உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, 'ரேடியோ சிட்டி எஃப்.எம்' நடத்திய 'சக்தி சங்கமம்’ நிகழ்ச்சியில் மீடியா பார்ட்னராக 'அவள் விகடன்' கைகோக்க... நிகழ்ச்சி நடந்த சென்னை, நந்தனம் மைதானத்திலிருக்கும் அரங்கு... தோழிகளின் சங்கமத்தால் மகிழ்ச்சி, குதூகலம், கொண்டாட்டம் என விழாக்கோலம் பூண்டது!

'ரேடியோ சிட்டி’யின் 'ஆர்ஜே’ சக்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, நடிகை இனியா, சிக்கில் மாலா சந்திரசேகர் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, ஆர்ப்பரிக்க ஆரம்பித்த அரங்கம்... மாலை 5 மணிவரை இடைவிடாமல் அதிர்ந்தது.

சிக்கில் மாலா சந்திரசேகர் புல்லாங்குழலில் 'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ வாசிக்க, உருகிய தோழிகள் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ வாசிக்க வேண்டி அவரிடம் கோரிக்கை வைக்க, மீண்டும் இசைத் தென்றல் தாலாட்டியது தோழிகளை.

சக்தி, ''அடுத்ததா உங்களில் ஒருவர்தான் வந்து பாடப் போறீங்க...'' என்று அழைப்பு விடுக்க, குணசுந்தரி பாட்டி உற்சாகமாக மேடையேறி விநாயகர் பாடல் பாட, விழா சூடு பிடிக்கத் தொடங்கியது. ரங்கோலிப் போட்டியில் கைவண்ணத்தால் கலக்கினார்கள் சகோதரிகள். காந்தியடிகள் படத்தை தெர்மாகோல், வாட்டர் கலர் பயன்படுத்தி தத்ரூபமாக வரைந்திருந்த 3டி கோலமும், 20 கிலோ உப்பில் கலர் பொடிகளைக் கலந்து மயிலை தோகை விரிக்கச் செய்திருந்த கோலமும் அழகோ அழகு! மொத்தம் மூன்று கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 'அவள் விகடன்' சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன!

'இது எங்க ஏரியா’ என்று மெஹந்தி போட்டியில் கலக்கினார்கள் காலேஜ் பட்டர்ஃப்ளைஸ். யாருக்கு பரிசு கொடுப்பது என்று தீர்மானிக்க முடியாமல் நடுவர்களை திண்டாட வைத்தனர் ஒவ்வொரு போட்டியாளரும். விழாவை கூடுதல் கலகலப்பாக்க ஆர்.ஜே.முன்னாவும், ஆர்.ஜே.பரத்தும் சேர்ந்து நடத்திய 'தம்ஸி’ நிகழ்ச்சி, ஜோரோ ஜோர்! அதாவது, படத்தின் பெயரை நடித்துக் காட்டி கண்டுபிடிப்பதே போட்டி. போட்டியாளர்களைவிட, பார்வையாளர்களே நிகழ்ச்சியை அதிகம் கொண்டாடினர். அவ்வளவு காமெடி கலாட்டா. அடுத்ததாக 'நிவேதினம்’ ஹோட்டல் சீஃப் செஃப் மேடையில் லைவ்வாக காலிஃப்ளவர் மஞ்சூரியன், சைனீஸ் புட்ஸ் எல்லாம் செய்து காட்ட, அரங்கம் மணத்தது.

தொடர்ந்து, டான்ஸ்! காலேஜ் கேர்ள்ஸ் முதல் பாட்டிகள் வரை சேர்ந்து ஆடிய ஆட்டம் செமஅட்டகாசம்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி