Published:Updated:

"கழுகுபோல காத்திருங்கள்... கட்டாயம் பலன் கிடைக்கும்!”

அவள் டீன்ஸ்

"கழுகுபோல காத்திருங்கள்... கட்டாயம் பலன் கிடைக்கும்!”

அவள் டீன்ஸ்

Published:Updated:
##~##

த்தனை எத்தனையோ கல்லூரிகள் முளைத்து, பட்டதாரிகள் உருவாகி வந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படியிருந்தும், சுயமாக தொழில்முனைவோர் எண்ணிக்கை.... இங்கே மிகமிகக் குறைவே! இந்நிலையில், சுயமாக தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களைத் தேடிப்பிடித்து உதவிக்கரம் நீட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது... அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE). இதை நாடு முழுக்க இருக்கும் கல்லூரிகள் தங்கள் கைகளில் ஏந்தி... கடைசி கட்டம் வரை கொண்டு சேர்த்துக் கொண்டுள்ளன. அந்த வரிசையில் தானும் ஒன்றாகக் களத்திலிருக்கிறது... சென்னை, தாகூர் பொறியியல் கல்லூரி.

மாணவ - மாணவிகளுக்கு மட்டுமல்லாது... சுற்றுவட்டார கிராமப் பகுதி மக்களுக்கும் சுயதொழில் பயிற்சிகளை அளித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவி வரும் இக்கல்லூரி, இதற்காகவே 'தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம்' எனும் தனிப்பிரிவை நடத்தி வருகிறது! இங்கே பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டி, 'தையல், அழகுக் கலை என பலவிதமான பயிற்சிகளைத் தருகிறோம். இதற்கான பண உதவியை அகில இந்திய தொழில்நுட்ப கழகமே தந்துவிடுவதால்... இலவசமாகவே தான் பயிற்சி தருகிறோம்'' என்றார்.

"கழுகுபோல காத்திருங்கள்... கட்டாயம் பலன் கிடைக்கும்!”

\

"கழுகுபோல காத்திருங்கள்... கட்டாயம் பலன் கிடைக்கும்!”

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவன (MSME) உதவி இயக்குநர் புனிதவதி, ''அரசு, தொழில் துவங்குவதற்கு பல்வேறு வகையான திட்டங்களின் கீழ், மானியத்துடன் கூடிய கடன்களை வழங்கி வருகிறது. நம் நாட்டில் உற்பத்தி சார்ந்த தொழில்களைவிட, சேவை சார்ந்த தொழில்களில் பெண்கள் ஈடுபடுவது உடனடி வருமானம் தரக்கூடியதாகவும், பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கும்'' என்று டிப்ஸ் சொன்னதோடு...

"கழுகுபோல காத்திருங்கள்... கட்டாயம் பலன் கிடைக்கும்!”

''கழுகுக்கு சராசரி வாழ்நாட்கள் 40 வருடங்கள். அதன் முடிவில், சிறகுகளில் எடை கூடிவிட பறக்க இயலாத நிலையில் மலை உச்சிக்கு சென்று தன் சிறகுகளை தான் அலகால் தானே பிய்த்துவிட்டு, மீண்டும் முளைக்கும் வரை காத்திருக்குமாம். அதுபோலத்தான் புதிதாக தொழில் தொடங்க வருபவர்கள், கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டால், எதிர்கால பலன் நிச்சயம்'' என்று உத்வேக பாடத்தையும் சொன்னார்.

- வே.கிருஷ்ணவேணி, பி.செ.விஷ்ணு

படங்கள்: த.ரூபேந்தர்

"கழுகுபோல காத்திருங்கள்... கட்டாயம் பலன் கிடைக்கும்!”

திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களில் ஒருவரான லாவண்யா, ''நான் இல்லத்தரசியா இருக்கேன். 12 நாள் தையல் பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். ஜாக்கெட், சுடிதார், சின்ன பசங்களுக்கான டிரெஸ் எப்படி தைக்கறதுன்னு கத்து கொடுத்தாங்க. இப்ப நானே மெஷின் வாங்கி எங்க வீட்டுக்கு தேவையான டிரெஸ்களை தைக்கிறேன்'' என்றார் பெருமையாக!

அடுத்து பேசிய தேன்மொழி, ''வீட்ல ஓய்வா இருக்கற நேரத்துல ஏதாச்சும் தொழில் செய்து காசு சம்பாதிக்க நினைச்சேன். இந்த திட்டத்துல சேர்ந்ததுமே அது நிறைவேறிடுச்சு. இப்ப வீட்டுலயே டெய்லரிங் மற்றும் பியூட்டி பார்லர் வெச்சுருக்கேன். ரெண்டுமே எனக்கு வருமானத்தைக் கொடுக்குது'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.