Published:Updated:

ஒரு பாடகி... உருவாகிறாள்!

ஒரு பாடகி... உருவாகிறாள்!

ஒரு பாடகி... உருவாகிறாள்!

ஒரு பாடகி... உருவாகிறாள்!

Published:Updated:
##~##

''கடந்த பத்து வருஷமா இசைதான் என் உலகமா இருந்திருக்கு. அதுக்குப் பரிசா இன்னிக்குப் 'பாடகி’ என்கிற அடையாளம் கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு!''

- தேன் குரலில் திகட்டாமல் பேசுகிறார் ரோஹிணி. 'அபஸ்வரம் ராம்ஜி’யின் இசைக் குழுவில் பாடகி, பல சேனல்களின் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர், சிறிது காலம் சொந்தமாக இசைக்குழு நடத்தியவர், சீக்கிரமே சினிமாவிலும் பின்னணிப் பாடகி என்று இசைப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும் இந்த இளம் சிட்டு, சென்னை, மீனாட்சி மகளிர் கல்லூரியின் இறுதியாண்டு பி.காம் மாணவி!

''பத்து வருஷமா கர்னாடிக் இசையும், ஒரு வருஷம் ஹிந்துஸ்தானி இசையும் கத்துக்கிட்டேன். என் முதல் குரு எஸ்.வி. உஷாவிலிருந்து அதன் பின்னர் கத்துக்கிட்ட சகுந்தலா சேஷாத்ரி, லீலாவதி, அஜய் நம்பூதிரி எல்லாருமே என் திறமையைக் கொஞ்சம் கொஞ்சமா மெருகேற்றிக் கொடுத்தாங்க. நாலாவது படிக்கும்போது என் முதல் மேடையேற்றம். பத்தாவது வரைக்கும் படிச்ச பி.எஸ்.பி.பி, அதன் பிறகு படிச்ச சின்மயா ரெண்டு பள்ளிகளுமே என்னோட வளர்ச்சிக்கு உறுதுணையா இருந்தாங்க. இன்னொரு பக்கம், எங்க அபார்ட்மென்ட்டுக்கே நான் ஒரு என்டர்டெயின்மென்ட் பீஸ். எல்லாரும் என்னை பாடச் சொல்லி ரசிச்சுக் கேட்பாங்க. இதெல்லாம்தான் இசையில் எனக்குத் தன்னம்பிக்கை வளர்த்த கைதட்டல்கள்!

ஒரு பாடகி... உருவாகிறாள்!

கர்னாடிக் இசையில இருந்த பேஸ், லைட் மியூசிக்லயும் ரொம்ப உதவியா இருந்தது. 'அபஸ்வரம் ராம்ஜி’ குழுவில் இன்னிக்குவரைக்கும் பாடிட்டு இருக்கேன். அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்தப்ப, அவரோட பிறந்தநாளன்னிக்கு அனாதை குழந்தைகள் பற்றிய பாடல் ஒன்றை ராஷ்டிரபதி பவன்லேயே அவருக்காக பாடின குழுவில் நானும் ஒருத்தி. பல படங்கள்ல ஹார்மனி பாடியிருக்கேன். 'சந்திரமுகி’ படத்தில் வரும் 'கொக்கு பறபற’ பாடலை பெரிய வாய்ப்பா நினைக்கிறேன். தொடர்ந்து சன் டி.வி 'சங்கீத மஹா யுத்தம்’, ஜெயா டி.வி 'பாலப்ரம்மம்’ நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டது என்னோட மேடை வாய்ப்புகளை அதிகரிச்சுது.

ஒரு பாடகி... உருவாகிறாள்!

எப்பவும் எனக்கு பெரிய பலமா இருக்கறது, என் குடும்பம்தான். அடுத்ததா என்னோட ஃப்ரெண்ட்ஸ். நான் மிஸ் பண்ற கிளாஸஸுக்கு எல்லாம் நோட்ஸ் கொடுத்து ஹெல்ப் பண்றவ ரேஷ்மா. ஒவ்வொரு ஷோவுக்கும் எனக்கான காஸ்ட்யூம்ல ஹெல்ப் பண்றவ பவித்ரா. இவங்க எல்லாருக்கும் நிறைய தேங்க்ஸ். ரெண்டு வருஷம் முன்ன என்னோட சொந்த இசைக்குழுவை ஆரம்பிச்சேன். ஆனா, சரியான நேர பராமரிப்பு இல்லாம தொடர்ந்து நடத்த முடியல'' என்று பேச்சில் இடைவெளி விட்டார் ரோஹிணி.

ஒரு பாடகி... உருவாகிறாள்!

அங்கே தொடங்கிய அவருடைய அம்மா ராஜேஸ்வரி, ''நிச்சயமா சீக்கிரமே அவ இசைக்குழுவை மீண்டும் ஆரம்பிச்சுடுவா. ஏன்னா, தடைகள் அவளுக்குப் புதுசில்ல. அவ பத்தாவது படிச்சுட்டு இருக்கும்போது, அதுவும் மேடையில பாடிட்டு இருக்கும்போது திடீர்னு குரல் அப்படியே நின்னு போச்சு. அவசர ஆபரேஷன் பண்ணி ஒரு கட்டியை எடுத்ததுக்கு அப்புறம்தான் எங்களுக்கு நிம்மதி. ஆபரேஷனுக்கு அடுத்த நாள் அவ 'அம்மா’னு சொன்னப்போ, ஒரு பச்சை குழந்தை முதன் முதலா 'அம்மா’னு பேசும்போது ஏற்படுற பரவசத்தையும் சந்தோஷத்தையும் நான் உணர்ந்தேன். அதுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் அவளால பாட முடியல. ஆனா, அதையெல்லாம் தாண்டிதான் இன்னிக்கு இவ்வளவு தூரம் வந்திருக்கா!'' என்றார் கண்ணீர் தேங்கிய கண்களில் சிரிப்புடன்.

'இப்போ 'மாப்பிள்ளை விநாயகர்’ படத்தில் இரண்டு தனிப்பாடல்கள் பாடியிருக்கேன். அது சீக்கிரமே ரிலீஸ் ஆயிடும். விஜய் டிவி 'சூப்பர் சிங்கர் 4’ல வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அப்பா, அம்மா, நண்பர்கள், நலம்விரும்பிகள்னு எல்லாரோட வாழ்த்துக்கள் மற்றும் வேண்டுதல்கள் என் கூடவே இருக்கு. கூடிய சீக்கிரமே ஒரு பாப்புலர் பாடகியா என்னை மறுபடியும் மீட் பண்ணுவீங்கனு நம்புறேன்!''

- காலேஜ் புக்ஸ்களை அடுக்கியவாறே 'பை’ சொல்கிறார் ரோஹிணி!

- பி.என்.அர்ச்சனா   படங்கள்: ரா.மூகாம்பிகை