Published:Updated:

சிம்போஸியமும் சேலைகளும்!

சிம்போஸியமும் சேலைகளும்!

சிம்போஸியமும் சேலைகளும்!

சிம்போஸியமும் சேலைகளும்!

Published:Updated:
##~##

பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு ஒருமுறை நடந்தேறும் 'சிம்போஸியம்’ எனப்படும் தொழில்நுட்பக் கருத்தரங்குகள், முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கு மாணவிகள் தயாராகும் 'கலை’யே தனி.

'பிளேஸ்மென்ட் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி, டெக்னிகல் இன்டர்வியூவை எதிர்கொள்வது எப்படி, வெல்டிங் டெக்னாலஜி எப்படி?’ என்பது போன்ற 'படிப்ஸ்’ விஷயங்களைவிட, 'சிம்போஸியம் தினத்தன்று என்ன புடவை கட்டலாம்?’ என்பதுதான் அவர்களின் ஆகப்பெரிய ஆலோசனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி மாணவிகளிடம், 'சிம்போஸியத்துக்கு சேலை எடுப்பது பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக!’ என்றோம். லிண்டா, ஹேமா, அர்ச்சனா, லாவண்யா, வெண்ணிலா, சாந்தினி ஆறு பேரும், அதிரடியாக ரெடி!

''முதல்ல, 'சிம்போஸியத்துக்கு எதுக்கு சேலை கட்டணும்..?’னு உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். இருக்கு... காரணம் இருக்கு. புடவை நம்ம பாரம்பரிய உடைங்கறதும் ஒரு காரணம். அன்னிக்குதான் எல்லா காலேஜ் பசங்களும் எங்க காலேஜுக்கு வருவாங்க என்பது உண்மையான காரணம்!'' என்ற கேர்ள்ஸ் 'கபகப'வென சிரித்தனர் (ம்... உண்மைய பேசின நீங்க எல்லாம் நல்லா வருவீங்க பாஸ்)!

சிம்போஸியமும் சேலைகளும்!

''சிம்போஸியம்னா... ஒரு மாசத்துக்கு முன்ன இருந்தே, கிளாஸ்ல எல்லாரும் ஒரே மாதிரி 'குரூப் ஸாரி’ கட்டுறது பத்தி ஆலோசனையை ஆரம்பிச்சுடுவோம். என்ன புடவை, என்ன கலர், என்ன மாடல் பிளவுஸ், மேட்சிங் ஆக்சஸரிஸ்னு... அது ஒரு கடல் டாபிக்!'' என்று ஹேமா குஷியாக,

''புடவை எடுக்க நாங்க பர்சேஸுக்கு கிளம்புற வைபவம் சூப்பரா இருக்கும். முதல்ல எல்லாரும் சேர்ந்து பேசி பட்ஜெட் போட்டு, வீட்டுல கறந்துட்டு, தி.நகர் போய் இறங்குவோம். போத்தீஸ், ஆர்.எம்.கே.வி, சென்னை சில்க்ஸ்னு ஒரு கடையை விடறது இல்ல. அங்க எதுவும் செட் ஆகலைனா, சளைக்காம ஒரு ஜூஸை குடிச்சுட்டு ஈ.ஏ, ஃபீனிக்ஸ்னு மால் மாலா ஏறி இறங்குவோம். ஒருவழியா புடவை செலக்ஷன் முடிஞ்சுடும்''னு லாவண்யா சொல்ல, அடுத்த எபிசோடை ஆரம்பித்த சாந்தினி,

''பிளவுஸ் யார்கிட்ட தைக்கறது, என்ன மாடல்ல தைக்கறதுனு அடுத்து ஒரு குட்டி மாநாடு நடத்தி முடிவெடுப்போம். குட்டையா இருக்கறவங்களுக்கு இந்த நெக், ஒல்லியா இருக்கறவங்களுக்கு இந்த ஸ்லீவ்னு நாங்க எல்லோருமே பரபர ஃபேஷன் டிசைனர்களாகி விவாதிக்கிற அழகை நீங்க பார்க்கணுமே... அடடா!'' என உருகித் தள்ளினார்.

சிம்போஸியமும் சேலைகளும்!

''பிளவுஸ் தைச்சு வந்ததும், அதை அப்படியே போட்டுக்கிட்டா பொண்ணுங்களுக்கு லட்சணமா இருக்குமா..? 'ரெண்டு இன்ச் பிடிச்சு தைங்க’, 'ஸ்லீவ்ஸை கொஞ்சம் கம்மி பண்ணுங்க’, 'நெக்ல டிசைன் வொர்க் போடுங்க’னு டெய்லர்கிட்ட ஆயிரம் ஆல்டரேஷன்கள் சொல்லி தைச்சு போட்டாதான், கேர்ள்ஸுக்கு அழகு!'' என்று இலக்கணம் சொன்னார் லிண்டா.

''அப்புறம்...'' என்று வெண்ணிலா ஆரம்பிக்க,

''இன்னும் முடியலையா..?'’ என்று கண்ணைக் கட்டியது நமக்கு.

''எப்படி முடியும்..? இன்னும் அக்சஸரீஸ் வாங்கலியே..? ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார்னு கால் வலிக்க நடந்து, பிந்தி, கம்மல், செயின், வளையல், ஹேர் கிளிப், பேண்ட்னு எல்லாம் புடவைக்கு மேட்சிங்கா வாங்கி முடிச்சுட்டு, வீட்டுக்கு ரிட்டர்ன்!'' என்றார் அர்ச்சனா.

''முக்கியமான விஷயமே இதுக்கு அப்புறம்தான் இருக்கு. 'சிம்போஸியம்’ நடக்கறதுக்கு ரெண்டு, மூணு நாள் முன்ன ஐ பிரோஸ் ட்ரிம், ஃபேஷியல், ப்ளீச்னு ஒரு பார்லர் விசிட்டும் உண்டு. அப்போதானே புடவை மட்டும் இல்லாம நாங்களும் பளிச்னு தெரிவோம்! என்ன... அப்பாவோட பர்ஸ்தான் படபடனு காலியாகும்!'' என்று லாவண்யா சொல்ல,

''அடப்பாவீங்களா..?!’' என்று நாம் அதிர்ச்சியாக,

''இதுக்கே அசந்தா எப்படி..? 'சிம்போஸியம்’ அன்னிக்கு புடவை கட்டும்போது ஸ்லிம்மா தெரியணும்ங்கிறதுக்காக ஒரு மாசமா ஜிம்ல வொர்க் அவுட் பண்றவங்களும் உண்டு தெரியுமா..?!'' என்று அடுத்த குண்டைப் போட்டார் வெண்ணிலா.

''ஒரு காலேஜ் ஃபங்ஷனுக்கே இவ்ளோ அலப்பறைன்னா... உங்க கல்யாணத்துக்கு எல்லாம் எப்படி ரெடியாவீங்க..?!'' என்று பெண்களிடம் ஒரு கேள்வியைப் போட... அட, அனைவருக்கும் வெட்கம்!

- ந.கீர்த்தனா

படங்கள்: வ.விஷ்ணு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism