Published:Updated:

பர்ஸை தொறக்கறது பாய்ஸா... கேர்ள்ஸா?!

பர்ஸை தொறக்கறது பாய்ஸா... கேர்ள்ஸா?!

பர்ஸை தொறக்கறது பாய்ஸா... கேர்ள்ஸா?!

பர்ஸை தொறக்கறது பாய்ஸா... கேர்ள்ஸா?!

Published:Updated:
##~##

''செலவுனு வந்துட்டா... பர்ஸை முதல்ல யார் திறப்பா, பாய்ஸா கேர்ள்ஸா?''

- 'டீன் டாக்’ தலைப்பைச் சொன்னதும், கலகலவென கலாய்க்க ரெடியானாங்க          தஞ்சாவூர், கிங்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

''ஏய்... பரீட்சைக்குக் கூட இப்படிப் படிச்சதில்ல. 'டீன் டாக்’குக்காக நேத்து நைட் எல்லாம் கண் விழிச்சு பாயின்ட்ஸ் யோசிச்சு பிரிப்பேர் பண்ணிட்டு வந்திருக்கேன்பா...''னு ஒரு பெரிய பேப்பரை எடுத்தார் செல்லமுத்து.

''வழக்கம்போல அதுவும் மொக்கையாதான் இருக்கும். அதனால அதை உள்ளயே வெச்சிடு!''னு அவருக்கு உடனடியா கார்த்திக் 'கட்' கொடுக்க... செல்லமுத்து, கோபமுத்துவானார்!

''பசங்க எல்லாம் 'நான் மகான் அல்ல’ கார்த்தி மாதிரி...''னு ஆரம்பிச்ச நித்யா, அதை முடிக்கறதுக்குள்ள,

''அப்படியே... யாரு இங்க காஜல் அகர்வால் அப்படிங்கறதையும் கொஞ்சம் சொல்லிட்டா, நாளை பின்ன ஷர்ட் எடுத்துக் கொடுக்க வசதியா இருக்கும்''னு ரொம்பவே ஆர்வமானார் கார்த்திக்.

''பொண்ணுங்க பிறந்த நாளைக்கும் பசங்களோட பர்ஸ் காலியாகுறதுதானே கேம்பஸ் இலக்கணம்..?''னு கதிரவன் வாயைத் திறக்க...

''ஆனா, உன் பர்ஸ்ல பணம் வெச்சு நான் பார்த்ததே இல்லையேடா''னு சேம் சைடு கோல் போட்டு, காலி செய்தார் ஆனந்த்.

பர்ஸை தொறக்கறது பாய்ஸா... கேர்ள்ஸா?!

''இந்த ஆண் இன துரோகிய தூக்குல போடணும் இம்சை அரசே''னு செல்லமுத்து சீறித்தள்ள...

''சரிடா, நம்ம சாதி பஞ்சாயத்தை பிறகு வெச்சுக்கலாம். நடக்கற பிரச்னைக்கு வாங்க'' என்று இழுத்துக் கொண்டு வந்த ஆனந்த், ''பொண்ணுங்களோட ஃப்ரெண்டாகுறது ஈஸி. ஆனா, அவங்க செல்லுக்கு 'ஈஸி’ பண்றதுதான் கஷ்டம்!''னு பஞ்ச் டயலாக் சொல்ல, இதுக்கு, கேர்ள்ஸ் சைடில் இருந்தும் கிளாப்ஸ்!

''இப்போவெல்லாம் பசங்க ரொம்ப உஷார் ஆகிட்டாங்க. 24 மணி நேரமும் ஃப்ரீயா பேசற மாதிரியான ஸ்கீம்லதான் சிம் வாங்கறாங்க... வாங்கித் தர்றாங்க''னு மதுநிக்கா சொல்ல,

''இதுலயே தெரியுதா மக்களே... அவங்களோட சிம் கார்டு கூட, எங்க ஃபைனான்ஸ்தான்!''னு பாயின்ட்டை பிடிச்சார் ஆனந்த்.

