Published:Updated:

சொய்ங்... சொய்ங்... ஈக்கோ டூர்!

சொய்ங்... சொய்ங்... ஈக்கோ டூர்!

சொய்ங்... சொய்ங்... ஈக்கோ டூர்!

சொய்ங்... சொய்ங்... ஈக்கோ டூர்!

Published:Updated:
##~##

''காடுகளை அழிக்கக் கூடாது, பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாதுனு அரசாங்கமும் சொல்லுது. ஆனா, இன்னிக்கு சுற்றுலாத் தலங்கள் அனைத்துமே... காடுகளை அழிச்சுக் கட்டின ரிசார்ட்டுகள், பிளாஸ்டிக் கழிவுகள்னு உருக்குலைந்து கிடக்கு. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதுதான், இந்த ஈக்கோ டூரிஸம் (Eco Tourism). பாரம்பரியமான ஊர், அதோட மண், தாவரங்கள், மக்கள், அவங்களோட வாழ்க்கை முறைனு எல்லாத்தையும் இதுல தெரிஞ்சுக்கலாம்!''

 - இப்படி குஷிபொங்கச் சொல்லும் மதுரையைச் சேர்ந்த சுதாகர், இப்படிப்பட்ட சூழல் சுற்றுலாவுக்கு மக்கள், மாணவர்கள் என்று பலரையும் அழைத்துச் செல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்! ''இதுல வேற என்ன ஸ்பெஷல்..?'' என்றால், ''வார்த்தைகள் மட்டும் போதுமா..? நீங்களும் வாங்களேன்!'' என்று சொன்ன சுதாகர், மதுரை, ஈ.எம்.ஜி யாதவா கல்லூரிப் பெண்கள் மற்றும் ஆசிரியர்கள் என 30 பேர் டீமுடன் நம்மையும் சேர்த்துக் கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொய்ங்... சொய்ங்... ஈக்கோ டூர்!
சொய்ங்... சொய்ங்... ஈக்கோ டூர்!

மதுரையிலிருந்து 31 கி.மீ தொலைவில் இருக்கிறது வெள்ளைப்பாறை. அங்கிருந்து 2 மணி நேரம் மலைப்பாதையில் நடந்தால்... மலையூர். அங்கே கால் பதித்ததுமே...

'கையளவு நெஞ்சுக்குள்ள... கடலளவு ஆசை மச்சான்... சொய்ங்.... சொய்ங்' என்ற கும்கி பட பாடல் உள்ளுக்குள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது!

''இந்த மண்ணை, இந்த மக்கள் தெய்வமா நினைக்கறதால ஊருக்குள்ள யாரும் செருப்புப் போடக் கூடாதுங்கறது  ஊர்க் கட்டுப்பாடு...'' என்று சுதாகர் சொல்ல, அனைவரின் கால்களில் இருந்தும் விடைபெற்றன காலணிகள்! வெற்றுக் கால்களுடன் இறங்கி நடந்தோம்.

மொத்தம் 100 வீடுகளே இருந்தன. சில வீடுகளுக்கு மட்டுமே மின்வசதி. ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி... இவை இரண்டும்தான் இவர்களுக்கு கிடைத்துள்ள அரசாங்க கட்டடங்கள். சூழலைக் கெடுக்கும் வாகனங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லை. மருத்துவமனை, கடைகள் எதுவும் இல்லை. அனைத்துத் தேவைகளுக்கும் கீழேதான் இறங்க வேண்டும்.

''ஊட்டி, கொடைக்கானல், மைசூர், பெங்களூருனு ஊரறிஞ்ச ஊர்களுக்கே எப்பவும் டூர் போன எங்களுக்கு, இந்த ஈக்கோ டூர்... ஃப்ரெஷ்ஷான அனுபவம். மலைமேல ஏறிவரும்போதே காடுகள், மரங்களைப் பத்தி பாடம் நடத்திட்டே வந்தாங்க. தானியங்கள், காய்கறிகளை இந்த மக்களே உற்பத்தி செஞ்சுக்குறாங்க. நாமெல்லாம் பக்கத்துக் கடைக்குக்கூட ஸ்கூட்டியில போறோம். இவங்க சர்வசாதாரணமா கிலோ மீட்டர் கணக்குல மலை மேல ஏறி, இறங்கறாங்க. எல்லாமே ஆச்சர்யமா இருக்கு!'' என்று மாணவி பத்மினிதிவ்யா, வியப்பில் ஆழ...

