Published:Updated:

வரன்... அதிகம் எதிர்பார்ப்பது ஆண்களா... பெண்களா?

வரன்... அதிகம் எதிர்பார்ப்பது ஆண்களா... பெண்களா?

வரன்... அதிகம் எதிர்பார்ப்பது ஆண்களா... பெண்களா?

வரன்... அதிகம் எதிர்பார்ப்பது ஆண்களா... பெண்களா?

Published:Updated:
##~##

சையைத் துறந்த புத்தர் மாதிரி... ஃபேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைதளங்களில் 'தத்துவ லோடுகள்' இறக்கற டீன்கள்கிட்ட, 'கல்யாணத்துக்கு வரன் பார்க்கும்போது, ஆண்கள் அதிகம் எதிர்பார்க்கறாங்களா... பெண்கள் எதிர்பார்க்கறாங்களா..?’ என்ற எதார்த்தக் கேள்வியை வெச்சோம். 'டீன் டாக்'க வந்தாங்க, நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார் டீ.பி.எம்.எல் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்.

''இந்த டாபிக் பத்தி நல்லவ மாதிரி பேசி ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டா, எதிர்காலத்துல எங்க கதி..?''னு பிராக்டிகலா யோசிச்சு ராஜி பின்வாங்க,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''டேய்... எதிர்காலத்துல பசங்க தலையெழுத்தை மாத்த, இப்போ தைரியமா பேசித்தான் ஆகணும்!''னு சேவை மனசோட ஆஜரானாங்க பாய்ஸ்.

இதைக் கேட்டதுமே... ''வரதட்சணை வாங்கற அவங்களே இவ்வளவு பகுமானமா பேசும்போது, ஸ்பூன்ல இருந்து சோஃபா வரைக்கும் 'சீர்’ங்கற பேர்ல அவங்க வீட்டுக்கு கொண்டுட்டு போற நாம பேசுறதுல என்ன தப்பு..?''னு கேர்ள்ஸுக்கு தைரியமூட்டுற வேலையை ஆரம்பிச்சாங்க பிரபாவதி.

உடனே டென்ஷனாகிட்ட கபில்தேவ், ''காலம் மாறிடுச்சு. இப்போ மாப்பிள்ளைங்க சீர், நகை பத்தியெல்லாம் எந்த டிமாண்டும் வைக்கறதில்ல. பொண்ணுங்களுக்கு என்னென்ன தேவையோ, அதை அப்பா வீட்டுல இருந்து 'வரதட்சணை’ங்கிற பேர்ல மாப்பிள்ளை வீட்டை கையைக் காட்டி லிஸ்ட் போட்டு வாங்கிட்டு வந்துடறாங்க. 'அக்காவுக்கு மட்டும் பண்ணீங்க இல்ல... எனக்கும் இதெல்லாம் பண்ணுங்க!’னு ஆடிட்டிங் பண்ற அளவுக்கு அவங்க விவரமானவங்க!''னு பத்த வெச்சார்.

வரன்... அதிகம் எதிர்பார்ப்பது ஆண்களா... பெண்களா?

''உண்மைதாங்க. பொண்ணு பார்க்கப் போறப்போ 'காபி நல்லா இருக்கா?’ என்ற கேள்விக்கு தலையை ஆட்ட ஆரம்பிக்கிறவங்கதான்... அப்புறம் வாழ்க்கை முழுக்க தலையை ஆட்டுறது மட்டும்தான் எங்க ஆயுள் டியூட்டி ஆகிப்போயிடுது!''னு சிம்பதி கிரியேட் செய்தார் தமிழன்பன்.

''பசங்ககிட்ட நாங்க எதிர்பார்க்கற முக்கியமான விஷயம்... படிப்பு, நல்ல வேலை. அப்படி ஒரு வரனா பார்த்து செட்டில் ஆனாதான் நாளைக்கு சமூகத்துல நமக்கு கௌரவமா இருக்கும். அப்புறம்... விட்டுக் கொடுத்துப் போகணும்!''னு ஜெயா சொல்ல,

''விட்டுக் கொடுத்துப் போகணும் என்பதை அடிக்கோடிடுக யுவர் ஹானர். ஏன்னா, அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பினு எங்க பிறந்த வீட்டு ஆளுங்களை எல்லாம் புதுசா வர்ற பொண்ணுக்காக நாங்க விட்டுக்கொடுத்துப் போகணும் என்பதுதான் இதோட உள் அர்த்தம்''னு 'புதிய அகராதி' எழுதினார் அருள்குமார்.

''சிவப்பான பொண்ணு வேணும்னு கேட்டு வர்ற மாப்பிள்ளைங்கள எல்லாம் சிறையில போடணும்னு ஒரு புது சட்டம் கொண்டு வரணும்!''னு கோபம் கக்கினாங்க ஈஸ்வரி.

''நீங்க மட்டும் என்னவாம்? மேட்ரிமோனியல் சைட்கள்ல 'எதிர்பார்ப்பு’ என்ற தலைப்புல போய் பாருங்க... பையன் படிச்சிருக்கணும், ஆனா, ஸ்டடி லோன் இருக்கக் கூடாது. சொந்தமா வீடு இருக்கணும், கூடப் பிறந்த பொண்ணுங்க இருக்கக் கூடாது. நிறைய சம்பாதிக்கணும், ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் வந்துடணும். இன்னும் மீசை இருக்கணும், 6 அடி இருக்கணும்... இதெல்லாம் வாய்மொழி கண்டிஷன்ஸ். இப்படி இருந்தா, எங்களுக்கு எப்ப கல்யாணம் ஆகறது?''னு வெறுத்துப் புலம்பினார் சங்கீத்.

வரன்... அதிகம் எதிர்பார்ப்பது ஆண்களா... பெண்களா?

''அதேமாதிரி, ஃபேஸ்புக் பாஸ்வேர்டை  எங்ககிட்ட சொல்லிடணும் என்பதையும் கண்டிஷன்ஸ்ல சேர்த்துக்கோங்க!''னு வினோலியா குண்டு போட, ஃப்யூஸ் ஆனார் சங்கீத்.

''தண்ணி குடிக்க மட்டுமே கிச்சன் போயிட்டு வர்ற எங்களை 'சமைக்கத் தெரியுமா?’னு ஒரு கேள்வி கேட்டு எங்க வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடறீங்களே! கல்யாணத்துக்கு முன்ன முட்டை வேக வைக்காத பொண்ணுங்ககூட, கல்யாணத்துக்கு அப்புறம் முழு நேர சமையல்காரி ஆகற கொடுமைதானே காலம்காலமா நடக்குது. இப்போவெல்லாம் பொம்பளைங்களும்தான் வேலைக்குப் போறாங்க. அதனால, மாறி மாறி சமையல் செய்றதை நடைமுறைப்படுத்தினாதான் நாடு உருப்படும்!''னு யோசனை சொன்னார் தெபோரா.

''இப்போவெல்லாம் தேவயானி டைப் பொண்ணுங்களை பார்க்கவே முடியறதில்ல. எல்லாமே அஞ்சலி மாதிரி இப்படித்தான் அலைப்பறை பார்ட்டிங்களா இருக்குதுங்க. அதனால எனக்கு என்ன தோணுதுனா, அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்!''னு பிரசாந்த் சரண்டர் ஆக, ''அடப்பாவி... அதுக்கு அரை கிலோ பூச்சிமருந்தை வாங்கித் கொடுங்கடா. சந்தோஷமா குடிச்சுடறேன்!''னு இன்பராஜ் துள்ள,

''உண்மையில் பார்த்தா, இப்படிப்பட்ட கால், அரையை எல்லாம் கட்டிக்கிட்டு, அவங்களை எல்லாம் முழுமை ஆக்குற பொண்ணுங்க நாங்கதான் தியாகிகள்!''னு விடாமல் பேசினாங்க ஜெனிபர்.

''நீங்க சொல்ற 'முழுமை'யான அப்படிங்கறதுக்கு அர்த்தம் 'முழு லூஸ்' அப்படிங்கறதுதானே!''னு மறுபடியும் அகராதி எழுதினார், அருள்குமார்.

வாய்பேச்சு, கைகலப்பா மாறுறதுக்குள்ள, தீர்ப்பு சொல்லாமலே பஞ்சாயத்த கலைக்கறதுக்காக பட்டபாடு... நமக்குத்தான் தெரியும்  

- மா.நந்தினி, படங்கள்: செ.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism