Published:Updated:

சாம்பியன் ஜாஸ்மின்!

சாம்பியன் ஜாஸ்மின்!

சாம்பியன் ஜாஸ்மின்!

சாம்பியன் ஜாஸ்மின்!

Published:Updated:
##~##

''தாத்தா... ஸ்கூல் கரஸ்பாண்டன்ட்; அம்மா... ஸ்ட்ரிக்ட் ஸ்கூல் டீச்சர். அப்பா... டி.வி மெக்கானிக். என்னோட ஏரியா... ஸ்போர்ட்ஸ்!''

 - பூப்பந்தாட்டத்தில் தேசிய அளவில் கில்லியடித்துக் கொண்டிருக்கும் ஜாஸ்மினின் குட்டி பயோகிராஃபி இது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை, லேடி டோக் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படிக்கும் ஜாஸ்மின், தன் பேட்மின்டன் (பூப்பந்தாட்டம்) பிரியம் பேசினார் சுவாரசியமாக.

''ஓ.சி.பி.எம் ஸ்கூல்ல ஆறாவது படிக்கறப்ப... கேம்ஸ் பீரியட்ல விளையாட்டாதான் பேட்டை கையில் எடுத்தேன். கோச் ராஜேஷ் கண்ணன் சார், என்னை கவனிச்சு பயிற்சி கொடுத்தார். மாவட்டம்,  மாநிலம்னு பேட்மின்டன்ல முன்னேறினேன். தமிழ்நாடு அளவுல கோல்ட், சில்வர், ரன்னர்னு வெற்றிகளோடயே இருக்கேன்.

சாம்பியன் ஜாஸ்மின்!

பத்தாவது படிக்கறப்ப முதன் முதலா தேசிய போட்டியில வாய்ப்பு கிடைச்சுது. ஆனா, பப்ளிக் எக்ஸாம்ங்கறதால... தயக்கமும், பயமுமா இருந்துச்சு. 'உன் வகுப்புல நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பரீட்சை எழுதறாங்க. ஆனா, எத்தனை பேர் நேஷனல் லெவலுக்கு விளையாடப் போறாங்க. அதனால நீ ஸ்பெஷல். குழப்பம் இல்லாம போட்டிக்குப் போ. பரீட்சையில வர்ற மதிப்பெண் வரட்டும்!’னு தாத்தா தைரியம் சொன்னார். ஹரியானாவுல நடந்த நேஷனல் லெவல் போட்டியில கோல்ட் வாங்கினதோட, பப்ளிக் எக்ஸாமுலயும் பாஸ் பண்ணினது சந்தோஷ தருணம்.

இந்த வெற்றிகள் எல்லாம்தான், எனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல ஃப்ரீ ஸீட் கிடைக்க வெச்சுது. என் கல்விக்கு பொறுப்பேத்துக்கிட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். காலேஜ் ஃபிசிக்கல் டைரக்டர் சாந்தா மேம் இன்னும் பட்டைதீட்ட, மும்பையில நடந்த நேஷனல் லெவல் டோர்னமென்ட்ல எங்க டீமுக்கு சில்வர் கிடைச்சுது.

அடுத்ததா... தேசிய அணியில இடம் பிடிச்சு... ஒலிம்பிக், காமன்வெல்த்னு இந்தியாவுக்காக விளையாடணும். உள்ளூர்ல விளையாடுற ஒவ்வொரு போட்டியையுமே ஒலிம்பிக் ஃபைனலா நினைச்சுதான் விளையாடுவேன். அதுதான் என் வெற்றிகளுக்கு அடித்தளம். நிச்சயமா இந்திய அளவில் ஸ்டார் பிளேயரா வருவேன்!''

- பேட்டை இறுக்கிப் பிடிக்கும் ஜாஸ்மின், 'விஜய் டி.வி. வழங்கும் '2012-ம் ஆண்டின் சாம்பியன்' விருதை தன் கல்லூரிக்குப் பெற்று தந்திருக்கிறார்.

வாழ்த்துக்கள்!

- மோ.கிஷோர் குமார்

படங்கள்: பா.காளிமுத்து