Published:Updated:

கம்யூனிகேஷன் ஸ்கில்...கைப்பற்ற என்ன வழி ?

கம்யூனிகேஷன் ஸ்கில்...கைப்பற்ற என்ன வழி ?

கம்யூனிகேஷன் ஸ்கில்...கைப்பற்ற என்ன வழி ?

கம்யூனிகேஷன் ஸ்கில்...கைப்பற்ற என்ன வழி ?

Published:Updated:
 ##~##
''நிறைவான மதிப்பெண் சதவிகிதம் வைத்திருந்தாலும், கம்யூனிகேஷன் ஸ்கில்லில் என்னை நான் மெருகேற்றிக்கொள்வது அவசியம் என அறிவுறுத்துகிறார் என் பேராசிரியை. கம்யூனிகேஷன் ஸ்கில்லில் மேம்பட கவனம் கொண்டாக வேண்டியவற்றைச் சுட்டிக்காட்ட முடியுமா?''

- பா.சம்பூர்ணா, பாளையங்கோட்டை

ஏ.பி.அருண்கண்ணன், சாஃப்ட் ஸ்கில் டிரெயினர் மற்றும் முதல்வர், டாடா லயோலா சமுதாயக் கல்லூரி, சென்னை:

''கம்யூனிகேஷன் ஸ்கில் என்பது, முதலில் நமது தோற்றத்தில் ஆரம்பிக்கிறது. நமது தோற்றம், நாம் பேசுவதற்கு முன்பே நம்மைப்பற்றி பிறரிடம் பேசிவிடுகிறது. எனவே, கலந்துகொள்ளும் கூட்டம், தேவை... இவற்றைப் பொறுத்து அதற்கான மரபு உடைகளிலும், அளவான அலங்காரம் போன்ற இத்யாதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இதில் துவங்கும் உடல் மொழியிலும் அதிக கவனம் வேண்டும். ஏனெனில், உங்களைப் பற்றிய முடிவுகளை பிரதானமாக இந்த உடல்மொழியே மற்றவர்களுக்கு தந்துவிடும். உங்களைப் பற்றி நீங்கள் அடுத்து தரப்போகும் விளக்கங்கள்கூட அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். எனவே, கம்யூனிகேஷன் ஸ்கில்லில் முதன்மையானதும் பிரதானமானதும் 'பாடி லாங்குவேஜ்’தான்.

உடல்மொழியில் பெரும்பங்கை... முகபாவனையே எடுத்துக் கொண்டுவிடும். உங்களது பதற்றம், தவிப்பு இவற்றை அதிகம் உங்களது கண்களே காட்டிக் கொடுத்துவிடும். அதற்காக நாடக பாணியிலான முக பாவனை களை மேற்கொள்ளத் தேவையில்லை. சூழலையும் அதில் தன்னுடைய பங்கையும் உள்வாங்கியிருந்தால் போதும், உடல்மொழி இயல்பாக கைவந்துவிடும்.

கம்யூனிகேஷன் ஸ்கில்...கைப்பற்ற என்ன வழி ?

அடுத்தபடியாக, உங்கள் குரலின் ஏற்றத்தாழ்வும், திடமும் முக்கியம். குழந்தைகள் மத்தியில் பேசும்போது இயல்பாகவே அவர்களைப் போன்று மழலையாகவும் எளிமையான சொற் களாகவும் பேசுவோம் இல்லையா?! அதேபோல நீங்கள் யார் முன்பாக பேசப் போகிறீர்கள், எது தொடர்பாக பேசப் போகிறீர்கள் என்பது குறித்தான தெளிவும், ஒரு முன் தயாரிப்பும் இருப்பது நல்லது. அரசியல்வாதி அளவுக்கு குரலில் ஏற்றம் இறக்கம் அவசியமில்லாது போனாலும், பேசும் பொருள் குறித்தான அழுத்தத்தை, ஆழத்தை உணர்த்தும்படியிலான வாய்ஸ் மாடுலேஷனுக்கு சற்றேனும் பயிற்சி தேவை. பிறரை உற்றுக் கவனிப்பதன் மூலம் இதை கைவரப் பெறலாம்.

கம்யூனிகேஷன் ஸ்கில்...கைப்பற்ற என்ன வழி ?

தன்னம்பிக்கையோடும் பொருள்செறிவோடும் பாயின்ட் பை பாயின்ட்டாக ஒரு கருத்தை விளக்கினால், எதிரில் இருப்பவருக்கு அது சரியாகச் சென்று சேரும். ஒரு விஷயத்தை தெரியும், தெரியாது எனத் தெளிவாக ஒப்புக் கொள்வதும்கூட, சரியான வெளிப்பாடு. தெரியும் என்பதற் காக மேதாவித்தனத்தை பறைசாற்ற முனைந்தால், மற்றவர்களுக்கு அது எரிச்சலை உண்டு பண்ணக்கூடும். அதேபோல ஒன்றும் தெரியவில்லை என்றால், வெளிப்படை யாக அதை ஒப்புக்கொண்டு, திடமாகக் கடந்து செல்வது உங்கள் மீதான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும். மாறாக, மழுப்பி சமாளிக்க முற்பட்டால்... அது எதிர் விளைவையே ஏற்படுத்தும்!

கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் அனைத்தும் கைவரப்பெற சுலபமான வழி... பயிற்சி முகாம்களில் கலந்துகொள்வது. இதற்கு உங்களுடைய ஆசிரியர்கள், முந்தைய செட்டில் பயிற்சி பெற்ற சீனியர் மாணவர்கள் இவர்களின் உதவியை நாடலாம். கூடவே... பயிற்சிக் கட்டணம், பயிற்சி நிலையம் அமைந்திருக்கும் இடத்தின் தூரம் இவற்றையெல்லாம் ஆலோசித்து... மையத்தை முடிவு செய்யலாம். அல்லது நீங்கள் இன்னமும் ஆரம்ப கல்லூரிப் பருவத்தில்தான் இருக்கிறீர்கள் எனில், சாவகாசமாக சில பல நடைமுறை பயிற்சிகளை சுயமாகப் பழகுவதன் மூலம், இந்த கம்யூனிகேஷன் திறன்களை கைவரப்பெறலாம்.

இதற்கு மற்றவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்களது வெளிப்படுத்தும் திறனில், உடல்மொழியில் உங்களைக் கவரும் அம்சங்களை குறித்து வைத்துக் கொண்டு, அவற்றை உங்களிடத்திலும் கொண்டுவர முயற்சிக்கலாம். எதிர்மறையான பிறரின் வெளிப்பாடுகளையும் குறித்துக் கொண்டு, அவை உங்களிடம் இருக்கிறதா என்றும் சீர்தூக்கி பார்த்து தெளிவு பெறலாம். இந்த முயற்சிகளின் மூலமாக உங்களது பலம், பலவீனம் இவற்றை அடையாளம் கண்டு மேம்படுத்திக் கொள்வதும்... சீர்செய்வதும் சாத்தியம். இதைத் தனியாக செய்வதைக் காட்டிலும், சக மாணவியரோடு சேர்ந்து பழகலாம். ஒவ்வொருவர் பற்றிய பிறரின் கருத்துக்களை வெளிப்படுத்தவும், குரூப் டிஸ்கஷன் போன்ற திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த முயற்சிகள் உதவும்''.