Published:Updated:

டிரெஸ் கோட்... என்ன கொடுமை சார் இது?!

அவள் டீன்ஸ்

டிரெஸ் கோட்... என்ன கொடுமை சார் இது?!

அவள் டீன்ஸ்

Published:Updated:
##~##

லெகீங்ஸ், குர்தி, ஜீன்ஸ், ஷர்ட், ஸ்கர்ட்... கேர்ள்ஸுக்கான காஸ்ட்யூம் தளம் ரொம்ப பெரிசு. ஆனா, 'டிரெஸ் கோட்’ என்ற பெயர்ல சில கல்லூரிகள்ல 'சுடிதார் மட்டுமே’னு ஸ்ட்ரிக்டா போர்டு மாட்டிவிட... பாதிக்கப்படுற பெண்கள் எத்தனையோ பேர்! ஆனாலும்கூட மனம் தளராம, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா தங்களை வெளியில காட்டிக்கறதுக்காக ஓயாது பாடுபடுற மாணவிகள் சங்கம், சென்னையில் ரொம்ப பெரிசு. அதில் சில முக்கிய தலைகளைப் பிடிச்சோம்...  'டிரெஸ் கோட் கட்டுப்பாட்டிலும் கலர்ஃபுல்லாக இருப்பது எப்படி?’னு அனுபவங்களைப் பேச வைக்க!

ஸ்ரீமதி: தினமும் சுடிதான்னாலும், காட்டன், கிரஷ்டு, சிந்தடிக், சில்க் காட்டன்னு எல்லா வகை மெட்டீரியல்களிலும் உடுத்துவேன். அதோட, நெக் டிசைன், ஸ்லீவ், கட்னு என் டெய்லரை பாடாய்ப்படுத்தி, விதவிதமான டிசைன்கள்ல சுடி தைச்சு வாங்கி, கலக்கலா காலேஜுக்குப் போட்டுட்டுப் போடுவேன். கம்மல்ல இருந்து செப்பல் வரை டிரெஸ்ஸுக்கு மேட்சா போடணும்கிற கொள்கையில் ரொம்பவே உறுதியா இருக்கேன். இந்த ஆர்வமெல்லாம்தான் 'டிரெஸ் கோட்’ நிபந்தனை, என்னை டல் ஆகாம பார்த்துக்குது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கீதா: அழகா உடுத்திட்டுப் போனா... அந்த நாள் முழுக்க சந்தோஷமா இருக்கும். அதனால, டிரெஸ் சென்ஸ்ங்கறதை தன்னம்பிக்கை தரும் விஷயமா பார்க்கிறேன். வழக்கமா தெரியறதைத் தவிர்க்க, தாறுமாறான கலர் காம்பினேஷன்ல டிரெஸ் எடுப்பேன். ஒரே டிரெஸ்ஸை குறிப்பிட்ட நாட்களுக்குள்ள திரும்ப போடாம தவிர்ப்பேன். சொல்லப் போனா, ஒரே கலர்கூட ஒரு வாரத்துக்குள்ள ரிபீட் ஆகாம கவனமா இருப்பேன். 'உன் டிரெஸ் சூப்பர் சங்கீதா’னு எனக்கு நானே சொல்லிக்கிட்டாலும், 'டிரெஸ் கோட்’ங்கற கடிவாளம் இல்லாத சில காலேஜ் பொண்ணுங்க ஜீன்ஸ், ஸ்கர்ட்னு போட்டுட்டுப் போறதைப் பார்க்கும்போது... காண்டாகுது பாஸ்!

டிரெஸ் கோட்... என்ன கொடுமை சார் இது?!

நிவேதிதா: காலேஜ் அப்ளிகேஷன் ஃபார்ம்ல 'டிரெஸ் கோட்’ பத்தி பார்த்ததுமே, 'சரி விடு நிவேதிதா... ஷாப்பிங், அவுட்டிங்னு வெளிய போகும்போது விருப்பம்போல கலக்கலா டிரெஸ் பண்ணிட்டுப் போகலாம்’னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன். ஆனா... நாளாக ஆக, சுடிதாரே என்னோட ஃபேவரைட் டிரெஸ் ஆயிடுச்சு. குறிப்பா... பட்டியாலா, குர்த்தி. வேறெந்த உடையையும்விட இதைத்தான் ரொம்ப கம்ஃபர்டபிளா உணர்றேன். அப்புறம்... 'ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’னு என் மைண்ட் வாய்ஸை நீங்க கேட்ச் பண்ணிட்டீங்கனா... யூ ஆர் கிரேட்!

டிரெஸ் கோட்... என்ன கொடுமை சார் இது?!

ஸ்ரேயா: எனக்கு பிடிச்சது ஜீன்ஸ், டி-ஷர்ட், குர்திதான். ஆனா... எல்லாம் வாட்ரோப்ல தூங்குது. சுடிதார் எடுத்து எடுத்து சலிச்சுப் போச்சு. டிகிரி முடிச்ச பிறகாவது... விடுதலை கிடைக்கும்னு காத்திட்டு இருக்கேன். ஆனா, வேலைக்குப் போற இடத்திலயும் 'டிரெஸ் கோட்’ வில்லன் நமக்காக வெயிட் பண்ணலாம்னு தோழிகள் பயமுறுத்துறாங்க. என்ன கொடுமை சார் இது?!

ஆஷா: 'டிரெஸ் கோட்’ கட்டுப்பாடு என்னை டிஸ்டர்ப் பண்ணிடாம இருக்க, முதல் வருஷம் பார்த்துப் பார்த்து டிரெஸ் பண்ணினேன். ஆனா, அசைன்மென்ட், புராஜெக்ட்னு படிப்புச் சுமை ஏற ஏற, அதுக்கெல்லாம் நேரம் குறைஞ்சுடுச்சு. பெருசா அக்கறை எடுத்துக்காமதான் டிரெஸ், மேக்கப் பண்ணிட்டு போறேன். என்னிக்காச்சும் காலேஜ் முடிஞ்ச கையோட சாயங்காலம் ஃப்ரெண்ட்ஸோட அவுட்டிங் போற பிளான் இருந்தா, அன்னிக்கு மட்டும் கொஞ்சம் மெனக்கெட்டு டிரெஸ் பண்ணிட்டு வர்றேன்.

ஸ்ம்ருதி: எங்க கல்லூரியில் சல்வார் மட்டும்தான் 'டிரெஸ் கோட்’. ஆரம்பத்துல வேண்டா வெறுப்பாதான் போட்டுட்டு போனேன். ஆனா, இப்ப இதுலே வர்ற ஏகப்பட்ட டிசைன்களையும், வெரைட்டியையும் போட்ட பிறகு பேன்ட் - ஷர்ட் போடுற ஆசையே போச்சு! அதனால சுடியையே விதவிதமா மிக்ஸ் அண்ட் மேட்ச் பண்ணி போட்டுட்டு கலக்கறேன்!

அடப் போங்க பாஸ்!

- கட்டுரை, படங்கள்: உ.கு.சங்கவி