Published:Updated:

பிளேயர் பிருந்தா !

மு.சா.கௌதமன் படம்: செ.சிவபாலன்

பிளேயர் பிருந்தா !

மு.சா.கௌதமன் படம்: செ.சிவபாலன்

Published:Updated:
 ##~##
''ஸ்கூல்ல
படிக்கும்போது கலந்துக்கிட்ட முதல் வாலிபால் போட்டியில, நான் சப்ஸ்டிடியூட். ஆனா, ஐந்தாவது போட்டியிலேயே மெயின் பிளேயரா முன்னேறினேன். அதே முயற்சியோடதான் இப்போ இந்திய அணியில் இடம் பெற பயிற்சி எடுத்துட்டு இருக்கேன்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- படபடவென பேசுகிறார் பிருந்தா. தமிழக வாலிபால் அணியின் முக்கிய மையத் தடுப்பாட்டக்காரர்களில் ஒருவர். மயிலாடுதுறை ஏ.வி.சி கலைக்கல்லூரி மூன்றாமாண்டு வணிக மேலாண்மையியல் மாணவி.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற மகளிர் இளையோருக்கான தேசிய வாலிபால் போட்டி, பஞ்சாபில் நடைபெற்ற 'பஞ்சாயத் யுவ க்ருதா அவுர் கேல் அபியான்’ வாலிபால் போட்டி ஆகியவற்றில் இறுதிவரை முயன்று தமிழகத்துக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுக் கொடுத்தவர். கர்நாடகத்தில் நடந்த மிக இளையோருக்கான தேசிய வாலிபால் போட்டியில் முழு மூச்சோடு போராடி வெண்கலம் பெற்றுத் தந்தவர்.

''எங்க காலேஜ் வாலிபால் அணியின் லீடர் நான்தான்!'' என்று புத்துணர்வுடன் ஆரம்பித்த பிருந்தா,

பிளேயர் பிருந்தா !

''முதல்ல உயரம் தாண்டுதல்லதான் கவனம் செலுத்தினேன். பதினோராம் வகுப்புப் படிக்கும்போது, வாலிபாலுக்கு என்னை மடை மாற்றினது, கோச் தனலஷ்மி மேடம்தான். அதுக்கு அப்புறம் இதுதான் நம்ம களம்னு புரிஞ்சுக்கிட்டு, அதில் வேகம் காட்டினேன். விறுவிறுனு மாநில அணிக்கு முன்னேறிட்டேன். விளையாட்டில் என் பலம், வலுவான அடிகளைக் கொண்டு எதிரணியை விரட்டுறதும், ஆட்டக்களத்தில் சக வீராங்கனைகளோ... நானோ ஏதாவது தவறு செய்துட்டால், அதை பொருட்படுத்தாம உற்சாகத்தோடு விளையாடி, மற்றவர்களையும் உற்சாகப்படுத்தி விளையாட வைக்கறதும்தான். என் பலவீனம், தடுப்பாட்டத்தின்போது அவசரம்'' என்று தன்னைப் பற்றிய தெளிவான சுயமதிப்பீடு தரும் பிருந்தாவின் சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் நடராசன்பிள்ளைச்சாவடி கிராமம். இவருடைய அப்பா மதியழகன் விவசாயி, அம்மா ஜெயகுமாரி  இல்லத்தரசி.

''நம்ம நாட்டுல எந்த விளையாட்டுக்குமே சிபாரிசு அவசியம்னு சொல்வாங்களே... நீங்க எப்படி சாதிச்சீங்க?'' என்று கேட்டால்...

''ஒருத்தரோட வாய்ப்பு, சிபாரிசால பறிபோனா... அந்த வேதனையையும் கோபத்தையும் வார்த்தைகள்ல சொல்ல முடியாது. நான் என்னோட திறமையை மட்டுமே முழுக்க நம்பி, பயிற்சிகளைத் தொடர்ந்துட்டே இருக்கேன். வாய்ப்புகளும் வந்துட்டே இருக்கு! என் ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் 2015-க்குள் இந்திய மகளிர் வாலிபால் அணியில் இடம் பிடிச்சு, சர்வதேச அளவில் நம்ம நாட்டுக்கு ஒரு முத்திரையை பதிச்சுத் தரணும்கிறதுதான்!''

- 'பை’ சொல்லி பிராக்டிஸுக்கு கிளம்புகிறார் பிருந்தா!