''பசங்க ஒண்ணா கிளம்பினா, ஒரு கையேந்தி பவன்லயோ, இல்ல ரோட்டோர இட்லிக் கடையிலயோ சந்தோஷமா சாப்பிட்டு வந்துடுவோம். ஆனா... இந்த பொண்ணுங்க ஏ.சி. ஹோட்டல், காபி ஷாப்னு நம்மை இழுத்துட்டுப் போறதும் இல்லாம, 'பில் கொடுக்க வேண்டியது பசங்களின் தார்மீகக் கடமை’னு ஏதோ சட்டமே இருக்குற மாதிரி சாப்பிட்டதும் 'பை’ சொல்லிட்டு கிளம்பிடுவாங்க. என்ன கொடுமை சார் இது..?''னு நியாயம் கேட்டார் ஸ்டாலின்.

''தனியா இருக்கும்போது 'ஒரு ஹண்ட்ரட் ருபீஸ் சேஞ்ச் கிடைக்குமா..?’னு பொண்ணுங்ககிட்ட காசை வாங்கிக்கிறது, அப்புறம் கூட்டமா இருக்கும்போது அதை எடுத்து செலவு பண்ணிட்டு, ஏதோ கர்ணன் மாதிரி கெத்து காட்டுறது. இதுதான் பசங்களோட நிஜமான முகம்''னு அழகாக அனுபவம் சொன்னார் திவ்யா.

''அண்ணனுக்கு பர்த்டே, தம்பிய காலேஜ்ல சேர்த்து இருக்கோம், வீட்டுல நாய் குட்டி போட்டிருக்குனு மொக்க காரணம் சொல்லி எங்களை ட்ரீட்டுக்கு கூப்பிடுறதே பசங்கதான். அப்போ அவங்கதானே பர்ஸை கனமா வெச்சுக்கணும்?''னு வைஷ்ணவி சூடாக,

''என்னோட பிறந்தநாளையே நான் 'ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன்’ பார்த்துதான் தெரிஞ்சுக்குறேன். இது பொய்யான குற்றச்சாட்டு அமைச்சரே''னு மறுப்புத் தெரிவிச்சார் கதிரவன்.

''ஏதாச்சும் ஒரு பொருளைக் காட்டி, 'அது அழகா இருக்கில்ல..?’னு பொண்ணுங்க கேட்டா, அதை அவங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும்னு உள் அர்த்தம். அப்பா, அம்மா, அண்ணன்னு ஒவ்வொருத்தரையா உஷார் பண்ணி அதுக்கு காசு சேர்க்கிறதுக்குள்ள, நாக்குத் தள்ளிடும் நமக்கு. எப்பாடு பட்டும் அவங்க கேட்டதை வாங்கிட்டுப் போய் கொடுத்தா, 'ஐயோ... நல்லாயிருக்குனுதானே சொன்னேன். 'எனக்கு வேணும் வாங்கித் தா’னு சொன்னேனா..? ஏம்ப்பா இவ்வளவு செலவழிச்சிருக்கே...’னு ச்சும்மாகாச்சும் ஃபீலிங் காட்டிட்டு, வாங்கிக்குவாங்க. அதுவே நமக்கு ஒரு பொறந்தநாள் வரட்டும்... காலேஜுக்குப் பக்கத்துல இருக்குற கிஃப்ட் ஷாப்ல 20 ரூபாய்க்கு கி.மு. காலத்து 'சைனா கிளே’ பொம்மை வாங்கிக் கொடுப்பாங்க. இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க யாருமே இல்லையா..? எனக்கு அழுகை அழுகையா வருது...''னு தேம்பினார் விஷ்வந்த்.

''ஹாஸ்டல் பசங்க பலரும்... எக்ஸாம் ஃபீஸ், டிரான்ஸ்போர்டேஷன் ஃபீஸ், அப்படி... இப்படி...னு இங்கிலீஷ் தெரியாத அப்பாகிட்ட இருந்து ஆட்டய போட்டு, வெட்டியா செலவு பண்ணி, கல்லா காலியானதும், அரியர் ஃபீஸ் கட்ட எங்ககிட்டதானே..?''னு நித்யா இழுக்க,

''தாய்க்குலமே யூ ஆர் கிரேட்!''னு சட்டுனு பசங்க டீம் சரண்டர்!

- க.அருண்குமார்

படங்கள்: செ.சிவபாலன்