''இந்த மக்களோட வாழ்க்கை முறை எளிமையா இருந்தாலும், பெருமையா இருக்கு. எல்லோரும் ஒற்றுமையா இருந்து இன்னிக்கு வரைக்கும் தங்களோட பாரம்பரியத்தை பாதுகாத்துட்டு வர்றாங்க. கொஞ்ச காலத்துக்கு முன்னவரைக்கும் பெண்களுக்கு சின்ன வயசிலேயே திருமணம் நடந்திருந்தாலும், பெண் சிசுக்கொலைங்கறது இங்க இதுவரைக்கும் நடந்ததே இல்லையாம்!'' என்று தானும் வியப்பில் மூழ்கினார். மற்றொரு மாணவியான பூமாரி!

சொய்ங்... சொய்ங்... ஈக்கோ டூர்!

''ஏதோ டிஸ்கவரி சேனலுக்காக ரிப்போர்ட்டிங் பண்ண வந்த மாதிரி இருக்கு!'' என்று பரவசமான யுவப்பிரியா, அங்கு ஒரு வீட்டில், கையில ஒரு பெரிய வட்டமான கல்லைப் பிடித்துக் சுற்றிக் கொண்டிருந்த மாயம்மா பாட்டியிடம் சென்று 'என்ன பண்றீங்க பாட்டி?’ என்றார்.

''கேழ்வரகு திரிக்கிறேன். இதுக்கு பேர் திருகைக் கல்'' என்று பதில் வர...

''அட, உள்ளூர் மிக்ஸி!'' என்று குஷியானார் யுவப்ரியா.  

டீச்சனாவும், விஷ்ணுபிரியாவும், ''டூர் போகணும்னு நினைக்கறவங்க, குறிப்பா காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்... ஈக்கோ டூரை ஒருமுறை டிக் செய்து பாருங்க. வேற எந்த டூர்லயும் கிடைக்காத அனுபவம் உங்களுக்கு கியாரன்டி!'' என்று உத்தரவாதம் தந்தனர்.

நிறைவாக பேசிய விலங்கியல் பேராசிரியை இந்திரா ராணி, ''இந்த ஊர் மக்கள் கேழ்வரகு, சாமை, கம்பு போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத்தான் அதிகம் சாப்பிடறாங்க. அரிசி உணவுகளை எப்போதாவதுதான் எடுத்துக்கறாங்க. காய்கறிகளையும் இயற்கையான முறையில் உற்பத்தி செய்றாங்க. இதெல்லாம் இவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமா தருது'' என்று பெருமையோடு குறிப்பிட்டவர்,

''ஆனா, இவங்களுக்குனு மருத்துவமனை கிடையாது. வாகன வசதியும் இல்லைங்கறதால... பிரசவம், அவசர சிகிச்சைனா... தொட்டில்லதான் தூக்கிட்டுப் போறாங்க. இந்த விஷயத்துல அரசாங்கம் ஏதாச்சும் உதவினா நல்லது!'' என்று வேண்டுகோளும் வைத்தார்!.

''சுற்றுலாவுக்கு வந்தவங்களை இப்படி சமுதாயத்துக்காகப் பேச வெச்சுட்டேன் பார்த்தீங்களா... இதுதான் ஈக்கோ டூரிஸத்தோட வெற்றி!'' என்று சுதாகர் புன்முறுவலாக சொன்னபோது... நமக்கு பெருமையாக இருந்தது!

- க.முகமது அபுதாஹீர்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism