Published:Updated:

பர்ஸுக்குள்ள என்ன இருக்கு?

பர்ஸுக்குள்ள என்ன இருக்கு?

பர்ஸுக்குள்ள என்ன இருக்கு?

பர்ஸுக்குள்ள என்ன இருக்கு?

Published:Updated:
##~##

ஃபேர் அண்ட் லவ்லி டியூப், பொட்டு பாக்கெட், 20 - 50 ரூபாய்க்குள் பணம், பஸ் டிக்கெட்டுகள்... இதெல்லாம் சென்ற தலைமுறை கல்லூரிப் பெண்களின் பர்ஸ் உள்ளடக்கம். இன்றைய இளம் பெண்களின் ஹேண்ட் பேக், பவுச், வேலட்டில் என்னவெல்லாம் இருக்கும்..?

கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளிடம் கேட்டோம்!

கிருத்திகா (ஆர்கிடெக்சர் மூன்றாம் ஆண்டு, அண்ணா பொறியியல் கல்லூரி, சென்னை): ''என் தோழிகள்ல சிலரோட பர்ஸுக்குள்ள இருக்குற பணத்தைவிட, அந்த பர்ஸோட  மதிப்பு அதிகமா இருக்கும். அப்படி பார்க்க 'பளிச்’னு இருந்த என் ஃப்ரெண்டோட பர்ஸ் ஒண்ணை, 'வெயிட்டான மேட்டர்போல’னு நினைச்சு யாரோ ஒரு அப்பாவி அபேஸ் பண்ணிட்டான். 'பர்ஸுக்குள்ள பத்து ரூபாதான் இருந்துச்சு. ஆனா, என் பாய் ஃப்ரெண்டோட போட்டோவும் போயிருச்சே’னு அவ ஒப்பாரி வெச்சப்போ, சிரிப்புதான் வந்துச்சு. அதனால, நான் எப்பவுமே பணம் வைக்கிற பர்ஸ் ரொம்ப சிம்பிளா இருக்குற மாதிரி பார்த்துக்குவேன். அதேபோல, அதுல குப்பையா சேர்க்காம, பணம், ஏ.டி.எம் கார்டு, சில விசிட்டிங் கார்டுகள் தவிர வேற எதுவும் வைக்க மாட்டேன். நல்ல பழக்கம்தானே.?!''

பர்ஸுக்குள்ள என்ன இருக்கு?

தர்ஷணா (இ.சி.ஈ. மூன்றாம் ஆண்டு, அம்ருதா பொறியியல் கல்லூரி, கோவை): ''பொண் ணுங்களோட ஹேண்ட் பேக்ல    என்ன இருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம். என் ஹேண்ட் பேக்லயும்  ஒரு மினி பியூட்டி பார்லரே இருக்கும். ஐப்ரோ பென்சில், காஜல், லைனர், லிப் பாம்னு எல்லாம் மினி சைஸ்ல வாங்கி வெச்சுருக்கேன். அப்புறம், உயிர் வாழ அத்தியாவசியப் பொருளான மொபைல். அப்புறம் கொஞ்சம் காசு, பணம், துட்டு,  மணி... அவ்வளவுதான்! இதுக்கு மேல உருப்படிகள் இருந்தா... அது ஹேண்ட் பேக் இல்ல, டிராவல் பேக்!''  

கிருத்திகா கிருஷ்ணன் (ஐ.டி. மூன்றாம் ஆண்டு, சவீதா பொறியியல் கல்லூரி, சென்னை): ''எனக்கு சுற்றுச்சூழல் மேல அக்கறை உண்டு. அதனால எப்பவுமே காட்டன் அல்லது ஜூட் மெட்டீரியலாலான பொருட்களைத்தான் பயன்படுத்துவேன். அதன்படி இப்போ நான் பயன்படுத்துறது, பிரவுன் நிற ஜூட் பர்ஸ். அதுக்குள்ள பார்த்தீங்கனா... கொஞ்சம் போரான விஷயம்தான். ஒரு பேனா, கைக்குட்டை, சாமி படம், கொஞ்சம் பணம். அப்புறம் முக்கியமான ஒரு விஷயம்... பிளேடு, கட்டர், மிளகாய்ப்பொடினு ஏதாவது ஒரு தற்காப்பு ஆயுதம் எப்பவும் அதுக்குள்ள இருக்கும். இது காலத்தின் அவசியம்!''

பர்ஸுக்குள்ள என்ன இருக்கு?

விஜி (இ.சி.ஈ. மூன்றாம் ஆண்டு, அம்ருதா பொறியியல் கல்லூரி, கோவை): ''என்னோட ஹேண்ட் பேக், டபுள் பர்பஸ். அதாவது, ஹேண்ட் பேக்காவும் பயன் படுத்தலாம், ஸ்ட்ராப்பை கழட்டி வெச்சுட்டு அதையே பர்ஸாவும் பயன்படுத்திக்கலாம். நானும் என் ஃப்ரெண்டும் சேர்ந்து ஒரே மாதிரி வாங்கினது. அப்புறம் என்ன கேட்டீங்க..? ஆங்... உள்ளே என்ன இருக்கும்னா... அது பெர்சனல்!''

நஸ்வீனா (ஜெனட்டிக்கல் இன்ஜினீயரிங் நான்காம் ஆண்டு, எஸ்.ஆர்.எம். கல்லூரி): ''நான் டிரெஸ்ஸுக்கு மேட்சிங்கா அடிக்கடி பர்ஸை மாத்துவேன். அப்படி மாத்தும்போது, பர்ஸ்ல இருக்குற பொருட்களையும் அடிக்கடி ஒண்ணு டு ஒண்ணு மாத்திட்டே இருப்பேன். பணம், ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, காஸ்மெடிக் அயிட்டங்கள், பியூட்டி பார்லர் கார்டுகள்னு இந்த அயிட்டங்களோட கடந்த ஆறு மாசமா பல கடைகளிலும் ஷாப் பண்ணின பில்களும் இருக்கும். ஆனாலும் அதை க்ளீன் பண்ணாம, அப்படியே ஒரு பர்ஸ்ல இருந்து இன்னொரு பர்ஸுக்கு மாத்துற கெட்ட பழக்கம் மட்டும் விடவே மாட்டேங்குது. என் பவுச் வெளிய பார்க்கத்தான் பளிச்சுனு இருக் கும். உள்ள ஒரு மினி குப்பைத்தொட்டியே இருக்கும். இது என் ஃப்ரெண்ட்ஸ் மட்டுமே அறிஞ்ச ரகசியம். ஐயையோ.... இப்போ அது எல்லாருக்குமே தெரிஞ்சு போச்சே!''

- உ.கு.சங்கவி

படம்: அபிநயா சங்கர்