Published:Updated:

2 ஆயிரம் ரூபாயாக மாறும் 20 ரூபாய் மெஹந்தி கோன்!

2 ஆயிரம் ரூபாயாக மாறும் 20 ரூபாய் மெஹந்தி கோன்!

2 ஆயிரம் ரூபாயாக மாறும் 20 ரூபாய் மெஹந்தி கோன்!

2 ஆயிரம் ரூபாயாக மாறும் 20 ரூபாய் மெஹந்தி கோன்!

Published:Updated:
##~##

 'மெஹந்தி' என்பது பெண்கள் விரும்பும் விஷயம். அந்த மெஹந்தியையே 'பார்ட் டைம் ஜாப்' என கையில் எடுத்து, கல்லூரிப் பெண்கள் சிலர் தங்கள் பாக்கெட் மணி தேவையை நிறைவேற்றிக் கொள்வது, பாராட்டப்பட வேண்டிய விஷயம். அப்படி சில சமர்த்துப் பெண்களைச் சந்தித்தோம்!

கும்பகோணம், அரசு கவின் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு காட்சி தகவல் தொடர்பு மற்றும் வடிவமைப்பு படிக்கும் உமாமகேஸ்வரி, மெஹந்தியில் கில்லி.

''சின்ன வயசுல இருந்தே நல்லா படம் வரைவேன். காலேஜ்ல முதல் வருஷம் சேர்ந்தப்போ, அந்த நம்பிக்கையில் கத்துகிட்டதுதான் மெஹந்தி. ஆரம்பத்தில் தோழிகளோட கைகளில்தான் போட்டுப் பழகினேன். அப்புறம் தெரிஞ்சவங்க வீட்டு விசேஷங்களுக்கு போட ஆரம்பிச்சேன். இப்போ கும்பகோணத்தில் பெரும்பாலான திருமண நிகழ்ச்சிகளுக்கும் முன்கூட்டியே பதிவு பண்ற அளவுக்கு இதில் வளர்ந்திருக்கேன். டிசைனைப் பொறுத்து 150 - 250 ரூபாய் வரை கட்டணம் வாங்குவேன். மாசத்துக்கு எப்படியும் 2,000 ரூபாய் வரை கிடைக்கும். விடுதியில தங்கிப் படிக்கற நான், அந்தப் பணத்தை அறை வாடகை, சாப்பாடு செலவுனு பயன்படுத்திக்குவேன்.

முன்பெல்லாம் மெஹந்தி போட நிறைய நேரம் எடுக்கும். இப்ப நல்லா பழகிட்டதால கைகள், கால்கள்னு மணப்பெண் மெஹந்தியையே ஒன்றரை மணி நேரத்துக்குள்ள முடிச்சுடுவேன். மெஹந்தியில் பொதுவா பாரம்பரிய டிசைன்கள், அராபிக் டிசைன்கள், ஜர்தோஸி டிசைன்கள்னு நிறைய வகைகள் உண்டு. பாரம்பரிய டிசைன் மெஹந்தி 15 நாட்கள் வரை அழியாது. அராபிக் டிசைன் மெஹந்தி ஒரு வாரம் மட்டுமே. புடவைக்கேத்த வண்ணங்கள்ல போடும் ஜர்தோஸி வகை டிசைன்கள் ஒரு நாள் மட்டுமே'' என்ற உமாமகேஸ்வரி,

''கேர்ள்ஸ் இதை கத்துக்கிட்டா, படிச்சுட்டே பாக்கெட் மணி பிரச்னையைத் தீர்த்துக்கலாம்!'' என்று டிப்ஸ் தந்தார்.

2 ஆயிரம் ரூபாயாக மாறும் 20 ரூபாய் மெஹந்தி கோன்!

''மருதாணி எவ்வளவு சிவக்குதோ, உன் காதலர்/கணவர் மேல் உனக்கு அவ்வளவு இஷ்டம் இருக்குனு அர்த்தம்னு சொல்லிட்டே ஜாலியா மெஹந்தி போட்டு விடுறது, மெஹந்தி டிசைன்குள்ளேயே காதலர்/கணவர் பெயரின் எழுத்துக்களை எழுதுறதுனு சுவாரசியமா மெஹந்தி போட்டுவிடுறது எனக்குப் பிடிக்கும்!''னு சிரிக்கறாங்க, சென்னை, கவின் கலைக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் ரஞ்ஜூஷா.

''பக்கத்து வீட்டு குட்டீஸ்களுக்கு விளையாட்டா போட்டுவிட்டதுதான் ஆரம்பம். பிறகு... உறவினர்கள், தோழிகள்னுனு போட ஆரம்பிச்சு, புரொபஷனலா மெருகேத்திக்கிட்டு திருமணங்கள், விசேஷங்கள்னு போட ஆரம்பிச்சேன். ஒவ்வொரு முறையும் ஆயிரம் ரூபாய்க்கு மேல கிடைக்கும்.

உங்களுக்கும் மெஹந்தி போட தெரியுமா? வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற பியூட்டி பார்லருக்கு போய், ஏதாவது ஆர்டர் வந்தா தெரியப்படுத்த சொல்லுங்க. ஒரே முகூர்த்தத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்டர்கள் அவங்களுக்கு கிடைக்கும்போது, அந்த கஸ்டமரை மிஸ் பண்ண விரும்பாத அவங்க, உங்ககிட்ட அனுப்பி வைப்பாங்க. அதுக்கு அந்தப் பார்லருக்கு கமிஷன் கொடுத்தா போதும். ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களையும் அணுகி, மெஹந்தி போட தேவை இருந்தா தெரியப்படுத்த சொல்லுங்க. தொடர்ந்து கஸ்டமர்கள் கிடைச்சுட்டே இருப்பாங்க'' என்கிறார் உற்சாகமாக.

''நம்புங்க... 20 ரூபாய்க்கு மெஹந்தி கோன் வாங்கி 2,000 ரூபாய் சம்பாதிச்சுடலாம். தேவை, கிரியேட்டிவிட்டி!'' என்று நம்பிக்கை கொடுக்கிறார், சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.காம் படிக்கும் சினேகா.

''பிறந்த நாள் பார்ட்டி, திருமணம்னு ரிசப்ஷனிஸ்டா பார்ட் டைம் ஜாப் போவாங்க என் தோழிகள். அவங்ககூட போயிட்டு இருந்தப்போதான், மெஹந்தி போட்டுவிடறதுக்கு கிடைக்கற பணத்தைப் பார்த்து அசந்தே போயிட்டேன். ஏன்னா, அதைவிட அழகான டிசைன்களை எல்லாம் தீபாவளி, பொங்கல்னு வீட்டுல இருக்கறவங்களுக்கு போட்டுட்டு 'சூப்பர்’ பட்டம் வாங்கறவ நான். அதனால, நானும் மெஹந்தி போட்டுவிடுறதை பார்ட் டைம் ஜாப் மாதிரி செய்ய முடிவெடுத்தேன். இப்போ மாசம் பல ஆயிரங்கள் சம்பாதிக்கிறேன்'' என்று சொல்லும் சினேகா,

''அதிக முதலீடு, உழைப்பு இல்லை. அதேசமயம், குனிஞ்சு, கூர்ந்து கவனிச்சு போட வேண்டி இருக்கறதால பேக் பெயின் வரலாம். அதனால, தேவையான ஓய்வு எடுத்துக்கறதும் அவசியம்'' என்று டிப்ஸ் கொடுத்தார்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி, செ.திலீபன், படங்கள்: செ.சிவபாலன், செ.நாகராஜன்