Published:Updated:

பாய் ஃப்ரெண்ட்... கேர்ள் ஃப்ரெண்ட்... யாரு பெஸ்ட்?

பாய் ஃப்ரெண்ட்... கேர்ள் ஃப்ரெண்ட்... யாரு பெஸ்ட்?

பாய் ஃப்ரெண்ட்... கேர்ள் ஃப்ரெண்ட்... யாரு பெஸ்ட்?

பாய் ஃப்ரெண்ட்... கேர்ள் ஃப்ரெண்ட்... யாரு பெஸ்ட்?

Published:Updated:
பாய் ஃப்ரெண்ட்... கேர்ள் ஃப்ரெண்ட்...  யாரு பெஸ்ட்?
##~##

ந்த முறை டீன் டாக் கூடின இடம்... திருச்சி, காவேரி கல்லூரி. கலகல கேர்ள்ஸ் பிங்கி, மதியரசி, சாத்தம்மை பிரியா, சிவரஞ்சனி, மோனிகா, அம்ரிதா, அனுஷியா மற்றும் சௌந்தர்யா அனைவரும் ரெண்டு டீமா பிரிஞ்சு... கலக்கல் பட்டிமன்றத்துக்கு தயார் ஆனாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முதல்ல நீங்களே பேட்டிங் பிடிங்க கண்ணுங்களா...''னு 'பாய் ஃப்ரெண்ட் டீம்' விட்டுக் கொடுக்க, ஆரம்பிச்சாங்க 'கேர்ள் ஃபிரெண்ட் டீம்' மோனிகா.

''பொண்ணுங்க விஷயத்துல, நல்ல ஃப்ரெண்டா தேர்ந்தெடுக்கிறதைவிட, நல்ல ஃபிகரா தேர்ந்தெடுத்து ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கிறதுதான் பசங்களோட டார்க்கெட்டா இருக்கும். அதுமட்டுமா... ஃபர்ஸ்ட் இயர்ல ஃப்ரெண்ட்ஸ் டே கார்டு கொடுத்துட்டு, தேர்ட் இயர்ல வேலன்டைன்ஸ் டே கார்டு கொடுக்குற கேடி வேலையையும் பண்ணுவாங்க''னு மோனிகா ஃபர்ஸ்ட் பால்லயே ஃபோர் அடிச்சாங்க.

தொடர்ந்த சாத்தம்மை... ''பொண்ணுங்க, பசங்ககிட்ட இயல்பா பழகுவாங்க. ஒருகட்டத்துல 'நீ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்’ என்ற முக்கியத்துவத்தையும் தருவாங்க. ஆனா, பசங்க அதோட வேல்யூ புரிஞ்சு அவளை ஒரு நல்ல தோழியா கொண்டாடாம, 'பார்த்தியா... அவ எனக்கு எவ்வளவு இம்ப்பார்ட்டன்ஸ் கொடுத் திருக்கானு...’ அப்படினு மத்த பசங்ககிட்ட ஸீன் போடுறதைதான் முக்கியமா நினைப்பாங்க. இது ஒரு நல்ல ஃப்ரெண்டுக்கு அடையாளமா..?''னு கேள்வியைப் போட்டாங்க.

''சில பசங்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் என்பவள், பல கேர்ள்ஸின் மொபைல் நம்பர்கள் கொடுக்கும் டெலிபோன் டைரக்டரி. அதுக்காகவே ஒரு லேடீஸ் காலேஜ் பொண்ணுகிட்ட ஃப்ரெண்ட் ஆகி, 'உன் ஃப்ரெண்ட்ஸ் இன்ட்ரோ கொடேன்...’னு கேட்குற பசங்கள இந்த உலகம் நிறையப் பார்க்குது. பாய் ஃப்ரெண்டின் இலக்கணங்களில் இதுவும் ஒண்ணு''னு குட்டினாங்க சிவரஞ்சனி.

பாய் ஃப்ரெண்ட்... கேர்ள் ஃப்ரெண்ட்...  யாரு பெஸ்ட்?

''ஏய்... ஓவரா குற்றப்பத்திரிகை வாசிக்காதீங்கடி... ரொம்ப நல்லவளுங்களா...''னு பதிலடி கொடுக்க ரெடியானாங்க எதிரணி.

''ஃப்ரெண்டுங்கிற பேர்ல கேர்ள்ஸ், பாய்ஸை படுத்துற பாடு இருக்கே... புளூ கிராஸ்லயே கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம்! பஸ் ஸ்டாப்ல பிக் அப், டிராப் டியூட்டி, மொபைல் ரீ-சார்ஜ், அசைன்மென்ட், புராஜெக்ட் ஹெல்ப், லைப்ரரியில ரெஃபரன்ஸ் புக்ஸ் தேடிக் கொடுக்குறதுனு படுத்தி எடுத்து, கடைசியா தன்னோட ரெஜிஸ்டர் மேரேஜுக்கு சாட்சிக் கையெழுத்துப் போட வைக்கிற வரைக்கும் பிழிஞ்சு எடுத்துடுவாங்க''னு பொளந்து கட்டினாங்க பிங்கி.

''பொசஸிவ்னஸ்னு பேர் வெச்சுக்கிட்டு, 'நீ மத்த பொண்ணுங்ககிட்ட பேசக் கூடாது, பேசவே கூடாது’னு டார்ச்சர் பண்ற தீவிரவாதி கேர்ள் ஃப்ரெண்ட்ஸையும் சமாளிக்கத்தான் செய்றாங்க நம்ம பாவப்பட்ட பசங்க. கடைசியில 'வேலன்டைன்ஸ் டே கார்ட்' கொடுப்பாங்கனு குற்றம் சுமத்தின லேடீஸ்... உங்களுக்கு ஒரு கேள்வி. ஒரு பையன்கிட்ட ஃப்ரெண்டா பழகி, ஆனா ஃப்ரெண்ட்ஷிப்புக்கும் லவ்வுக்கும் நடுவுல நின்னுக்கிட்டு அவனைப் படுத்தி எடுக்குற கேர்ள்ஸும் இங்க இருக்காங்களா... இல்லையா?''னு வகையா வக்காலத்து வாங்கினாங்க மதியரசி.

பாய் ஃப்ரெண்ட்... கேர்ள் ஃப்ரெண்ட்...  யாரு பெஸ்ட்?
பாய் ஃப்ரெண்ட்... கேர்ள் ஃப்ரெண்ட்...  யாரு பெஸ்ட்?

''பசங்க, பொண்ணுங்க மேல ரொம்ப கேரிங்கா இருப்பாங்க. நிறைய அக்கறை எடுத்துப்பாங்க. தன் கேர்ள் ஃப்ரெண் டுக்கு ஒரு பிரச்னைனா, எந்த ரிஸ்க்கும் எடுப்பாங்க. ஆனா பொண்ணுங்க..? அவன் ஆக்ஸிடென்ட் ஆகி ஆஸ்பிட்டல்ல இருந்தாகூட, 'ஐயோ, அப்பா திட்டுவாங்க'னு நேர்லகூட போய் பார்த்து நலம் விசாரிக்காம, 'டேக் கேர்’னு மெஸேஜ்தான் அனுப்புவாங்க''னு அம்ரிதா சொல்ல, ''விளையாட்டு வீராங்கனை சிவரஞ்சனி அவர்களே, தங்களது மேலான கருத்தைத் தெரிவிக்கவும்''னு அவரை கோதாவுக்குள் இறக்கிவிட்டாங்க நாட்டாமை கோகிலா.

''எனக்கு பசங்களப் பத்தி எதுவும் தெரியாது. ஏன்னா, நான் பசங்ககூட அவ்வளவு பேசினதில்லை. பிகாஸ்... ஐ ஸ்டடிட் இன் கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல் யா!'’னு ஜகா வாங்கினாங்க வீராங்கனை சிவரஞ்சனி.

கடைசியா தீர்ப்பு சொன்ன நாட்டாமை... ''ஃப்ரெண்ட்ஸ்ல... பாய் ஃப்ரெண்ட்ஸ், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாம் எந்தப் பிரிவும் இல்ல. ஃப்ரெண்ட்ஸ்... அவ்ளோதான். ஒற்றுமையே உயர்வு!''னு 'சாலமன்' பாப்பையா ரேஞ்சுக்கு கரகரக்க... பலத்த கை தட்டல்... அவரோட முதுகுல!

- பி.விவேக் ஆனந்த்

படங்கள்: தே.தீட்ஷித்