Published:Updated:

அம்மாடியோவ்... பேஷன் பெண்கள்!

அம்மாடியோவ்... பேஷன் பெண்கள்!

அம்மாடியோவ்... பேஷன் பெண்கள்!

அம்மாடியோவ்... பேஷன் பெண்கள்!

Published:Updated:
##~##

தாங்களே வடிவமைச்ச ஆடைகளை, இங்க நமக்கு அறிமுகப்படுத்தறாங்க ஃபேஷன் டிசைனிங் துறை மாணவிகள் சிலர். ஆடைகளைத் தயாரிக்கறதுக்காக அவங்க செலவழிச்ச தொகை, இறுதியா அதுக்கு நிர்ணயிச்சிருக்கற விலை இதையெல்லாம் கேட்டதும்... நாங்க சொன்னது, 'அம்மாடியோவ்’! கதைக்குள்ள போங்க... நீங்களும் சொல்வீங்க, இதையே!

ஸ்லாகியா மோகன், பி.ஏ, ஹானர்ஸ் இன் ஃபேஷன் டிசைனிங், பேர்ல் அகாடமி ஆஃப் ஃபேஷன், சென்னை: '’நான் வடிவமைச்ச இந்த 'கோல்டன் ட்ரீ’ டிரெஸ்ல சிவப்பு நிறம்தான் பிரதானம். நீளமான பேனல்ட் (Panelled) ஸ்கர்ட் அடியில கோல்டன் எம்ப்ராய்டரி வொர்க் பண்ணியிருக்கேன். ஸ்கர்ட்டுக்கு டஸ்ஸர் சில்க் மெட்டீரியலை பயன்படுத்தினேன். டிரான்ஸ்பரன்ட் நெட்டட் டாப் நீளமா ஸ்கர்ட் வரை இருக்கும். டாப் இடுப்பு பக்கம் 'வி’ ஷேப்ல விலகி இருக்கும். டாப்பின் காலர், பாடி எல்லாம் கோல்டன் எம்ப்ராய்டரியால ஆனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னோட மாடல், மேக்ன பிரியா உடுத்தியிருக்கிற இந்த டிரெஸ்ஸை டிசைன் செய்ய ஒரு மாதம் ஆச்சு. செலவு 10,000 ரூபாய். இதை 20,000 ரூபாய்க்கு வித்துடுவேன். ஒரேயொரு நிபந்தனை... இந்த டிரெஸ் மேல ஆசைப்படுறவங்க, ஆறடி உசரத்துக்கு அருகிலயாச்சும் இருக்கணும்!''

அம்மாடியோவ்... பேஷன் பெண்கள்!

சாக்ஷி ரத்தோர், நிட்வேர் டிசைன், நிஃப்ட், சென்னை: '’அந்தக் கால இந்தி கிளாமர் நடிகை ஹெலன், பல படங்கள்ல காபரே டான்ஸ் ஆடுறவங்களா வருவாங்க. அவங்களோட டிரெஸ்ஸிங் சென்ஸையே இன்ஸ்பிரஷேனா வெச்சு... இந்த இண்டோ - வெஸ்டர்ன் ஆடையை வடிவமைச்சேன். ஒன் சைடு ஷோல்டர் டாப் முழுவதும் பிளெய்ன் நிட்டால் ஆனது. தோள்பட்டை ஸ்டிராப்ல பின்பக்கமா பாலியஸ்டர் துணியை இணைச்சிருப்பேன். பார்க்கறதுக்கு சூப்பர்மேன் டிரெஸ் தொங்கற துணி மாதிரி இருக்கும். முட்டி வரைக்குமான ஸ்கர்ட், சர்குலர் நிட் ஃபேப்ரிக்கால் ஆனது. கால்ல குட்டி குட்டி ஆட்டின்ஸ் இணைச்ச ஸ்டாக்கிங்ஸ்.

மாடல் கவிதா இதை உடுத்தியிருக்கிறப்போ... ரொம்ப ஸ்டைலா தெரியறாங்க இல்ல? இதை உருவாக்க வெறும் 800 ரூபாய்தான் செலவாச்சு. ஆனா, 6,000 ரூபாய்க்கு விலைபோயிடும். குட்டையா இருக்கறவங்களுக்குத்தான் இது நிரந்தர பொருத்தம்!''

அம்மாடியோவ்... பேஷன் பெண்கள்!

ராஜேஸ்வரி ஜா, நிட்வேர் டிசைன், நிஃப்ட், சென்னை: ''அந்தக் காலத்துல வட இந்தியாவை ஆண்ட ராஜபுத்திர வம்சத்து பெண்கள் சேலை கட்டும் விதமும், மொகலாய பெண்களோட ஆடம்பரமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரெண்டையும் இணைச்சு உருவாக்கினதுதான்... இந்த த்ரீ பீஸ் புடவை. பாலியஸ்டர் காட்டன் ப்ரோகேட், ஹாஃப் வொயிட் நிட், வெல்வெட், கிறிஸ்டல்ஸ், ஸ்டோன்ஸ், முத்துக்கள் எல்லாம் இணைஞ்ச வேலைப்பாடு ஆடம்பரமா இருக்கும். 2,400 ரூபாய் செலவுல, ரெண்டு மாத உழைப்புல உருவான புடவை இது. சொன்னா நம்ப மாட்டீங்க... இதுக்கு நான் நிர்ணயிச்சிருக்கிற விலை 20,000 ரூபாய்!''

அம்மாடியோவ்... பேஷன் பெண்கள்!

விஜய்ஸ்ரீ, அப்பேரல் புரொடக்ஷன், நிஃப்ட், சென்னை: '’ஜாஸ் டான்ஸ் ஆடுறப்ப இந்த மாதிரி ஆடைதான் உடுத்தியிருப்பாங்க. முட்டிவரைக்குமான டிரெஸ்ல, டாப் ஸ்டிராப்லெஸ் மாடல் கொண்டது. 'பிளாக் கிரேப்' (Crepe) மெட்டீரியலான இந்த டிரஸ்ல இடுப்பு பகுதி... 'டார்க்கொய்ஸ் ஸ்வைட்' (Turquoise Suede) மெட்டீரியலால் ஆனது. ஒரு மாசமா டிசைன் பண்ணின இந்த டிரெஸ்ஸுக்காக செலவழிச்சது... 1,600 ரூபாய். சம்பாதிக்கப் போறது... 5,000 ரூபாய்!''

ஷகீன் ஷேக், அப்பேரல் புரொடக்ஷன், நிஃப்ட், சென்னை: ''பார்ட்டிக்கு போறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்குப் பொருத்தமான ஆடைனா... கண்ணை மூடிட்டு சொல்லிடலாம் 'கான்டூர் டிரெஸ்' (contour dress). அதனால நான் டிசைன் பண்ற டிரெஸ்ல அதை மெயின் தீமா வெச்சு, கூடவே நெட்டையும் சேர்த்துக்கிட்டேன். கடல் பச்சை நிறத்துல கான்டூர் டிரெஸ்ஸை டிசைன் பண்ணினேன். கிரேப் ஃபேப்ரிக் மெட்டீரியலிலான இந்த டிரெஸ், உள்பக்கம் லைனிங்கா சிந்தடிக் காட்டன் வெச்சு தைச்சது. டிரெஸ் முழுவதையும் நெட்டட் மெட்டீரியலால கவர் பண்ணின மாதிரி இருக்கும். எல்லாத்தையும்விட ஸ்பெஷல், 1,500 செலவுல 7,000 ரூபாய் வரவு வரப் போகுது!''

கட்டுரை, படங்கள்: ஸ்டீவ்ஸ்.சு.இராட்ரிக்ஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism