Published:Updated:

கலக்கும் கடல் ராணிகள்!

கலக்கும் கடல் ராணிகள்!

கலக்கும் கடல் ராணிகள்!

கலக்கும் கடல் ராணிகள்!

Published:Updated:
##~##

''மத்திய தரைக்கடல்.... அன்டார்க்டிக் பெருங்கடல்... இதெல்லாம் எங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி. பின்னே... இது எல்லாமே எங்க படகுக்கு அடியில ஓடிய கடல்கள்தானே!'’

- பத்தாம் வகுப்பு வர்ஷா, பன்னிரண்டாம் வகுப்பு ஐஸ்வர்யா இருவரும் இப்படிச் சிரித்தபோது, ஆச்சர்யத்துடன் ரசித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுற்றுலா செல்லும்போது, கடலில் கால் நனைப்பதற்கே பொதுவாக அச்சப்படுபவர்கள்தான் இங்கே அதிகம். அவர்களுக்கு நடுவே, பள்ளி மாணவிகளான இந்த இருவரும், தனியாக ஒரு படகை எடுத்துக்கொண்டு உலகின் முக்கால்வாசி தண்ணீர் உலகை அளவிட்டு... நூற்றுக்கணக்கான மெடல்களையும் கைப்பற்றி வந்து மிடுக்காக நிற்கும்போது, ஆச்சர்யப்படாமல் இருக்க முடியுமா என்ன?!

கலக்கும் கடல் ராணிகள்!

வர்ஷாவின் அப்பா இன்டீரியர் டிசைனர்; அம்மாவுக்கு ஏர்வேஸ் உத்யோகம். ஐஸ்வர்யாவின் அப்பா ஐ.டி தொழிலதிபர்; அம்மா இல்லத்தரசி. ஆகமொத்தம், கடலன்னையுடன் சிறிதும் பிணைப்பில்லாத நகரவாசனையான குடும்பம்.

''தமிழ்நாடு பாய்மர படகு சங்க (TNSA-Tamilnadu Sailing Association) உறுப்பினரா இருந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி சாந்தா, நான் நாலாவது படிக்குறப்ப ஒருநாள் போட்டிங் கூட்டிட்டுப் போனாங்க. அவங்களே படகை ஓட்டினப்போ, எனக்கு வேற ஒரு உலகத்துக்குப் போன மாதிரி இருந்துச்சு. நானும் ஓட்டணும்னு ஆர்வம் வந்துச்சு. அவங்களோட அமைப்பு நடத்தின சம்மர் கேம்ப்ல சேர்ந்தேன்.  படகு ஓட்டுறதோட... கடலைப் பத்தியும் கத்துக் கொடுத்தாங்க. படகுல எப்படி நடந்துக்கணும்னு தரையில படகை நிறுத்தி சொல்லித் தந்தப்போ, விழுந்து விழுந்து சிரிப்போம். ஆனா... அதுதான் இன்னிக்கு இவ்வளவு தூரம் எங்களை கொண்டு வந்திருக்கு.'' என்று பெருமிதத்துடன் சொன்னார் வர்ஷா.

''அதே சம்மர் கேம்ப்லதான் நாங்க ஃப்ரெண்ட்ஸானோம். அந்த கேம்ப் முடிஞ்சதும், நல்லா படகோட்டின சில மாணவ, மாணவிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, கடுமையான பயிற்சிக்கு அனுப்பினாங்க. அமெரிக்காவில் இருந்து வந்த பீட்டர்தான் எங்க கோச். நானும் வர்ஷாவும் முதன் முதலா 'ஆப்டி இன்லாண்ட் நேஷனல்'ங்கற போட்டியில வெற்றி பெற்றோம். ஒருத்தர் போபால்ல, இன்னொருத்தர் புனேல. அப்போ ஆரம்பிச்சு... லேசர் கோஸ்டல் நேஷனல், டச் யூத் ரேகாட்டா, செயில் த கல்ஃப் ரேகாட்டா, யுரோ கப், ஏசியன் செய்லிங் சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலியன் யூத் சாம்பியன்ஷிப்னு கிட்டத்தட்ட 150 போட்டிகள்ல ரெண்டுபேரும் கடலை கடந்தாச்சு'’ என்ற ஐஸ்வர்யா,

''இந்த விளையாட்டுத் துறையில, இத்தனை ஆண்டுகளா மும்பை மாலுமிகள்தான் ஆட்சி செஞ்சுட்டிருந்தாங்க. இப்பதான் தமிழ்நாடு மேல வந்துட்டிருக்கு. இந்த முறை தமிழக அரசு சார்பா

கலக்கும் கடல் ராணிகள்!

விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு பரிசுத் தொகை தந்தப்போ, என்னையும் அதில் சேர்த்தது சந்தோஷமா இருக்கு. அடுத்த முறை, என் கடல் பார்ட்னர் வர்ஷாவும் வாங்குவானு நம்பிக்கையிருக்கு!''

- தோழியைப் பார்த்து சிரித்தபடியே சொன்னார்.

''இதுக்கான செலவுகள்தான் எனக்கும், ஐஸ்வர்யாவோட அப்பா நெடுஞ்செழியனுக்கும் சமாளிக்க முடியாததா இருக்கு'' என்று வர்ஷாவின் தந்தை கௌதம் சொல்ல...

''ஆனாலும் எங்களோட அடுத்த இலக்கு... 2016 ஒலிம்பிக். இந்தியாவோட பிரதிநிதிகளா போகணும்னு பலத்த முயற்சிகளும் பயிற்சிகளும் போயிட்டிருக்கு. நிச்சயமா சாதிப்போம்னு நம்பிக்கையிருக்கு!'' என்றார் வர்ஷா, ஐஸ்வர்யாவை அணைத்தபடி!

சபாஷ் கடல் ராணிகளா!

கட்டுரை, படங்கள்: உ.கு.சங்கவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism