Published:Updated:

என்னமா யோசிக்கறாய்ங்க!

அவள் டீன்ஸ்

##~##

சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் ஒரு நாள் முழுக்க கண்களுக்கு விருந் தளித்து நடந்து முடிந்தது 'வைப்ஸ் 13’ ஃபேஷன் ஷோ. சென்னை, 'டிரீம் ஸோன்’ கல்வி நிறுவனம், தங்கள் மாணவ, மாணவிகளின் படைப்புகளை மேடையேற்றிய இந்த நிகழ்வில்... கே.எஸ்.ரவிக்குமார், நமீதா, திவ்யதர்ஷினி உள்பட 40 பிரபலங்கள் முன்னிலை வகிக்க... 80 மாடல்கள், 100 மாணவர்களின் 800 படைப்புகள் என ஒரே கொண்டாட்டம்தான்!

'ஜெம்ஸ் ஆஃப் திராவிடியன்ஸ்’ என்ற தலைப்பில் தன் வடிவங்களை வெளிப்படுத்தினார் மாணவி டெய்சி. முழுக்க முழுக்க இந்திய நிறங்களையும் வடிவங்களையும் மட்டுமே கொண்டு ஜொலித்தன இவரின் படைப்புகள். ஆண்கள் போடும் தோத்தி வகை உடைகளை பெண்களுக்கு ஏற்றாற்போல மாற்றி, அதேசமயம் அதை பட்டியாலாவாகவும் ஆகவிடாமல், அதற்கு பளிச்சென்று ஜரியும், புடவைக்கு கோட் வகை ஜாக்கெட்டும் யோசித்தது, சூப்பர்!

தீபக் மற்றும் ஸ்வேதா எடுத்துக் கொண்ட தலைப்பு, ராசிகள் (zodiac). கன்னி, துலாம், மீனம் என ராசிகளை வெளிப்படுத்தும் ஆடைகளை உருவாக்கிய இவர்கள், விருச்சிக ராசிக்காக கொஞ்சம் அதிகமாகவே யோசித்திருந்தனர். தேளைப்போல வடிவமைக்கப்பட்ட இந்த உடையில், தேளின் வாலை தோள்பட்டையில் இருந்து பின்புறமாக ரவிக்கையைப் போல தொங்கவிட்டிருந்தது ஹைலைட்!

என்னமா யோசிக்கறாய்ங்க!
என்னமா யோசிக்கறாய்ங்க!

நேஹா எடுத்துக் கொண்ட தலைப்பு, சுருக்கங்கள் (crushes). சுருக்கம், கசங்கல் என்றால் நாம் ஆடைகளை ஒதுக்கிவிடுவோம். ஆனால், அதிலே கிரியேட்டிவிட்டியை புகுத்தி பல வடிவங்கள், நிறங்களில் ஃபேஷனை வெளிக்கொண்டு வந்திருந்தார் நேஹா.

என்னமா யோசிக்கறாய்ங்க!

'எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...’ என்று பார்வையாளர்கள் அசந்து போயிருக்க, அவர்களின் ஆச்சர்யத்தை மேலும் கூட்டும்விதமாக, தான் எடுத்துக்கொண்ட சமச்சீரின்மை (asymmetrical)  தலைப்பில் கலெக்ஷன்களை மேடையேற்றினார் பூஜா. உடையின் ஒரு பக்கத்துக்கும் மறு பக்கத்துக்கும் சம்பந்தமே இருக்கக்கூடாது என்பதுதான் தலைப்பின் சாரம். ஆடைகள் அனைத்தும் அசத்தல் ரகம்!

ராம்குமார் எடுத்துக் கொண்ட தலைப்பு, ஈக்கோ-ஃப்ரெண்ட்லி (eco-friendly). முற்றிலும் மூங்கிலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை நூலால் மட்டுமே நெய்யப்பட்டிருந்தன இவர் வடிவமைத்த ஆடைகள். தன் கிரியேட்டிவ் உடைகளுக்கு வெள்ளை நிறம் மட்டுமே அனுமதித்து, அற்புதங்கள் புரிந்திருந்தார் ராம்குமார்!

இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் சக்சஸ்ஃபுல் டிசைனர்கள் என்பதற்கு உறுதி கூறுகின்றனதானே இந்தப் படங்கள்?!

- உ.கு.சங்கவி

படங்கள்: ப.சரவணகுமார்

அடுத்த கட்டுரைக்கு