Published:Updated:

அவள் டீன்ஸ்... பிரமாத ஃபில்டர் காபி !

நா.சிபிச்சக்கரவர்த்தி, க.அபிநயா படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

அவள் டீன்ஸ்... பிரமாத ஃபில்டர் காபி !

நா.சிபிச்சக்கரவர்த்தி, க.அபிநயா படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

Published:Updated:
 ##~##

''பூ பூக்கும் ஓசை... அதை கேட்கத்தான் ஆசை''

- கலகலப்பாக பாடியபடியே நம் முன் வர்றாங்க சென்னை, டபிள்யூ.சி.சி. கல்லூரி மாணவிகள். 'ஃபில்டர் காபி’ என்கிற பெயர்ல பேண்ட் உருவாக்கி, பல இசைப் போட்டிகளில் வெற்றி பெற்று வரும் இந்த இன்னிசை கேர்ள்ஸுக்கு 'ஹலோ’ சொன்னோம்.

''அதென்ன 'ஃபில்டர் காபி’..?''

''ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூஸிக் பண்ணின 'லியோ ஃபில்டர் காபி’ விளம்பர மியூசிக் எங்களைக் கவர்ந்தது. அதை ஞாபகப்படுத்துற மாதிரி நாங்க 'ஃபில்டர் காஃபி’னு பெயர் வெச்சுக்கிட்டோம். விஜய் டி.வி-யில 'இதயம் தொட்ட இசைஞானி’ங்கற நிகழ்ச்சியில 'ஃபில்டர் காபி’தான் டாப் பெர்ஃபார்மர்ஸ். இப்ப நாங்க எல்லாரும் சேர்ந்து, வாழ்க்கை பற்றின நம்பிக்கை இல்லாதவங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காகவே ஒரு ஆல்பத்தை தயார் பண்ணிட்டு இருக்கோம்''னு ஆரம்பிச்சாங்க, இரண்டாம் ஆண்டு படிக்கும் பிரஷாந்தி. தொடர்ந்து, ''என் தாத்தா அழகிரிசாமி... எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாகிட்ட வயலினிஸ்ட்டாக இருந்தார். அப்பா சுந்தரராஜனும் இப்போ இசைத் துறையிலதான் இருக்காரு. அதனால இயல்பிலேயே எனக்கு இசை மேல காதல். பாட்டுப் பாடுவேன், டிரம்ஸ் வாசிப்பேன், கீ-போர்டு பிளே பண்ணுவேன். 'நான்’ படத்தோட பிரமோவுக்காக விஜய் ஆண்டனிகிட்ட 'உன் தலை முடி உதிர்வதைகூட தாங்க முடியாது’ பாடலை பாடி, பாராட்டு வாங்கினேன். ஒரு 'ஸ்டேஜ் ஷோ’ல வேல்முருகன் சார்கூட 'வாடா மாப்புள’ பாடினேன். இன்னும் நிறைய மேடைகள் ஏறணும்''னு சொல்ல, பிரஷாந்தியைத் தொடர்ந்தாங்க இறுதியாண்டு எகனாமிக்ஸ் படிக்கும் சிநேகா.

அவள் டீன்ஸ்... பிரமாத ஃபில்டர் காபி !

''நான் ஒரு கிடாரிஸ்ட். நல்லா பாடுவேன். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அகமதாபாத். அதனால கர்னாடிக் மியூசிக் கத்துக்க வாய்ப்பு அமையல. ஆனா, ராக் இசையில நான் ஸ்டார். யூடியூப்... என்னோட குரு. யெஸ்... நெட்லதான் மியூசிக் கத்துக்கிட்டேன். ஸ்கூல்ல ஆரம்பிச்சு, காலேஜ் வரை பல போட்டிகள்ல பரிசுகள் வாங்கியிருக்கேன். ஆனா, இசை எனக்கு ஃபேஷன் மட்டும்தான். நல்லா படிச்சு, நல்ல ஜாபுக்குப் போகணும்!''

- கிடாரில் விரல்கள் சொடுக்குறாங்க சிநேகா.

அவள் டீன்ஸ்... பிரமாத ஃபில்டர் காபி !

''என் பாட்டிதான் எனக்கு முதல் குரு. மூணு வயசுல இருந்து பாடுறேன். கர்னாடிக், வெஸ்டர்ன் ரெண்டுமே ஆர்வம். சின்ன வயசிலயே நிறைய மேடை நிகழ்ச்சிகள் செய்திருக்கேன். இப்பகூட படிச்சுட்டே நிறைய  கச்சேரிகள்ல பாடிட்டு இருக்கேன். தமிழக அரசின் 'கலை இளமணி’ விருது, ரோட்டரி கிளப்பின் 'யூத் டேலன்ட்’ விருது வாங்கி இருக்கேன். விஜய் டி.வி-யில முதன் முதல்ல சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆரம்பிச்சப்போ, டாப் 8 போட்டியாளர்கள்ல ஒருவராக வந்தேன். ப்ளேபேக் சிங்கர்

அவள் டீன்ஸ்... பிரமாத ஃபில்டர் காபி !

ஆகறதுதான் லட்சியம்!''னு சிரிக்கறாங்க, இறுதியாண்டு விஸ்காம் மாணவி ஐஸ்வர்யா.

கீ-போர்டு வாசிச்சுட்டே பேசுகிறார் பி.ஏ. எகனா மிக்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிற அவந்திகா... ''ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருந்தப்ப, விளையாட்டா கீ-போர்டு வாசிச்சேன். அதில் இருந்து கீ-போர்டு மேல ஒரு ஆர்வம். கிளாஸ் போய் கத்துக்கிட்டேன். இப்போ எவ்வளவு பெரிய ஸ்டேஜ்லயும் சோலோவா வாசிக்குற அளவுக்கு வளர்ந்திருக்கேன். நல்ல இசைக் கலைஞனா வரணும்ங்கிறதுதான் என்னோட ஆசை.''

மூன்றாம் ஆண்டு விஸ்காம் மாணவி அலா, கேரள பொண்ணு. ''சின்ன வயசுலயே பாட்டு கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. சீக்கிரமே சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைச்சுடுச்சு. 'லவ் ஜர்னி’ங்கற தெலுங்கு படத்துல முகேஷ் கூட பாடினேன். 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பாடலை பாடின பாடகரும் இயக்குநருமான வினித் ஸ்ரீனிவாசன்கூட, மலையாள படத்துலயும் பாடினேன். 8 மலையாள படங்கள்ல சைல்டு ஆர்ட்டிஸ்ட்டாவும் நடிச்சுருக்கேன். ராஜா சார், ரஹ்மான் சார் இசையில் எல்லாம் பாடணும்!''

- எதிர்பார்ப்போட காத்திருக்காங்க அலா.

''எனக்கு குரு, நானேதான். மியூஸிக் சேனல்ல பாட்டுக் கேட்டுப் பாடிப் பார்த்தேதான் இப்போ மேடையில் பாடும் அளவுக்கு வளர்ந்திருக்கேன்''னு சர்ப்ரைஸ் கொடுத்த இரண்டாம் ஆண்டு விஸ்காம் படிக்கும் சௌமியா,

''எந்தப் பாடலா இருந்தாலும் ரெண்டு முறை கேட்டேன்னா போதும்... அதன் ராகம், ஸ்ருதி உட்பட எல்லாமே மனசுல பதிஞ்சுடும். ஸ்கூல், வீடுனு எல்லாரும் என்னைப் பாடச் சொல்லி கேட்டுட்டே இருப்பாங்க. எதிர்காலத்துல நான் பாடுறதை தமிழ்நாடே கேட்கணும்''னு சொல்ல,

''சின்ன சின்ன ஆசை...''னு கோரஸா பாடுறாங்க கேர்ள்ஸ்!

இது ஹாட் காபி!