Published:Updated:

ரெண்டு சிம்... பத்து மெசேஜ் கடன்...!

அவள் டீன்ஸ்

ரெண்டு சிம்... பத்து மெசேஜ் கடன்...!

அவள் டீன்ஸ்

Published:Updated:
ரெண்டு சிம்... பத்து மெசேஜ் கடன்...!
##~##

'இப்ப இருக்குற யூத்துக்கு எல்லாம், வலது கை கட்டைவிரல் தேய்ஞ்சுட்டே வருது'னு அப்பாடக்கர் ஆய்வு முடிவுகள் சொல்லுது. அந்தளவுக்கு எப்ப பார்த்தாலும் மொபைலும், மெசேஜும், கட்டைவிரலுமாவே இருக்காங்க. ஆனா, 'ஒரு நாளைக்கு 100 மெசேஜ் மட்டும்தான்’னு வந்திருக்கிற சட்டம், அவங்களோட சந்தோஷத்துக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சங்கு ஊதிடுச்சு. இந்த அதிமுக்கிய பிரச்னையால தாங்கள் அனுபவிக்கும் இன்னல்கள் பத்தி இங்க விலாவாரியா பேசுறாங்க, மயிலாடுதுறை ஏ.வி.சி பொறியியல் கல்லூரி மாணவர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முன்னயெல்லாம் ஸ்கூல் நண்பர்கள், காலேஜ் நண்பர்கள், சொந்தக்காரங்கனு 'குரூப்’ பிரிச்சு, அவங்கவங்களுக்கு தனித்தனியா மெசேஜ் அனுப்புவோம். இந்த '100’ பிரச்னையால தேவை யானவங்க, தேவையில்லாதவங்கனு புது குரூப் பிரிச்சு, சிக்கனமா, பார்த்து பார்த்து அனுப்ப வேண்டியதா போச்சு''னு நரேந்திரன் புலம்ப,

''ஓ! யாருப்பா அந்த தேவையானவங்க, தேவையில்லாதவங்க..?''னு சந்தேகம் கேட்டார் சரண்யா. ''அவருக்கு பசங்க எல்லாரும் தேவையில்லாதவங்க, பொண்ணுங்க எல்லாரும் தேவையானவங்க!''னு நிவேதா கலாய்க்க,

''என்னா அறிவு!''னு சரணாகதி ஆனார் நரேந்திரன்.

''ஆனா, இதுலயும் இந்த பொண்ணுங்க தொல்ல தாங்க முடியல...''னு அடுத்த விஷயத்தை ஆரம்பிச்சார் சிவா.

''அதாவது, ஒரே மெசேஜ்ல 'சாப்பிட்டியா, படிச்சுட்டியா, எங்க இருக்க, எப்ப வருவ’னு கிட்டத்தட்ட 10 கேள்விகள் அனுப்பிடுவாங்க பொண்ணுங்க. அது எல்லாத்துக்கும் நாங்க பதில் அனுப்ப, ஆறு மெசேஜுக்கு மேல ஆயிடும். அதிலும் கொடுமையா, cz, rcvd, col, tk  இப்படி நீங்க சுருக்கி அனுப்புற வார்த்தைகள் எல்லாம் புரியாம, விஷயம் தெரிஞ்ச விற்பன்னர்களுக்கு (நண்பர்கள் தான்!) போன் பண்ணி வேற கேட்கணும். அதுக்கு தனியா காசு கரையும் தெரியுமா''னு சிவா கண்ணைக் கசக்க...  

''அது மட்டுமாடா மச்சான்..?! அவங்க ஒரு மெசேஜ் பண்ணினா, நாம அஞ்சு மெசேஜ் பதிலுக்கு அனுப்பறோம். இப்படி ஆர்வக்கோளாறுல அதிவேகத்துல போறதால மதியத்துக்குள்ள நமக்கு மெசேஜ் காலி ஆயிடும். ஆனா, அவங்க கஞ்சத்தனமா மெசேஜை சேர்த்து வெச்சு, நைட் வரைக்கும் அனுப்புவாங்க. அதோட இல்லாம, 'உனக்கு எப்படிடா அதுக்குள்ள மெசேஜ் தீர்ந்துச்சு? யாருக்கு அனுப்பினே..?’னு சந்தேக டார்ச்சர் வேற. அவங்கள சமாதானம் பண்ண கால் பண்ணினா, குறைஞ்சது அரை மணி நேரமாவது கெஞ்ச வெச்சு, நம்ம பேலன்ஸை கற்பூரமா கரைச்சுடுவாங்க. பொண்ணுங்களோட இந்த அராஜகத்தை எல்லாம் 'டிராய்’ (தேசிய தொலைத் தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையம்) கொஞ்சம் ஒழுங்குபடுத்தணும்!''னு கோரிக்கை வெச்சார் விவேக்.

ரெண்டு சிம்... பத்து மெசேஜ் கடன்...!

''ஏதோ ராமரோட பேரப் புள்ளைங்க மாதிரி பேசாதீங்க...''னு சீறி வந்தார் ஐஸ் (ஐஸ்வர்யா).

''நீங்க ஒரே நேரத்துல ரெண்டு, மூணு பொண்ணுங்ககூட 'சாட்’ பண்றதும், அதில் மெசேஜை மாத்தி அனுப்பி மாட்டிக்கிறதும் வழக்கம் தானே? மெசேஜ் தீர்ந்து போன உடனே, 'ஐயோ, இங்க டவர் இல்லப்பா. ஃபேஸ்புக் வா’னு நீங்க அள்ளிவிடுற பொய்யை நம்பி ஆன்லைனுக்கு வர்ற அப்புராணி பொண்ணுங்களும் இருக்காங்கதானே... இருக்காங்கதானே... இருக்காங்கதானே..?''னு ஐஸ்வர்யா கொதித்தெழ,

''ஏய், ஆத்தாளுக்கு மஞ்சத் தண்ணி ஊத்துங்கடா!''னு சதாய்ச்சாங்க பசங்க.

ரெண்டு சிம்... பத்து மெசேஜ் கடன்...!

''ஒரு நாளைக்கு 100 மெசேஜ் தான் என்பதால ரெண்டு சிம் வெச்சுக்க வேண்டியிருக்கு. அட, கலிகாலமே... அதுவும் பத்த மாட்டேங்குதே!''னு நொந்தார் சுகுமார்.

''மொக்கை மேசேஜ் வந்து குவியுற அட்ராஸிட்டியெல்லாம் இப்போ குறைஞ்சுருக்கு. அதே போல, ஏதாச்சும் சண்டை, கோபம்னா எம்ப்டி மெசேஜ் அனுப்பி கடுப்பேத்துறது எல்லாம் ஒழிஞ்சே போச்சு. அந்த வகையில, இந்த '100’ லிமிட் நல்லது தான்!''னு சரண்யா சொல்ல, கை தட்டினார் சுரேந்திரன்.

''போதும் போதும். போறப்போ பானிபூரி வாங்கித் தர்றேன்...''னு சரண்யா சொல்ல... ''இத முன்னாடியே சொல்லிருந்தா உன்னைப்பத்தி ரெண்டு வார்த்தை இன்னும் புகழ்ந்திருப்பேனே! சரண்யாவைப் பார்த்தா பாவனா மாதிரி இருக்குல்ல..!''னு பானிபூரியை கன்ஃபார்ம் பண்ணினார் சுரேந்திரன்.

'மெசேஜ் பத்தலைனு நான் ரொம்ப வருத்தப்பட்டது, இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டத்தப்போதான். எப்பவுமே சமுதாய அக்கறை கொண்ட மெசேஜ்களை ஃபார்வர்டு பண்ணுற எனக்கு, இந்த மெசேஜ் லிமிட் என் சேவைக் கரங் களைக் கட்டிப்போட்ட மாதிரி இருக்கு...''னு சிவா சொல்ல, அவரை மொத்த டீமும் உருக்கத்தோடு பார்க்க, நிகழ்ச்சி நிறைவு!

- மா.நந்தினி, படங்கள்: ர.அருண்பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism