Published:Updated:

'பாட்டியாகுற வரைக்கும் பத்திரமா வெச்சுக்குவேன்!’

'பாட்டியாகுற வரைக்கும் பத்திரமா வெச்சுக்குவேன்!’

'பாட்டியாகுற வரைக்கும் பத்திரமா வெச்சுக்குவேன்!’

'பாட்டியாகுற வரைக்கும் பத்திரமா வெச்சுக்குவேன்!’

Published:Updated:
##~##

கிஃப்ட் ஷாப்கள் திறக்கப்படுறதும், கிரீட்டிங் கார்டுகள் தயாரிக்கப்படுறதும் இளசுகளை நம்பித்தானே..?! அதுவும் தோழிகளுக்கு இடையில் பரிமாறப்படுற பரிசுகளும், கார்டுகளும் அவங்களைப் பொறுத்தவரைக்கும் குட்டி குட்டி பொக்கிஷங்கள்தான்.

''அப்படி உங்க தோழி கொடுத்து, நீங்க பாதுகாத்துட்டு வர்ற பொக்கிஷ பரிசைப் பத்தி கொஞ்சம் ரீவைண்ட் பண்ணுங்களேன்!''னு மதுரை, லேடி டோக் கல்லூரி மாணவிகள் சிலர்கிட்ட கேட்டோம். நினைவலைகளில் நீந்த ஆரம்பிச்சாங்க பொண்ணுங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அப்போ நான் பத்தாவது படிச்சுட்டு இருந்தேன். என் ஃப்ரெண்ட்ஸ் என்கூட சண்டை போட்டு, தனிமைப்படுத்தி, அழ வெச்சுட்டாங்க. அடுத்த நாள் என் பிறந்தநாள். சாக்லேட் கொடுக்கலாமா, வேணாமானு குழப்பமா, சோகமா இருந்தேன். திடீர்னு என்னோட மொத்த ஃப்ரெண்ட்ஸ் பட்டாளமும் சேர்ந்து கேக் வாங்கிட்டு வந்து என்னை வெட்ட வெச்சு, கிளாஸையே கலவரமாக்கிட்டாங்க. 'இந்த சர்ப்ரைஸுக்காகத்தான் ச்சும்மா லுல்லலாயிக்கு நேத்து உங்கூட சண்டை போட்டோம்!’னு விளக்கம் வேற கொடுத்தாங்க. என் கிளாஸ் ஃப்ரெண்ட் அனிதாவை நான் கோபமா, 'யூ டூ புரூட்டஸ்..?’னு அடிக்கப்போக, அப்போ எனக்கு அவ கொடுத்த கிரீட்டிங் கார்டுதான் இது. நான் பாட்டியாகுற வரைக்கும் பத்திரமா வெச்சுக்குவேன்!''னு ஃபீல் ஆனாங்க தீபிகா.

'பாட்டியாகுற வரைக்கும் பத்திரமா வெச்சுக்குவேன்!’

கையில ஒரு 'ஸ்மைலி’ பந்தோட கதை சொல்ல ரெடியா இருந்தாங்க செபாட்டினி. அந்த பந்துல நாலு பெயர்கள் எழுதியிருக்க, ''யெஸ்... நாங்க ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரு...''னு பந்தோட வரலாறு சொல்ல ஆரம்பிச்சவங்க,

''ஸ்கூல் முடிச்சு நாங்க பிரியற நேரம் வந்தப்போ, எங்க நட்போட ஞாபகமா ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒரே மாதிரி ஒரு நினைவுச் சின்னம் இருக்கணும்னு நினைச்சோம். எல்லாருக்குமே ஸ்மைலி பால்னா ரொம்பப் பிடிக்கும். அதனால, நாலு ஸ்மைலி பால்ஸ் வாங்கி, ஒவ்வொண்ணுலயும் நாலு பேரும் கையெழுத்துப் போட்டு, எடுத்துக்கிட்டோம். இப்போ அவசரமா வார்ட்ரோப்ல ஏதாச்சும் தேடும்போது இந்த பால் கைகளில் கிடைக்கறப்போ, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே... நெஞ்சிலே! மிஸ் யூ கேர்ள்ஸ்!''னு முடிச்சாங்க செபாட்டினி.

ஒரு சின்ன கண்ணாடி குடுவையை கையில் வெச்சிருந்த ராகவி, ''இது என் வைஷாலி கொடுத்தது!''னு தன் பங்குக்கு ரீவைண்ட் பட்டன் அழுத்தினாங்க... ''வாழ்க்கையில எனக்கு கிடைச்ச முதல் தோழி, வைஷாலி. ரெண்டு பேரும் எல்.கே.ஜி, யு.கே.ஜி சேர்ந்து படிச்சோம். அப்புறம் ரெண்டு பேரும் வேற வேற ஸ்கூல் போயிட்டதால, பிரிஞ்சுட்டோம். பத்து வருஷத்துக்கு அப்புறம் மறுபடியும் ஒருத்தரை ஒருத்தி பார்த்துக்கிட்டப்போ... அந்த சந்தோஷத்தைக் கொண்டாட நாள் முழுக்க 'பிளாக் தண்டர்’ல செம ஆட்டம் போட்டோம். அப்போ அவ கொடுத்த கிஃப்ட்தான், இந்த கண்ணாடிக் குடுவை. மறுபடியும் எப்போ சந்திக்கப் போறேனோ''னு குடுவைக்குள்ள நினைவுகளைத் தேடினாங்க ராகவி.

''என்னோட கிஃப்டை ஒளிச்சு வெச்சுட்டு, ஏதோ சி.பி.ஐ ரேஞ்சுக்கு அதைத் தேடி என் ஃப்ரெண்ட் என்னை அலைய வெச்ச கதை தெரியுமா..?''னு ஆரம்பிச்ச திவ்யா,

''என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் இந்துவும் நானும் என் பிறந்தநாளன்னிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே எனக்கான கிஃப்டை ஒரு இடத்துல ஒளிச்சு வெச்சு, அந்த இடத்துக்கான 'க்ளூ’வை துண்டு சீட்டுகள்ல எழுதி வெச்சு, கோயிலையே சுத்த வெச்சுனு... என்னை அலையவிட்டு அப்பளம் ஆக்கிட்டா. ஆனாலும்... அந்த கிஃப்ட்-ஐ மட்டுமில்ல... துண்டுச் சீட்டுகளையும் பத்திரமா வெச்சிருக்கேன்!''னு பரவசமானாங்க திவ்யா.

கேத்ரினோட கிஃப்ட் கதை, இன்னொரு சுவாரசியம். ''வாலிபால் டீம் சீனியர் ரத்தீஷ் என் பிறந்தநாள் அன்னிக்கு ஒரு கிஃப்ட் கொடுத்துட்டு, 'ஆனா, நைட் 12 மணிக்குதான் பிரிக்கணும்’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. எப்போடா 12 மணி வரும்னு காத்திருந்து காத்திருந்து, மண்டைக்குள்ள மாவாட்ட ஆரம்பிச்சிடுச்சு. சரியா 11.59-க்கு ரத்தீஷ் அவங்க குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வந்து, அந்த பரிசை அவங்களே பிரிச்சுக் கொடுத்தாங்க. அந்த நொடியையும், கிஃப்ட்டையும் மறக்கவே முடியாது!''னு த்ரில்லானாங்க கேத்ரின்.

''நட்புக்குள்ள பரிசுகள் இருக்கட்டும்... நட்பே கடவுள் கொடுத்த பரிசுதான்!''னு பஞ்ச் சொல்லி பொண்ணுங்க முடிச்சு வைக்க, ஆஹாஹா!

- லோ.இந்து   படங்கள்: பா.காளிமுத்து