Published:Updated:

மழைக்கு ஒதுங்கிய காம்பீர்!

மழைக்கு ஒதுங்கிய காம்பீர்!

மழைக்கு ஒதுங்கிய காம்பீர்!

மழைக்கு ஒதுங்கிய காம்பீர்!

Published:Updated:
##~##

ர்லதான் ஒரு மழையையும் காணோம். அட்லீஸ்ட் அதைப் பத்தி பேசவாவது செய்யலாமே!

இந்த வார 'டீன் டாக்’ டாபிக், மழைப் பேச்சு!

சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த தீப்தா, வர்ஷா, நிவேதிதா, பௌர்ணா, சுனிதா, மாயா, காயத்ரி, கிருத்திகானு ஜர்னலிஸம் துறையின் கேங்க் கேங்க் கேங்க்ஸ்டர்கள் ஒன்றுகூட... மழை, வந்த மாதிரிதான்!

''மழை என்றதும் முதல்ல ஞாபகத்துக்கு வர்றது, நம்ம ரமணன் சார்தான்!''னு ஆரம்பிச்ச பௌர்ணா, ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கே வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் சிறிதாகவும் சில இடங்களில் லேசாகவும் மழை பெய்யும் - ஆமா, சிறிதாகவும் லேசாகவும்... ரெண்டும் ஒண்ணுதானே?''னு கண்சிமிட்ட,

''நாமளுமா அவரைக் கலாய்க்கணும்... சேஞ்ச் டாபிக்!''னு கியரை மாத்தினாங்க மாயா.

தீப்தா, 'ஸ்கூலுக்கு சைக்கிள்லதான் தினமும் போவேன். ஒருநாள் வீடு திரும்பும்போது செம மழை. ரோடே கண்ணுக்குத் தெரியல. பக்கத்துல இருந்த சென்னை ஐ.ஐ.டி. வளாக கெம்ப்ளாஸ்ட் ஸ்டேடியத்துக்குள்ள ஒதுங்கினேன். கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தர் கிரிக்கெட் பேட், கிளவுஸோட ஒதுங்கினார். யாருனு பார்த்தா, நம்ம கௌதம் காம்பீர்! எனக்கு ஒரே ஆச்சர்யம். ஆனா, பேசறதுக்கு பயமா இருந்துச்சு. பத்து நிமிஷம் அவர் பக்கத்துல இருந்திருப்பேன். மழை நின்னதும் சட்டுனு கிரவுண்டுக்குள்ள போயிட்டாரு. இப்போ நினைச்சாலும், 'ஐயோ, பேசாம மிஸ் பண்ணிட்டோமே’னு அடி மனசு அடிச்சுக்கும்!''னு தீப்தா முகத்துல ஸேட் ஸ்மைலி காட்ட...

மழைக்கு ஒதுங்கிய காம்பீர்!

''காம்பீரோட வளர்ச்சிக்கு பின்னால இப்படி ஒரு ஹிஸ்ட்ரி இருக்கறது இப்போதான் தெரியுது!''னு கண்ணடிச்சாங்க காயத்ரி.

''முன்னயெல்லாம் மழை வந்தா, 'ஐயோ... கரன்ட் கட் ஆயிடுமே’னு பதற்றம் இருக்கும். இப்போதான் எப்பவுமே பவர் கட்ல இருந்து பழகிட்டோமே, அதனால நோ பிராப்ளம்!''னு கிடைச்ச சந்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கிருத்திகா வாரிவிட...  

''டீ எப்போ வேணாலும் குடிக்கலாம்தான். ஆனா, மழை பெய்யும்போது கிளாஸை கட் அடிச்சுட்டு, கேன்டீன் பக்கம் ஒதுங்கி, நம்ம வர்ஷா அக்கவுன்ட்ல சூடா ஒரு கப் டீயும் பஜ்ஜியும் சாப்பிடற அனுபவம் இருக்கே, அதை அடிச்சுக்க முடியாது!'னு ஒரேயடியா சிலாகிச்சாங்க சுனிதா.

மழைக்கு ஒதுங்கிய காம்பீர்!

''நம்ம சுனிதாவோட மழை அனுபவம் சொல்லட்டுமா..?''னு பில்ட் அப் கொடுத்த வர்ஷா,

''ஒரு நாள், ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் கிளாஸை கட் அடிச்சிட்டு லஞ்சுக்கு ஒரு ஹோட்டலுக்குப் போனோம். சுனிதா மட்டும் வீட்டில் இருந்து கிளம்பி வந்தா. வர்ற வழியில மழை பிடிச்சுக்கிச்சு. நம்ம சுனிதா பரவசமாகி 'குஷி’ ஜோதிகா மாதிரி மழையில் நனைஞ்சுட்டு, ஹோட்டலுக்குள்ள வந்தா... பார்த்தவங்க எல்லோரும் 'ப்ப்பா..!’னுட்டாங்க. பொண்ணோட மேக்கப், ஐ லைனர் எல்லாம் கரைஞ்சு, 'சந்திரமுகி’ ஜோதிகா மாதிரி நின்னவளப் பார்த்து, உலகமே சிரிச்சிச்சு!''னு சொல்லி முடிக்க... மழை இல்லாமலே 'லகலக' முகம் காட்டினாங்க சுனிதா!

மழைக்கு ஒதுங்கிய காம்பீர்!

வைரமுத்து ரேஞ்சுக்கு தொண்டையைக் கனைச்ச நிவேதிதா, ''அன்னிக்கு செம மழை. ஹாஸ்டல் செக்யூரிட்டிக்கு 'தண்ணி' காட்டிட்டு, நாங்க எல்லாரும் கொட்டுற மழைல நனைஞ்சுகிட்டே பீச்சுக்குப் போனோம். ஒரே சமயத்துல பீச் தண்ணி நம்ம காலை நனைக்க, மழைத்துளி நம்ம மேல விழ, கவித கவித!'னு கண்கள் மூடினாங்க. அட அட!

''சின்ன வயசுல பேப்பர் கப்பல் விட்டதெல்லாம் நேத்து நடந்த மாதிரி இருக்கு. என்னோட ஃப்ரெண்ட்ஸ்ல எனக்கு மட்டும்தான் கத்திக் கப்பல் செய்யத் தெரியும். அதனாலயே எனக்கு ஒரு தனி மரியாதை தெரியுமா..?''னு மலரும் நினைவுகள்ல மூழ்கினாங்க காயத்ரி.

'ஆனா, மழை ஓவரா பெய்தா இனி ரசிக்க முடியுமானு தெரியல... எல்லாம் அந்த உத்தரகாண்ட் மாநில சோகம்தான். கேதார்நாத்ல மாட்டினவங்கள நினைச்சா கஷ்டமா இருக்கு'னு சீரியஸ் மோடுக்கு மாயா தாவ, கொஞ்ச நேரம் மௌனம்.

''ஆனா, புயலே அடிச்சாலும் தலைவர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்காம விடமாட்டோம்ல!''னு தீப்தா டைமிங் பஞ்ச் அடிக்க, ஏரியா கலகல லகலக!

- வ.விஷ்ணு

படங்கள்: ஸ்டீவ்ஸ்.சு.இராட்ரிக்ஸ்