Published:Updated:

டீன் டாக்

காரக் குழம்பு கலரிங்...புருவ வளைய ஏலியன்ஸ் !க.அபிநயா,படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

டீன் டாக்

காரக் குழம்பு கலரிங்...புருவ வளைய ஏலியன்ஸ் !க.அபிநயா,படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
##~##

'பொண்ணுங்களுக்கு பசங்க எப்படி இருந்தா பிடிக்கும்/பிடிக்காது, பசங்களுக்கு பொண்ணுங்க எப்படி இருந்தா பிடிக்கும்/பிடிக்காது..?!’

- இதுதான் இந்தத் தடவை 'டீன் டாக்’ கான்செப்ட். இதுல கலந்துக்கிட்டு கலக்க வந்தாங்க, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, அற்புதா கலை அறிவியல் கல்லூரி ஸ்டூடன்ட்ஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பசங்க கோல்டு செயின் போட்டா பிடிக்காது. பகட்டா, ஏதோ பண்ணையார் வீட்டுப் பையன் மாதிரி லுக் தந்தா, பொண்ணுங்க ஃபெயில் மார்க்தான் தருவாங்க. அதுக்காக கழுத்துல பிளேடைத் தொங்கவிட்டு, போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற 'திருடர்கள் ஜாக்கிரதை’ லுக்ல இருக்கிறதும் ஓவர். கழுத்துல எந்த ஆக்சஸரிஸும் போடாம இருந்தாலே ஹேண்ட்சம்மா, மேன்லியா இருக்கும்''னு சொல்லி, ஆட்டைய தொடங்கி வெச்சாங்க ஷீலா.

அடுத்து மைக் பிடிச்சவங்க (மைக்லாம் இல்லீங்க... சும்மா ஒரு எஃபெக்ட்டுக்குத்தான்!) சூரியா. ''பசங்க கூலர்ஸ் போட்டா நல்லாயிருக்கும். அதுக்காக அதை கையில வெச்சு சுத்துறது, பின் கழுத்து காலர்ல மாட்டுறது, தலையில மாட்டுறதுனு ஏதோ பிராப்பர்டி ரவுண்ட் மாதிரி பெர்ஃபார்ம் பண்ணினா, அவுட். ஃபார்மல் டிரெஸ்ல ஷர்ட் பட்டன்ல மாட்டினா, சூப்பரா இருக்கும். வொயிட் ஷூ போட்டு, 'ஒன் சைடு டக் இன்’ பண்ணினா, இன்னும் நல்லா இருக்கும். ஃபிரெஞ்சு பியர்ட், பெர்சனலா எனக்கு ரொம்பப் பிடிக்கும்''னு லிஸ்ட் வாசிச்சு முடிச்சாங்க சூரியா.

டீன் டாக்

''எவனோ ஒருத்தன் குனிஞ்சு சாப்பிடும்போது தலையில காரக் குழம்பு கொட்டிடுச்சாம். அதையே ஒரு ஸ்டைலாக்கி கலரிங் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க பசங்க. கொடுமை!''னு செமநக்கல் விட்ட ஸ்ரீவித்யாவை, எதிர்ல இருந்த பாய்ஸ் 'நறநற'னு பார்த்தாங்க. ஆனாலும் ஓயாத ஸ்ரீவித்யா,

''சிம்பு, 'வானம்' படத்துல வர்ற மாதிரி ஒரு மொழம் வொயர் வாங்கி கையில சுத்திக்கிற பசங்க எல்லாம் எலிமினேட்டட். 'விடிவி’ சிம்பு லுக்ல சிம்பிளா இருந்தா பிடிக்கும்''னு தான் சொல்ல வந்ததை விடாம சொல்லி முடிச்சாங்க.

''இப்ப என் சான்ஸ்''னு சொல்லிட்டு தொண்டையை செருமின ஃபெமீனா, ''புருவத்துல வளையம் போடுற பசங்க, பொண்ணுங்களைப் பொறுத்தவரைக்கும் ஏலியன்ஸ். வேடிக்கை பார்ப்போமே ஒழிய, ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல சேர்த்துக்க மாட்டோம். ஆனா, கையில காப்புப் போடற பசங்கள எங்களுக்குப் புடிக்கும். அது காப்பர் காப்பா இருந்தா, சூப்பர். விரல்ல மோதிரம் எல்லாம் வேண்டாம். காதுல கடுக்கன், எல்லோருக்கும் சூட் ஆகாது''னு எச்சரிக்கை செய்தாங்க.

''அப்ஜெக்ஷன் மை லார்டு!''னு உள்ளே புகுந்தார் மகேந்திரன். ''நாங்க செயின், மோதிரம், கடுக்கன் போட்டா பிடிக்காதாம். ஆனா, அவங்க மட்டும் ஆக்சஸரீஸ்ங்கிற பெயர்ல அரை கிலோ மெட்டல் போட்டுட்டு வர்றதை நாங்க நல்லா இருக்குனு சொல்லணுமா..? நெவர். அதிலும் காதுல போடுவாங்க பாருங்க ஒரு மெகா வளையம்... அதுக்குள்ள ஒரு நாயைக்கூட தாவ விட்டுடலாம். அதைவிடக் கொடுமையா, வயிறுவரைக்கும் சாமியார் மாதிரி ஒரு பாசி போட்டுட்டு 'ஃபேஷன்’னு சொல்ற அவங்க அராஜகத்தை நிறுத்தியே ஆகணும்!''னு குரல்ல கறார் காட்டினார் மகேந்திரன்.

டீன் டாக்

''பெண்களுக்குப் பெரிய புருவம்தான் அழகு. ஆனா, நயன்தாரா மாதிரினு சொல்லி, ரொம்ப ஒல்லியா புருவத்தை டிரிம் செஞ்சுடுறாங்க கேர்ள்ஸ். அது பசங்களுக்குப் புடிக்கவே இல்லை என்பதை அண்டர்லைன் பண்ணி சொல்லிக்கிறோம்''னு அடக்க ஒடுக்கமா மணிகண்டன் படபடக்க,

''கண்ணுக்கு மை, மஸ்காரா, ஐ லைனர் என்ன போட்டாலும் அழகு... நீளமான கூந்தல் இருந்தா, அழகோ அழகு! அளவா நெயில் ஷேப் செய்து, லைட் கலர் நெயில் பாலிஷ் போட்டு, ஒரு மோதிரம் போட்டா... பிடிக்கும். நெயில் ஆர்ட் பிடிக்கல. கிரிஸ்டல் கொலுசு நல்லா இருக்கும். ஆனா, ஒரு கால்ல மட்டும் கொலுசு போடுறது, ரொம்ப ஓவர்''னு அதிருப்தி தெரிவிச்சார் ராஜசேகர்.

''ஹை ஹீல்ஸ், ஓவர் மேக்கப், ஜிங்குச்சா காஸ்ட்யூம்னு பொண்ணுங்ககிட்ட பசங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் பல இருந்தாலும், பார்த்துப் பார்த்து நீங்க செய்துட்டு வர்ற எல்லா விஷயங்களுமே ஸோ கியூட்தான்!''னு லாஸ்டா பாய்ஸ் ஐஸ் கியூப்ஸை அள்ளிப் போட, கேர்ள்ஸ் எல்லோரும் ரோஸ் கன்னமானாங்க!