Published:Updated:

கலக்கல் காலேஜ் பஜார்!

சிட்டியைக் கவர்ந்த வில்லேஜ் புராடக்ட்ஸ்!

கலக்கல் காலேஜ் பஜார்!

சிட்டியைக் கவர்ந்த வில்லேஜ் புராடக்ட்ஸ்!

Published:Updated:
##~##

''காதுக்குப் போடுற கம்மல்ல இருந்து... காலுக்குப் போடுற செருப்பு வரைக்கும் ஷாப்பிங் மால்ஸ்ல ஃபாரின் பிராண்ட்ஸ் வாங்கி, அப்பாவோட பர்ஸுக்கு 'பாம்’ வைக்குற எங்களுக்கு, இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஸ்டால்ஸ்... சர்ப்ரைஸ் சந்தோஷம்! இங்க இருக்குற பொருட்கள் எல்லாம் டிரெண்டியாவும் இருக்கு, சீப்பாவும் இருக்கு. சூப்பர்!''

 - சந்தோஷமா சொன்னாங்க சென்னை காலேஜ் கேர்ள்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு சுயஉதவிக் குழு அமைப்பு நடத்தின 'காலேஜ் பஜார்’ கண்காட்சி சென்னை, அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில நடந்தது. சென்னையைச் சுற்றியுள்ள பல மகளிர் குழுக்களில் இருந்தும் வந்த பெண்கள், கல்லூரிப் பெண்களை ஈர்க்கும்விதமா ஃபேஷன் ஜுவல்லரியில் ஆரம்பிச்சு, காட்டன் டிரெஸ், ஹேண்ட் பேக்ஸ், கிஃப்ட் அயிட்டம்ஸ், குளியல் பொடி, மூலிகை எண்ணெய், ஆயுர்வேதிக் கிரீம்ஸ்னு விதவிதமான ஸ்டால்கள் போட்டு அசத்தியிருந்தாங்க.

நாமளும் ஒரு ரவுண்ட் வருவோமா?!

கலக்கல் காலேஜ் பஜார்!

கம்மல், ஹேர் பேண்ட், கிளிப், செயின், ரிங்னு கலக்கலா இருந்தது, திருநங்கைகள் ஸ்வேதா, சுவாதியோட ஸ்டால்.

''அவ்வளவுதான்னு நெனச்ச எங்க வாழ்க்கையில... மறுமலர்ச்சியா அமைஞ்சது இந்த, 'தோழி’ மகளிர் சுயஉதவிக் குழு. ஜுவல்லரி கிளாஸ் போயி கத்துகிட்ட இந்த கலை, இப்போ எங்க வாழ்வாதாரம். காலேஜ் கேர்ள்ஸுக்கு பிடிக்கிற விதமா புதுசு புதுசா டிசைன்களை உருவாக்குறோம்'’னு ஸ்வேதா சொல்ல,

''எல்லாமே டபுள் டிஜிட் விலை என்பது ஸ்பெஷல்!''னு கொண்டாடினாங்க கேர்ள்ஸ்.

ஹேண்ட்பேக் ஸ்டால்ல பிஸியா இருந்தாங்க ஸ்ரீதேவி. சணல் பைகள் எல்லாம் ஸ்டைலா ஈர்க்க, ''இது வெயிட்லெஸ் ப்ளஸ் என்விரான்மென்ட் ஃப்ரெண்ட்லி!''னு ஆர்வமா பர்சேஸ் பண்ணினாங்க பொண்ணுங்க.

கிஃப்ட் அயிட்டங்கள், கிளாஸ், கிளே வொர்க்ஸ்னு கடை விரிச்சிருந்தாங்க ரேவதி. சேல்ஸ் ஜோரா இருந்ததோட, ''ஆர்ட் அண்ட் கிராஃப்ட் கத்துக்க வர்றோம் அக்கா...''னு ரேவதிகிட்ட பெயர் கொடுத்துட்டு இருந்தாங்க கேர்ள்ஸ்.

மாலாவோட ஸ்டால்ல இருந்த வைக்கோல் புராடக்ட்ஸ் எல்லாம் ஜீரோ பட்ஜெட் முதலீடு. கிரீட்டிங் கார்டு, வால் போஸ்டர்னு வைக்கோல்ல அவங்க செய்து வெச்சிருந்த பொருட்கள் எல்லாம் சீக்கிரமே சோல்ட் அவுட். மாற்றுத்திறனாளியான பிரபா, 'என்னால நடக்க முடியாது. இந்த கிளாஸ் பெயின்ட்டிங், மாடர்ன் ஜுவல்ஸ் மேக்கிங் எல்லாத்தையும் உட்கார்ந்த இடத்துலேயே பண்ணலாமேனு ஒரு ஐடியா கிடைச்சுது. நம்பிக்கையோட கிளாஸ் போனேன். இப்போ நான் சுயஉதவிக் குழுவோட சேர்ந்து பிஸினஸ் பண்றேன். கல்லூரி பெண்களோட வரவேற்பு அதிகம் இருக்கிறது, எனர்ஜெடிக்கா இருக்கு!'னு வியாபாரத்தில் பிஸியானாங்க.

விதம்விதமான மரச்சாமான்கள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் எல்லா ஸ்டால்களையும் ரவுண்ட்ஸ் வந்த கேர்ள்ஸ், இன்னொரு பக்கம் பியூட்டி புராடக்ட்ஸ் ஸ்டால்களிலும் குவிஞ்சாங்க. பாசிப்பயறு மாவு, மூலிகை, மஞ்சள் கலந்த குளியல் பவுடரை வாங்கின பொண்ணுங்க, அதோட பயன்களையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாங்க.

''கல்லூரிப் பொண்ணுங்க குளியல் பவுடர் வாங்குவாங்களானு சின்னத் தயக்கம் இருந்துச்சு. ஆனா... 'ஓஹோ’னு சேல்ஸ் ஆயிடுச்சு!''னு சந்தோஷப்பட்டாங்க மகளிர் குழுவைச் சேர்ந்த கலாவதி.

இந்தக் கண்காட்சி... டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மாரிஸ் மகளிர் கல்லூரியிலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது. மொத்தம் 191 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்துட்டு, 10 லட்சத்து 24 ஆயிரத்து 776 ரூபாய் மதிப்பிலான உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திருக்காங்க என்பது கூடுதல் தகவல்!

நன்று!

- மோ.கிஷோர் குமார்               படங்கள்:  ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism