Published:Updated:

புயல் பெண் ஜான்சி ராணி!

டீன்ஸ்

புயல் பெண் ஜான்சி ராணி!

டீன்ஸ்

Published:Updated:
##~##

''ஓட்டப்பந்தயத்தில் என்னோட பலம்னு நான் நினைக்கிறது, தொடக்க ஓட்டத்தை என் முழு முயற்சியையும் கொடுத்து முன்னெடுக்கிறது...''

- கிரவுண்டில் விழும் வெயிலை உள்வாங்கியிருந்த களைப்பு உடம்பில் இருந்தாலும், முகத்தில் ஃப்ரெஷ் புன்னகையுடன் ஆரம்பித்தார் ஜான்சி ராணி! தமிழ்நாட்டின் தடகள நம்பிக்கை நட்சத்திரமான இவர், அரியலூர் பெண். மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாமாண்டு இளங்கலை நுண்ணுயிரியல் மாணவி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தென்னிந்திய அளவிலான தடகள போட்டிகளில் 100 மீட்டரில் தங்கம், 200 மீட்டரில் வெள்ளி, தேசிய மகளிர் தடகள போட்டிகளில் 100 மீட்டரில் வெண்கலம், 200 மீட்டரில் வெள்ளி, தேசிய ஜூனியர் தடகள போட்டிகளில் 4x100 மீட்டர் ரிலே ஓட்டத்தில் வெண்கலம்... என்று பதக்கங்கள் அள்ளிஇருக்கிறார். பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் இவரின் ஓட்ட நேரம்தான் ரெக்கார்ட். 100 மீட்டர் தூரத்தை 12.2 விநாடிகளில் கடந்திருக்கிறார்.

புயல் பெண் ஜான்சி ராணி!
புயல் பெண் ஜான்சி ராணி!

இரண்டு முறை 'தமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீராங்கனை’ பட்டத்தை வாங்கியிருக்கும் ஜான்சிக்கு விளையாட்டில் ஆர்வம் வந்தது ஐந்தாம் வகுப்பில். ''எங்கப்பா கபடி பிளேயர். அதனால எனக்கும் இயல்பாவே ஸ்போர்ட்ஸ் ஆர்வம். தேவமங்களம் நடுநிலைப்பள்ளியில படிச்ச என்னோட திறமையை கவனிச்ச ஈரோடு விளையாட்டு விடுதியின் தடகள பயிற்றுநர் பேட்ரிக், ஈரோடு விளையாட்டு விடுதியில் சேர்த்து பயிற்சி கொடுத்தார். 11-வது படிக்கும்போது புது கோச் லட்சுமி நாராயணன் கிடைச்சார். 12-க்கு பிறகு மயிலாடுதுறையில் இருக்கிற இந்திய விளையாட்டு ஆணைய கோச் பிரபாகரன்கிட்ட பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். இவங்க எல்லோரும்தான் என்னை இத்தனை படிகளில் ஏற்றிவிட்டவங்க. இன்னொரு பக்கம், படிப்புலயும் ஆல் கிளியர்'' என்று சிரிக்கிறார் ஜான்சி.

''ஒரு வீராங்கனையா இருந்தா நான் மட்டும்தான் நம்ம நாட்டுக்காக பதக்கங்களை வாங்கித் தர முடியும். ஒரு கோச் ஆயிட்டா, பல பதக்கங்களை வாங்கற அளவுக்கு வீரர், வீராங்கனைகளை உருவாக்க முடியும். யெஸ்... எதிர்காலத்துல கோச் ஆகறதுதான் என் லட்சியம்!''

- புருவம் உயர்த்தி சொல்கிறார் ஜான்சி ராணி!

- மு.சா.கௌதமன் படங்கள்: செ.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism