சர்வதேச அன்புத் திருவிழா... வேலன்டைன்ஸ் டே! அதை முன்னிட்டு, அன்னதானம், பூக்குழி, விளக்கு பூஜைனு எதுவும் ஸ்பெஷலா செய்ய முடியலைனாலும், 'டீன் டாக்’ல காதல் பத்தி பேச வந்தாங்க நாகப்பட்டினம், இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்!

''லவ் மேரேஜ் இல்லைனாலும்கூட, லவ்வைக் கடக்காம இப்போ யாருக்கும் திருமணங்கள் நடக்கிறதில்ல. சொல்லப் போனா, நம்ம நாட்டோட பொருளாதாரம்கூட இவங்க கையிலதான் இருக்கு. பின்னே... செல்போன், மொபைல் ரீ-சார்ஜ், காபி ஷாப், மால்ஸ், பெட்ரோல் பங்க்... இப்படி காதலர்களால் வாழற முதலாளிங்களோட லிஸ்ட் நீண்டுட்டே போகுது. அதனால என்ன சொல்ல வர்றேன்னா... லவ்வர்ஸ் ராக்!''

- படுபயங்கர இன்ட்ரோ கொடுத்தார் பாலாஜி.

''ஆனா, வேலன்டைன்ஸ் டே வந்தா போதும்... இந்த பசங்க பண்ற அலும்பு தாங்க முடியல. ஏதோ மார்கழி மாசம் பழனி முருகனுக்கு மாலை போடுற மாதிரி, பிப்ரவரி மாசம் வந்தா, 'இதயம்’ முரளி கேரக்டர் மாதிரியான பசங்ககூட, தில் வந்து பொண்ணுங்களை வெரட்டி வெரட்டி பிரபோஸ் பண்ண ஆரம்பிச்சுடறாங்க. இப்போ புதுசா மிரட்டி மிரட்டி வேற புரபோஸ் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அன்னிக்கு மட்டும் பூக்கடைகள்ல ஒரு ரோஜாப்பூ 50 ரூபாய்னு விலையை ஏத்தி விட்டுடுறாங்க''னு சலிச்சுக்கிட்டாங்க அனுவும், கீதாவும்.

''ஏதோ உலக அழகிகள்னு நினைப்பு. இலுப்பை ஃபளவர்ஸ்!''னு பாய்ஸ் முனங்க,

''என்னது..?''னு கேர்ள்ஸ் புரியாம கேட்க,

''இல்ல... எல்லாரையும் பூக்கள்னு சொன்னோம்!''னு பாய்ஸ் சமாளிக்க, அதில் உள்ள உள்குத்து புரியாம கேர்ள்ஸும் சமாதானமானாங்க.

''கேர்ள்ஸுக்காக நாங்க எவ்வளவு தியாகங்கள் பண்றோம் தெரியுமா..? உங்களுக்காக கிரிக்கெட், ஃப்ரெண்ட்ஸ், வீடு, நெட்னு எல்லாத்தையும் துறந்துட்டு, மொபைல்ல உங்களுக்கு வண்டி வண்டியா மெஸேஜ் அனுப்பிட்டே இருக்கோம். நீங்க கோபப்படும் போதெல்லாம் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாவது சமாதானப்படுத்துறோம். நீங்க ஊர் சுத்தணும்னு ஆசைப்பட்டா, ஓசி பல்ஸர் வாங்கிட்டு வந்தாவது அதை நிறைவேத்துறோம். இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கலைனா, அந்த நிமிஷமே சலூனுக்கு போறோம். மீசை எடுன்னா எடுக்குறோம், 'ஃபிரெஞ்சு பியர்ட் வை’னா வைக்குறோம். எல்லாத்துக்கும் மேல, 'நீ அழகி’னு மனசாட்சிக்கு விரோதமா எத்தனை தடவை பொய் சொல்லி உங்களை சந்தோஷப்படுத்துறோம்..?!''

- சொல்லி முடிச்சு, 'ம்ம்ம்...' மூச்சு வாங்கினார் பிரசாத்.

''இதான்... இதான்... இந்த பெர்ஃபார்மன்ஸ்தான் வேண்டாம்னு சொல்றது. உண்மையா, அன்பா இருங்க. அது போதும். பொய் சொல்லாதீங்க... முக்கியமா, மத்த பொண்ணுங்ககூட கடலை போடுற விஷயத்துல! 'உனக்காக என்னவெல்லாம் பண்ணினேன் பாரு’னு, அதை தியாகமா பேசிக் காட்டாதீங்க. 'நமக்காக இவன் என்னவெல்லாம் செய்றான்’னு, எங்களை ஃபீல் பண்ண வையுங்க''னு எமோஷனல் டயலாக் பேசியது... ஹேமலதாவும், கனிமொழியும்.

''சரி, பாய்ஸ் உருகுற அளவுக்கு கேர்ள்ஸ் உருகுறீங்களா..? 'வேலன்டைன்ஸ் டே’-க்கு கூட, 'பி மை வேலன்டைன்’னு மெஸேஜ் அனுப்புறதோட உங்க கடமையை முடிச்சுக்குறீங்க. ஆனா... உங்களுக்காக ரோஸ் வாங்கி, கிரீட்டிங் வாங்கி, கேக் வாங்கி, கேண்டில் வாங்கி, முதன் முதலா சந்திச்ச இடம், பிரபோஸ் பண்ணின நாள்னு ஃபீலிங்க்ஸா பேசினா, 'அய்யோ, வீட்டுல தேடுவாங்க’னு ஓடுறீங்க. 'தினமும் 100 மெஸேஜ் அனுப்புற நீ, எனக்கு நேத்து 82 மெஸேஜ்தான் அனுப்பினே’, 'நான் போன் பண்ணினப்ப சைலன்ட் மோட்ல போட்டுட்டு கிரிக்கெட் மேட்ச் பார்த்தேயில்ல’, 'என்னைவிட உனக்கு ஃப்ரெண்ட்ஸ்தான் முக்கியமா?’னு சில்லி மேட்டருக்கு எல்லாம் சண்டை போட்டு சித்ரவதை பண்ணி, 'தப்பு பண்ணிட்டோமோ?’னு நைட் எல்லாம் தூக்கம் இல்லாம எங்களை குற்ற உணர்ச்சியில தவிக்க விடுறீங்க. மறுநாள் நீங்க மட்டும் ஃப்ரெஷ்ஷா மேக் அப் பண்ணிட்டு ஜாலியா காலேஜுக்கு வர்றீங்க.

பசங்கள்லாம்... உங்களுக்கு உடம்பு சரியில்லைனா, விரதம் இருக்குறோம். நீங்க எக்ஸாம் எழுதினா, சாமிக்கு மாலைகூட போடுறோம். உங்களுக்காக கையை கிழிச்சுக்குறோம், பச்சை குத்திக்குறோம், பல்ஸர் வாங்குறோம், ஃபேஸ்புக்ல பயந்து பயந்து பொண்ணுங்கள ஃபில்டர் பண்றோம், எக்ஸட்ரா எக்ஸட்ரா...''னு மணிகண்டனும், காளிதாஸும் பிழிந்து பிழிந்து அழ,

''கூல் பாய்ஸ். அதான் ஆதிகாலத்துல இருந்து பசங்க தலையெழுத்து!''னு சூப்பர் ஃபுல் ஸ்டாப் வெச்சாங்க புவனேஸ்வரியும், ஆனந்தியும்!

ஆல் கைஸ் அவுட்!