Published:Updated:

யார், அடுத்த த்ரிஷா?!

யார், அடுத்த த்ரிஷா?!

யார், அடுத்த த்ரிஷா?!

யார், அடுத்த த்ரிஷா?!

Published:Updated:
##~##

''மாடலிங்னா கேமராவுக்கு முன்னால விதம்விதமா டிரெஸ் பண்ணிட்டு வந்து நின்னு சிரிக்கறதுனு நினைச்சுட்டிருக்கறவங்களோட கவனத்துக்கு... அது அவ்வளவு சுலபமான விஷயம் இல்ல. மாடலிங் ஒரு கலை!''னு அழுத்திச் சொல்ற இந்த இளம் மாடல்ஸ், மாடலிங் துறையில் தங்களுக்கு உள்ள சிரமங்களையும், சவால்களையும் சொல்றாங்க இங்கே...

ரோஷினி: 'கேமராவில் இந்த நிமிஷம் பதியப் போற நம் உருவம், ஒரு பெரிய நிறுவனத்தோட விளம்பரத் துக்காக பயன்படப் போகுது... அதை லட்சக்கணக்கான பேர் பார்க்கப் போறாங்க' அப்படிங்கற பெரிய பொறுப்பையும் சுமந்துதான் நாங்க சிரிப்பை வெளிப்படுத்தணும். நீங்க பார்க்கற ஒரு போட்டோ, ஏதோ ஒரு கிளிக்ல 'ஓ.கே’ ஆனதா இருக்காது. ஒரு மணி நேரத்தில் இருந்து, ஏன் ஒருநாள் வரைகூட ஆகலாம். உங்களைக் கவர்ற அந்த ஒரேயரு ஸ்டில் ரொம்ப சூப்பரா வர்றதுக்காக போட்டோகிராஃபரும் மாடலும் சோர்ந்து போகாம நாள் முழுக்க உழைப்பைத் தரணும். அதனால, மாடலிங் என்பது அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பத்மா: எனக்கு சின்ன வயசுல இருந்தே போட்டோ எடுத்துக்கப் பிடிக்கும். அந்த ஆர்வம்தான் மாடலிங் துறையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. சும்மா டிரெஸ், மேக்கப் மட்டும் போட்டுட்டு போட்டோகிராஃபர் முன்ன போய் நின்னு, கீ கொடுத்த பொம்மை மாதிரி அவர் சொல்றதை மட்டும் செய்யறதைவிட, நாமே புதுசு புதுசான போஸ்கள் தரும்போது, அந்த வேலை சுலபமா முடியறதோட அதோட ரிசல்ட்டும் நல்லா இருக்கும். நான் அப்படித்தான் ஒவ்வொரு 'ஷூட்’-க்கும் விதவிதமான போஸ்கள் கொடுத்து அசத்துவேன். ஜாலியான அனுபவமா இருக்கும். ஆனா, இந்தத் துறையில் நிறைய ஆபத்துகளும் இருக்கு. நாம் இணைந்து வேலை பார்க்கற ஆட்கள் சரியானவங்களா என்பதில் கவனமா இருக்கணும்.

யார், அடுத்த த்ரிஷா?!

ஸஞ்ஜூ: சாதாரணமா வீட்டில் போட்டோ எடுக்கும்போதே... எப்படி உட்காரணும், எவ்வளவு சிரிக்கணும், எந்த டிரெஸ் போடணும்னு எப்படியெல்லாம் திணறுவோம்? மாடலிங், அதுபோல நூறு மடங்கு திணறல்கள் நிறைஞ்ச துறை. ஒரு பெரிய டீம் முன்னாடி, கண்களைக் கூச வைக்கிற, சருமத்தை சுடுற படா லைட்களோட வெளிச்சத்துல, காஸ்ட்யூம் டிசைனர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், கேமராமேன்னு எல்லோரோட உழைப்பையும் வெளிப்படுத்தும் விதமான ஒரு பெர்ஃபெக்ட் போஸ் வெளிப்படுத்துறது அவ்வளவு சுலபமில்ல. ஆக, மாட லிங் பண்றதுக்கு அழகு மட்டும் போதாது... திறமையும் பொறுமையும் அவசியம்.

யார், அடுத்த த்ரிஷா?!

பவானி: அழகான பொண்ணுங்களுக்கு இங்கே பஞ்சமே இல்லை. அதனால அழகை மட்டுமே தகுதியா கொண்டு மாடலிங் துறையில் நுழைஞ்சா, சீக்கிரமே வெளிய வந்துடுவோம். ஆட்டிட்யூட் ரொம்ப முக்கியம். அதுதான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு போகும். இது பெண்களுக்கேயான துறை என்றாலும், இதில் உள்ள சிக்கல்களும் அதிகம். அதையெல்லாம் தாண்டி வர்ற தைரியத்தையும் பக்குவத்தையும் வளர்த்துக்கணும்.

யார், அடுத்த த்ரிஷா?!

ஹரிணி: அவுட்டோர் ஷூட்டிங்னா... கஷ்டங்கள் இன்னும் அதிகம். கேரவன்லயே ரெடியாவதில் ஆரம்பித்து, புல்லில் உட்கார்ந்து, ஏரியில் மிதந்து, பாறைகளில் சாய்ந்துனு, பூச்சி, புழு, பாம்புனு எல்லாத்துக்கும் 'ஹாய்’ சொல்லிட்டு வரணும். ஆனாலும் அவுட்புட்டை பார்க்கும்போது, அத்தனை கஷ்டங்களும் மறந்துபோய் அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.

யார், அடுத்த த்ரிஷா?!

ஷ்ரதா: இந்த துறையில் உள்ள ரசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அத்தனை சிரமங்களையும் கடந்து, அந்த அழகுணர்ச்சிக்குத்தான் இங்க எல்லாரும் வேலை பார்க்கறாங்க. ஐ லவ் மாடலிங்.

உங்களில் யார் அடுத்த த்ரிஷா..?!

- கட்டுரை, படங்கள்: உ.கு.சங்கவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism