Published:Updated:

‘ஜீன்ஸ் போட்டாலே திமிர் பிடிச்சவளா?!’

‘ஜீன்ஸ் போட்டாலே திமிர் பிடிச்சவளா?!’

‘ஜீன்ஸ் போட்டாலே திமிர் பிடிச்சவளா?!’

‘ஜீன்ஸ் போட்டாலே திமிர் பிடிச்சவளா?!’

Published:Updated:
##~##

''நீங்க எதிர்பார்க்கிற சுதந்திரம் என்ன... அது உங்களுக்கு கிடைக்குதா... எது உங்களுக்கு/உங்க சுதந்திரத்துக்கு தடையா இருக்கு..?’'

கோட் - சூட் போடாத 'நீயா... நானா?’ கோபிநாத் ஆகி, பசங்கள இந்தப் பக்கமும், பொண்ணுங்கள அந்தப் பக்கமும் வெச்சு, காம்பியரிங்கை ஆரம்பிச் சாச்சு... சென்னையிலிருக்கும் 'மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்'ல! விக்னேஷ், ஆல்வின், டெரிக், அனிதா, சிவரஞ்சனி, ஷாலினி, அமர், ஹெப்சிபா, கனிமொழி... இவங்கதான், இன்னிக்கு நமக்கு சிக்கின 'போராட்டக்காரர்கள்’!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காதல், ஃப்ரெண்ட்ஷிப், ஃபேஸ்புக், ஜாலி, கலகலப்பு இப்படி ஏதாச்சும் தலைப்பைக் கொடுப்பீங்கனு பார்த்தா, இப்படி ஒரு டாபிக்கா?''னு ஆரம்பத்திலேயே நவநாகரிக இளைஞனுக்கான கேள்வியை விக்னேஷ் கேட்க,

''இல்லடா! நீ சொன்ன இந்த விஷயங்கள்ல உன் சுதந்திரம் எப்படி இருக்குங்கறதுதான் டாபிக்! என்ன கரெக்ட்டா?''னு புரிய வெச்சாங்க கனிமொழி.

''நான் ஜர்னலிசம் செகண்ட் இயர் படிக்கிறேன். எனக்குப் பிடிச்ச இந்த கோர்ஸை எடுக்கக்கூட சுதந்திரம் இல்ல. 'இன்ஜீனியரிங் எடு’, 'மெடிக்கல் எடு’னு எல்லாரும் படுத்த... அப்பா, அம்மாவை சமாதானம் செஞ்சு இந்த கோர்ஸை எடுக்க நான் பட்ட போராட்டம்... காந்தி, நேரு எல்லாம் சுதந்திரம் வாங்க பட்ட கஷ்டத்தையும் மிஞ்சிடும்!''னு சிவரஞ்சனி சொல்ல,

''இன்னும் எத்தனை பேர், உன் அளவுக்குக்கூட சுதந்திரம் கிடைக்காம, இஷ்டம் இல்லாத படிப்பை படிக்கறாங்கனு தெரியுமா? அதுல நானும் ஒருத்தன். ப்ளஸ் டூ முடிச்சப்போ, ஜர்னலிசம் படிக்கத்தான் ஆசைப்பட்டேன். வீட்டுல இன்ஜீனியரிங்தான்னு சொல்லிட்டாங்க. அப்ளிகேஷன் ஃபார்மை கிழிச்சுப் போடுறதுனு சில பல தீவிரவாத நடவடிக்கைகளையும்... அகிம்சை வழி நடவடிக்கையா... கெஞ்சிக்கூத்தாடியும் பார்த்துட்டேன். வேற வழியே இல்லாம இன்ஜினீயரிங் சேர்ந்தேன், படிச்சேன், பாஸ் பண்ணினேன். வேலையும் கிடைச்சுது. ஆனாலும் மனசு ஏத்துக்காததால, என் விருப்பப்படி இப்ப ஜர்னலிசம் படிக்கிறேன். இந்த வாய்ப்பு எனக்கு முன்னமே கிடைச்சு இருந்தா... இந்நேரம் என் ஃபீல்டுல நான் பெரிய ஆளா இருந்திருப்பேன்''னு எல்லார் கண்ணுலயும் அழுகாச்சி வர்ற அளவுக்கு உருக வெச்சார் அமர்.

‘ஜீன்ஸ் போட்டாலே திமிர் பிடிச்சவளா?!’

''இப்பவும் நீங்க பெரியாளுதான் பாஸு... ஏன்னா, நம்ம கேங்லயே நீங்கதான் மூத்த மூதாதையர்!''னு அநியாயத்துக்கு வாரிவிட்டாங்க ஹெப்சிகா.

''மொத்தத்துல, ஸ்கூல் முடிச்சதும் தங்களோட கேரியரை தாங்களே தேர்வு செய்ய பசங்களுக்கு சுதந்திரம் வேணும்''னு சிவரஞ்சனி குரல் கொடுக்க,

''இதை நான் எதிர்க்கிறேன். தனக்கான எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கிற பக்குவம் பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்ச பசங்ககிட்ட இருக்கும்னு முழுமையா நம்ப முடியாது. அதனால, பெற்றோர்கிட்ட ஒப்படைக்கிறதே சரி''னு எதிர்குரல் கொடுத்த ஷாலினி,

''நான் சத்தீஸ்கர் பொண்ணு. என்னைப் பொறுத்தவரைக்கும், சுதந்திரம் இப்போ அவசரத் தேவையா இருக்கறது, பொண்ணுங்களோட ஆடை விஷயத்துலதான். ஜீன்ஸ் போட்டாலே அவ நல்ல பொண்ணு இல்ல, திமிர் பிடிச்சவனு இங்க ஒரு தப்பான அபிப்ராயம் இருக்கு. என்ன கொடுமை இது? வசதிக்கு, விருப்பத்துக்கு டிரெஸ் பண்ற சுதந்திரம் இங்க எப்போதான் கிடைக்கும்?''னு ஹிந்தியிலயும், இங்கிலீஷ்லயும் சூடானாங்க.

‘ஜீன்ஸ் போட்டாலே திமிர் பிடிச்சவளா?!’

''நைட்டு அவுட்டிங் போறது, பீச் போறது,   பைக்ல சுத்துறதுன்னு சுதந்திரமா இருக்க முடிய லீங்க. அட, பசங்க நாங்க கூட்டமா போறதைத்தான் சொல்றேன். ரவுடிங்க, வழிப்பறி கொள்ளையர்கள்னு இன்னும் சென்னையில இருக்கறாங்க. அவனுங் களை எல்லாம் விட்டுட்டு, படிக்கிற எங்களை பிடிச்சு, 'ஊதிக் காட்டு, எந்த ஏரியா?’னு இம்சை பண்றாங்க போலீஸ். இதிலிருந்து சுதந்திரம் வேணும் பாஸ்''னு கோரிக்கை வெச்சார் டெரிக்.

''ஊத்திக்கிட்டு வராம இருந்தா... ஊதிக்காட்ட பயம் வராது’'னு அனிதா எடுத்துவிட...

''புதிய தத்துவம் பத்தாயிரத்து ஒண்ணு''னு கோராஸானங்க அத்தனை பாய்ஸும்!

''ஜர்னலிசம் படிக்கிற எனக்கு, வீடியோ ஜாக்கி ஆகணும்னு ஆசை. 'என்னது... பொம்பளப் புள்ள டி.வி-யிலயா?’னு சொந்தங்கள் எல்லாம் 'கருத்து’ சொல்ல, வீட்டுலயும் ரொம்ப யோசிச்சாங்க. அப்புறம் என் மேல நம்பிக்கை வெச்சு சுதந்திரம் கொடுத்தாங்க. இப்போ நான் 'லக்ஷ்மன் ஸ்ருதி’யில பாடுறேன். வீ.ஜே ஆக முயற்சி பண்ணிட்டு இருக்கேன். வீட்டுல நமக்கான சப்போர்ட் கிடைச்சா தான், நினைச்ச இலக்கை தளராம தொட முடியும். ஆக, பெற்றோர்களே... தங்களோட லட்சியத்தை அடைய காந்தியா, நேருவா போராடிட்டு இருக்கிற உங்க பிள்ளைங்களுக்கு சுதந்திரம் கொடுங்கப்பா!''னு வேண்டுகோள் வெச்சு முடிச்சாங்க கனிமொழி.

- மோ.கிஷோர்குமார், அ.பார்வதி

படங்கள்: ப.சரவணகுமார்