணிகளையும் ஆர்வத்தோடயும், 'மாற்றம் வேண்டும்' என்கிற உண்மையான அக்கறையோடயும் செய்தேன். அதனால லாங்வேஜ், ஃபீல்ட் வொர்க்னு எல்லாத்துலயும் முன்னிலை மாணவியா என்னைக் காண்பிக்க முடிஞ்சுது.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த என்.எஸ்.எஸ். மாணவர்களின் தனித்திறனை சோதிப்பாங்க. அதுல முன்னிலையில் இருக்கறவங்களையும்... குழுவாக செயல்படுறதுல சிறந்து விளங்கற மாணவர்களையும் தேர்ந்தெடுப்பாங்க. அப்படித்தான் போன வருஷம் தேசிய அளவில் மங்களூருவில் நடந்த என்.எஸ்.எஸ் கேம்ப் மற்றும் கருத்தரங்கம் ரெண்டுலயும் நான் பங்கேற்றது. தமிழகத்திலிருந்து 'என்.எஸ்.எஸ் மாநிலப் பிரதிநிதி'ங்கற கௌரவத்தோட என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பினாங்க. அங்கே தமிழ்நாட்டுப் பெருமைகளையும், தற்போதைய பிரச்னைகளையும் பட்டியலிட்டுப் பேசினேன். வந்திருந்த எல்லா மாநில பிரதிநிதிகளும் என்னைப் பாராட்டுற அளவுக்கு இருந்துச்சு என்னோட நடவடிக்கைகளும்... பேச்சும்!'' எனும் ரூமினாவுக்கு, கடந்த 2012-ல் வாழ்க்கையின் இன்னொரு மிகமுக்கிய புரமோஷனும் கிடைத்திருக்கிறது. அது, திருமணம்!

ஆர்வம் + உழைப்பு = விருது !

''கடந்த அக்டோபர் மாதம் எனக்குத் திருமணம் நடந்துச்சு. அடுத்த ரெண்டு நாள்லதான்... 'நீங்கள் தேசிய அளவில் சிறந்த என்.எஸ்.எஸ். மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். இதற்காக ஜனாதிபதியின் கைகளால் தங்களுக்கு ராஷ்ட்ரபதி பவனில் விருது வழங்கப்படும்'னு அந்த செய்தி வந்துச்சு. நவம்பர் 19, ஜனாதிபதிகிட்ட விருது வாங்கின அந்தத் தருணம்... எனக்கு ரொம்பவே பொக்கிஷம்'' எனும் ரூமினாவுக்கு ஒரு வருத்தமும் இருக்கிறது!

ஆர்வம் + உழைப்பு = விருது !

''போன வருஷம், அமெரிக்காவின் வாஷிங்டன்ல 20 நாள் கருத்தரங்கம் ஒண்ணு ஏற்பாடு செய்திருந்தாங்க. இதுக்காக அமெரிக்கத் தூதரகங்கள் மூலமா ஒவ்வொரு நாட்டுல இருந்தும் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தாங்க. ஒவ்வொருத்தரும் தங்கள் நாட்டின் கலாசாரம், சமூக நிலைப்பாடு பற்றி அங்கே கலந்துரையாடணும். இதுக்காக ஆளுமைத்திறன் போட்டிகள், மொழியறிவு, சமூகப் பார்வைனு பல சுற்று போட்டிகளை வெச்சுதான் பிரதிநிதி களைத் தேர்ந்தெடுத்தாங்க. இதில் இந்தியா சார்பா கலந்துக்கறதுக்கு நான் தேர்வானேன். ஆனா, வாஷிங்டனுக்கு தனியா போக வேண்டி இருந்ததால, கடைசி நேரத்துல எங்க வீட்டுல மறுத்துட்டாங்க'’

- ஆறாத ஏமாற்றம் அவர் கண்களில்!

ஆர்வம் + உழைப்பு = விருது !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism